»   »  தெலுங்கு சீரியலில் நடிக்கப் போகும் நீலிமாராணி

தெலுங்கு சீரியலில் நடிக்கப் போகும் நீலிமாராணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தாய்மொழியான தெலுங்கு சீரியலில் நாயகியாக நடிக்கப்போகிறார் நீலிமா ராணி... அந்த சந்தோசத்தில் சற்றே பூரிப்புடன் இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, மெட்டி ஒலி சீரியலில் தொடங்கி இப்போது தாமரை, வாணி ராணி சீரியல்களில் நடித்து வரும் நீலிமா ராணி, ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தெலுங்கு சீரியலில் நடிக்கப் போகிறார்.

சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களிலும் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து வந்த நீலிமாராணி சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

அழுகாச்சி காவியம்

அழுகாச்சி காவியம்

சீரியல்களில் தொடர்ந்து அழுகை கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்த நீலிமா ராணி சில காலம் சீரியல்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

மகாபாரதம்

மகாபாரதம்

சன்டிவியின் மகாபாரதம் தொடர் மூலம் மீண்டும் சீரியல் உலகிற்குள் வந்தார் நீலிமா ராணி. இதன் மூலம் ஏராளமான சீரியல் வாய்ப்புகள் வரத்தொடங்கின.

வாணி ராணி

வாணி ராணி

ராடான் டிவி நிறுவனத்தின் வாணி ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் டிம்பிளாக நடித்து வருகிறார். மாமியார் வாணிக்கு சரியான டஃப் கொடுக்கும் பாத்திரம்தான் நீலிமா ராணிக்கு.

தாமரை சிநேகா

தாமரை சிநேகா

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தாமரை தொடரில் கதாநாயகி சிநேகாவாக அமைதியாக நடிக்கிறார். வில்லி, வில்லன்களுடன் மல்லுக்கட்டுவதற்கே நீலிமா ராணிக்கு நேரம் சரியாக இருக்கிறது.

தெலுங்கு சீரியல்

தெலுங்கு சீரியல்

இப்போது தாலி கட்டு சுபவேளா என்ற தெலுங்கு சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தாய் மொழியான தெலுங்கு சீரியலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதில் நீலிமாவிற்கு சந்தோசமாம்.

அக்டோபரில் ஒளிபரப்பு

அக்டோபரில் ஒளிபரப்பு

காமெடியும், காதலும் கலந்த இந்த தொடருக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அக்டோபர் முதல் பிரபல தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. இதனால் தமிழ் சீரியல் படப்பிடிப்புகளுக்கு பாதிப்பு இல்லை என்கிறார் நீலிமா ராணி.

English summary
Actress Neelima rani plays lead role in Telugu serial after a long time.
Please Wait while comments are loading...