twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தால் யாருக்கு நன்மை?… அலசிய நீயா? நானா?

    By Mayura Akilan
    |

    இன்றைக்கு நாடுமுழுவதும் ஏழைமக்களுக்கு வேலையும் சம்பளமும் தரக்கூடிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டம் எனப்படும் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால் நன்மை அதிகமாக அதனால் இழப்பு அதிகமாக என்பது பற்றி இந்தவாரம் நீயா நானாவில் விவாதிக்கப்பட்டது.

    வேலைக்கு சென்ற இடத்தில் என்ன மாதிரியான அபத்தமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதைப்பற்றியும், அரசாங்கத்தின் பணம் எந்தளவிற்கு விரயமாகிறது என்பதைப்பற்றியும் ஒரு சாரார் பேசினார்கள்.

    நூறு நாள் வேலைத்திட்டத்தினால் என்னென்ன நன்மைகள், ஏழை மக்கள் எந்த அளவிற்கு சுயத்தோடு வாழ இந்த திட்டம் உதவியிருக்கிறது என்று கூறினார்கள் மற்றொரு சாரார்.

    வேலை நடக்குது ஆனா நடக்கலை

    வேலை நடக்குது ஆனா நடக்கலை

    8 மணி நேர வேலை செய்யாமல், நிர்ணயிக்கப்பட்ட வேலையை முடிக்காமல் உடனடியாக வீட்டுக்கு திரும்பிவிடுகின்றனர். அங்கே போய் கதை பேசிக்கொண்டிருக்கின்றனர் என்பது எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு.

    பொறாமை படுறாங்கப்பா

    பொறாமை படுறாங்கப்பா

    நேற்று வரை பண்ணைகளில் அடிமை வேலை பார்த்தவர்கள் இன்று அரசு வேலை பார்ப்பதைப் பார்த்து பொறாமைப் படுகின்றனர் என்றனர் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தை ஆதரிப்பவர்கள்.

    குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டது

    குடிப்பழக்கம் அதிகமாகிவிட்டது

    பெண்களும், வயதானவர்களும் கூட இந்த வேலைக்குப் போவதால் ஆண்கள் அதிக அளவில் குடிக்கு அடிமையாகிவிட்டனர் என்பது குற்றச்சாட்டு. ஆனால் அதற்கு முன்பு யாரும் குடிக்கவில்லையா? மது குடிப்பதற்கும் 100 நாள் வேலைக்கும் என்ன தொடர்பு என்பது போல் கேள்வி எழுப்பினர் மற்றொரு சாரார்.

    விவசாயம் நசிந்துவிட்டது

    விவசாயம் நசிந்துவிட்டது

    100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு சென்று நோகாமல் சம்பளம் வாங்கி பழகியவர்கள் விவசாய கூலி வேலைக்கு வர மறுக்கின்றனர். இதனால் விவசாயம் நலிவடைந்து விட்டது என்பது குற்றச்சாட்டு. அதேபோல் தொழிற்சாலைகளிலும் வேலைக்கு வர மறுக்கின்றனர் வெளிமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை வரவழைக்க வேண்டியுள்ளது என்கின்றனர் எதிர்ப்பவர்கள்.

    மதிப்பதில்லையே

    மதிப்பதில்லையே

    தொழிலாளர்களை சக மனிதர்களாக மதிக்காத காரணத்தினால்தான் அவர்கள் அடிமை வேலைக்கு வருவதில்லை. அரசாங்க வேலைக்கு செல்கின்றனர் என்றனர் ஆதரவாளர்கள். மக்களை மக்களாக மதிக்காமல் இருப்பதால்தான் அவர்கள் கவுரமான 100 நாள் வேலையைத் தேடி செல்கின்றனர். அங்கே அங்கீகாரம் கிடைக்கிறது என்றனர்.

    வீணாகும் மனித உழைப்பு

    வீணாகும் மனித உழைப்பு

    நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால் மக்கள் சோம்பேறிகளாகிவிட்டனர் என்றும், மனித உழைப்பு வீணாகிவிட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலை செய்துவிட்டுதான் ஓய்வெடுக்கின்றனர். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்பவர்கள் அவ்வப்போது ஓய்வெடுக்க வெளியே செல்வதில்லையா? அதை கண்டு கொள்ளாத சமூகம், அடித்தட்டு மக்களின் செயல்பாடுகளை மட்டும் இப்படி அம்பலப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    விளிம்புநிலை மக்களுக்கு

    விளிம்புநிலை மக்களுக்கு

    வக்கத்துப் போன பாட்டிகள், விளிம்பு நிலை மக்கள், பெண்கள் மட்டுமே இந்த வேலைக்கு செல்கின்றனர் இதனால் தொழிலோ, விவசாயமோ பாதிக்கப்படவில்லை, மக்களுக்கு நன்மைதானே தவிர தீமை ஒன்றுமில்லை என்றனர். இதில் லாப நஷ்டம் பார்க்க முடியாது என்றனர். இதனால் ஆண், பெண் பாகுபாடு தடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

    எதில்தான் ஊழலில்லை?

    எதில்தான் ஊழலில்லை?

    நாட்டில் பிறந்தநாள் சான்றிதழ் வாங்கச் செல்வதில் இருந்து இறப்பு சான்றிதழ், பட்டா, என அரசாங்க அலுவலகங்களில் அனைத்திலுமே ஊழல்தான் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால்தான் ஊழல் அதிகமாகிவிட்டது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டனர் நூறு நாள் வேலைக்கு ஆதரவாக பேசினர்.

    நாடுமுழுவதும் சம்பளம்

    நாடுமுழுவதும் சம்பளம்

    நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால் வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்றார் சிறப்பு விருந்தினர் பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கிராமப்புற பஞ்சாயத்தில் மட்டுமே செயல்படும் இந்த திட்டத்தினால் கிராம பொது சொத்துக்கள் பாதுகாக்கப்பட்ட்டுள்ளது. வெள்ள சேதம் என்பது தடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசே ஒத்துக் கொண்டுள்ளது. நாடுமுழுவதும் உள்ள ஏழை மக்களுக்காக 38000 கோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதை கணக்கு பார்க்கும் மக்கள் வெளிநாட்டு நிறுவனத்திற்கு 16 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகையாக வழங்கப்பட்டுள்ளதே அதை ஏன் கேள்வி கேட்பதில்லை என்றார்.

    வேலைக்கு கணக்கு பாக்குறாங்க!

    வேலைக்கு கணக்கு பாக்குறாங்க!

    கலெக்டர், அரசாங்க ஊழியர் ஆகியோர் பார்க்கும் வேலையின் அளவைப் பார்த்து சம்பளம் கொடுப்பதில்லை. ஆனால் ஏழை மக்கள் ஒரு நாளைக்கு 42 கன அடி மண் வெட்டி எடுத்துப் போட்டால் மட்டுமே 132 ரூபாய் கூலி என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.

    புறம்போக்கு நிலங்கள்

    புறம்போக்கு நிலங்கள்

    இந்த திட்டத்தினால் புறம்போக்கு நிலங்களும், அரசாங்க நிலமும் அடையாளம் காணப்பட்டது என்றார் சிறப்பு விருந்தினர் இமயம். மக்கள் இந்த திட்டம் மக்களை உழைக்காமல் முடக்கி வைக்கிறது. இதனால் எந்த தொழிலுக்குமே ஆட்கள் கிடைப்பதில்லை என்றார் தனியரசு எம்.எல்.ஏ. இவ்வாறு மக்களை முடக்குவதை விட அவர்களுக்கு இலவசத்தோடு இலவசமாக பணமாக கொடுத்துவிடலாம் என்றார் தனியரசு எம்.எல்.ஏ.

    கடனாளியாவதில்லை

    கடனாளியாவதில்லை

    இந்த நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தின் மூலம் மக்கள் கடனாளியாவதில் இருந்து தப்பியுள்ளனர். நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால்தான் 1லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சாதனை படைத்தனர் என்றார். மக்களின் வாழ்வாதாரம் பெருகியுள்ளது என்றும் கூறப்பட்டது.

    நிறைய தற்கொலைகள் நடந்திருக்கும்

    நிறைய தற்கொலைகள் நடந்திருக்கும்

    நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினால் நிறைய பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்றார் எழுத்தாளர். இது இலவசமல்ல, மக்களுக்கு நன்மைதான் செய்திருக்கிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

    அப்போ நடக்கிற ஊழல் சரியா?

    அப்போ நடக்கிற ஊழல் சரியா?

    இன்றைக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் மிக அதிக அளவிலான போராட்டங்கள் எல்லாமே நூறு நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் ஊழலை முன்வைத்துதான் நடைபெறுகிறது. யாருக்குமே முழுமையான சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் பெரும்பாலோனோரின் குற்றச்சாட்டு. அதைப்பற்றி யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.

    திருட்டு திருட்டுதானே?

    திருட்டு திருட்டுதானே?

    நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே நூறு நாள் வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு ஆதரவாக பேசியவர்களும் சரி, நடத்துனர் கோபிநாத்தும் சரி எதில்தான் ஊழல் இல்லை? யார்தான் வேலையில் ஒபி அடிக்கவில்லை என்பது போன்ற கேள்விகள் எழுப்பினர். 5 பைசா திருடுபோவது தப்பில்லைதான். ஆனால் இந்த திட்டத்தை பயன்படுத்தி சராசரியாக 10 கோடி பேரின் உழைப்பு கூலியில் இருந்து பல கோடி ரூபாய் பணம் திருடப்படுகிறதே அதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்?

    இந்த நிகழ்ச்சியில் நமது ஒன் இந்தியா தமிழ் இணையத்தளத்தின் சார்பில் நிருபர் ஜெயலட்சுமியும் கலந்து கொண்டு பேசினார்.

    English summary
    vijay tv debate show Neeya Naana discussion about 100 Days working scheme! is it Useful or Not?.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X