»   »  சன் டிவியில் காஞ்சனா 2... விஜய் டிவியில் பேய் விவாதம்

சன் டிவியில் காஞ்சனா 2... விஜய் டிவியில் பேய் விவாதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேய் இருக்குன்னு சொல்றாங்க... ஆனா இருக்கா இல்லையா என்பது அவரவர்களின் நம்பிக்கையை பொருத்த விசயம். பேய் படங்கள் இப்போது ஹிட் அடித்து வருகின்றன. பேய் டிரெண்ட் இப்போது விவாத நிகழ்ச்சியையும் விட்டு வைக்கவில்லை.

தமிழ் சினிமாவில் முனி, காஞ்சனா, டார்லிங், காஞ்சனா 2 என வரிசையாக பேய் படங்கள் ஹிட் அடிக்க இப்போது தி காஞ்சூரிங் 2 ஹாலிவுட் படமும் பேய் ஓட்டம் ஓடுகிறது.

டிவி சீரியல்களும் பேயை வைத்து காசு பண்ண, விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பேய் இருக்கா இல்லையா என்பதைப் பற்றிய விவாதம் நடைபெற்றது.

சன் டிவியில் காஞ்சனா 2 படம் ஒரு பக்கம் ஓட... விஜய் டிவியில் மந்திரவாதிகளும், மன நல மருத்துவர்களும் சுவாரஸ்யமாக பேயை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

பேயை ஏவுவேன்

பேயை ஏவுவேன்

விவாத நிகழ்ச்சியில் பேய் பற்றி பேசும் போது, ஒரு மந்திரவாதி ஒரு மனநல மருத்துவரின் மேல் பேயை ஏவி விடுவதாக கூறினார். ஆனால் அந்த மருத்துவர் தனக்கு பேய் பற்றிய பயம் இல்லை என்று கூறி மந்திரவாதியின் சவாலுக்கு ஒத்துக்கொண்டார்.

இருட்டு அறை

இருட்டு அறை

தனி அறைக்கு அழைத்து சென்று விளக்கு வைத்து ஏதேதோ பூஜை எல்லாம் செய்தார். விளக்கை அணைத்து விட்டு ஏதேதோ செய்தார் மந்திரவாதி. நீயா நானாவை பார்த்த பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யம் அதிகரித்தது.

பேய் வரலையே

பேய் இருக்கு என்று நிரூபித்து விட்டால் தான் வேலையை விட்டு விடுவதாக கூறினார் அந்த மருத்துவர். அதேபோல பேய் இருக்கு என்று தன்னால் நிரூபிக்க முடியாவிட்டால், பேய் ஓட்டும் வேலையை விட்டு விடுவேன் என்று கூறினார் கருஞ்சட்டை மந்திரவாதி.
ஆனால் கடைசி வரைக்கும் பேய் வரவேயில்லை.

கோபிநாத் மேல பேய்

நேற்று நடந்த விவாதங்களை வைத்து சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்துள்ளனர் டுவிட்டர்வாசிகள். வகையாக சிக்கியது வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மீம்ஸ்.

யாரை பேய் பிடிக்காது

யாரை பேய் பிடிக்காது

எந்த ராசிக்காரர்களுக்கு பேய் பிடிக்கும்? எந்த ராசிக்காரர்களுக்கு பேய் பிடிக்காது என்று ஒரு மந்திரவாதியைப் பார்த்து கேட்டு அவரை வகையாக மாட்டிவிட்டார் கோபிநாத்.

சிறிய இடைவேளை

சிறிய இடைவேளை

பேய் விவாத நிகழ்ச்சியை பார்த்தவர்கள் இரவு நேரத்திலும் லைவ் ஆக மீம்ஸ் போட்டு கலக்கி ட்ரெண்ட் செய்தனர். கடைசியில் விவாதம் சுவாரஸ்யமாகவே முடிந்தது. டிவி, கிப்ட் வவுச்சர் கொடுத்தவர்கள் மந்திரவாதி குரூப்பில் யாருக்காவது கொடுத்திருக்கலாம்.

English summary
Neeya Naana debate Psychologists Vs Exorcists on Sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil