நீ என்ன சைக்கோவா? விஜய் டிவியில் என்ன நடந்தது தெரியுமா? கதறிய பெண்!

சென்னை: தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கைக் கையில் எடுத்தது. இதையடுத்து,தெரு நாய்களை பிடித்து, கருத்தடை செய்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது நாய் வளர்ப்பவர்களை கவலையில் ஆழ்த்திய நிலையில், இதுகுறித்து விஜய் தொலைக்காட்சியில், தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் VS தெரு நாய்களுக்கு நகரத்தில் உரிமை உண்டு என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பலரும் பலவிதமான கருத்துகளையும் முன் வைத்தனர். இதில் நடிகர் படவா கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நாய்கள் வழக்கமாக வந்து செல்பவர்களை கடிக்காது, புதிதாக தன்னுடைய இடத்திற்கு யாரோ ஒருவர் வருகிறார் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த குரைக்கும் என்றார். இதையடுத்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை அம்மு, விதவிதமாக குறைத்து காட்டி, இதற்கெல்லாம் இப்படி அர்த்தம் இருகிறது என பேசினார். அதே போல மற்றொரு பெண்ணும் நாய் பற்றி
பேசியது வைரலானதைத் தொடர்ந்து அந்த பெண்ணை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர்.

Neeya Naana Gopinath Dog
Photo Credit:

நீ எல்லாம் பொம்பளையா: இதுகுறித்து நீயா நானாவில் கலந்து கொண்ட அந்த பெண், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீயா நானா நிகழ்ச்சியில் என்னை பார்த்து இருப்பீர்கள், அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பலர் என்னை நீ சைகோவா... மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நீ எல்லாம் ஒரு பொம்பளையா என பல வகையில் என்னை ட்ரோல் செய்து வருகிறீர்கள். உண்மையில் உங்களுக்கு உள்ளே என்ன நடந்தது என்றே தெரியாது. உங்களுக்கு தெரிந்தது எல்லாம் விஜய் டிவி ஒளிபரப்பிய அந்த நிகழ்ச்சி தான். நாயால் பாதிக்கப்பட்ட ஒருவர், நாய் குறுக்கே ஓடிவந்தால் விபத்து நடந்தது என்றார். அப்போது நானும் குழந்தை குறுக்கே வந்ததால், எனக்கும் இரண்டு முறை விபத்து நடந்தது என்றேன். உடனே நாயும் குழந்தையும் ஒன்றா என கத்தினார்கள். அப்போது கூட, நான் அப்படி சொல்லவரவில்லை என்று சொன்னோன். ஆனால், அந்த நிகழ்ச்சியில் என்னை பேசவே விடவில்லை. அதுமட்டுமில்லாமல், நீங்கள் பேசியது மட்டும் வெளியில் வந்தால், உங்களுக்கு கெட்டப்பெயர் ஆகும் என சொன்னார். மேலும், நீங்கள் பேசியது வராது என்று சொன்னார். ஆனால், டீஆர்பிக்காக நான் பேசியதைத்தான் ப்ரோமோவில் பயன்படுத்தி இருந்தார்கள் என வேதனையுடன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X