twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிளாட் வாழ்க்கை பிடிக்கலை…. 'நீயா? நானா?' சுவையான விவாதம்!

    By Mayura Akilan
    |

    சென்னைப் பெண்கள் தென் மாவட்டங்களுக்கு திருமணமாகிப் போய் அங்கு அவர்கள் படும் அவஸ்தையே தனிதான். அதேபோல் சொந்த ஊர் சொந்த மண்ணை மதிக்கும் ஆண்கள் தனக்கு வரும் மனைவியும் தன்னுடைய வீட்டு பாரம்பரியத்தை, மண்ணின் மரியாதையை காக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

    வேறு வேறு இனம், மதம் மாறி திருமணம் செய்தவர்களுக்கு இடையே நிறைய சிக்கல்கள் எழும். அதேபோல் தமிழ்நாட்டிலேயே வேறு வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்யும் போது பழக்க வழக்கம் தொடங்கி பாஷை தொடங்கி பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றன.

    இதே போன்று இருவேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருமண பந்தத்தில் நுழையும் போது அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதைப் பற்றி இந்த வாரம் விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியில் விவாதித்தனர்.

    பழக்க வழக்கம்

    பழக்க வழக்கம்

    திருமண நாளில் முதலில் அறிமுகம் செய்வது மாப்பிள்ளை வீட்டு பழக்க வழக்கங்களைத்தான். அடுக்களைத் தொடங்கி, பாஷைகள் வரை அந்தப் பெண்ணுக்கு மிரட்சியைத் தரக்கூடியதுதான்.

    குக்கிராமத்தில் வாழ்க்கை

    குக்கிராமத்தில் வாழ்க்கை

    கல்யாணமாகிப் போன இடத்தில் ஒரு ஹேர்ப்பின் கூட இல்லாமல் கஷ்டப்பட்டேன் என்றார் ஒரு பெண். அதேபோல் மதுரை மாவட்டத்தில் இருந்து விருதுநகர் மாவட்டத்திற்கும் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கும் திருமணமாகிப் போன பெண்கள் புகுந்த வீட்டில் தங்களின் முதல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    புதிய அனுபவம்தான்

    புதிய அனுபவம்தான்

    சொர்க்கமாகவே இருந்தாலும் எங்கஊரு மாதிரி வருமா? என்பதுதான் எல்லோருடைய மனதிலும் ஓடும் எண்ணம். வாக்கப்பட்டு போன பெண்கள். பெண் எடுத்த ஆண்கள் ஆகிய எல்லோருக்குமே புதிய புதிய அனுபவங்கள் ஏற்படுவது இயல்புதான். பாண்டிச்சேரியில் பெண் எடுத்த நபர், ஒருவர் கொசு கடிப்பதை கூட மிகைப்படுத்தி சொன்னார்.

    ஷாப்பிங் பண்ண முடியலையே

    ஷாப்பிங் பண்ண முடியலையே

    சென்னையில் இருந்து நாகர்கோவில் திருமணமாகிப் போன பெண் ஒருவர் தன்னுடைய எதிர்பார்ப்புகள் எல்லாமே பொய்யாகிப் போனது என்று சொன்னார். ஷாப்பிங் காம்ளக்ஸ் இல்லையே என்று வருத்தப்பட்டார். அதேசமயம் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு மணமாகிப் போன பெண்,எல்லோரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டனர் என்று கூறி சந்தோசப்பட்டார்.

    ப்ளாட் வாழ்க்கை பிடிக்கலை

    ப்ளாட் வாழ்க்கை பிடிக்கலை

    கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஒருவர், தங்கள் ஊரைப் போல இல்லாமல் ப்ளாட்டில் அடைந்து கொண்டதாக கூறினார். அதேபோல் சென்னையில் இருந்து கரூர், தென்காசிக்குப் போன பெண்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மூட்டைப் பூச்சி கடித்த அனுபவம் கஷ்டமானது என்றார்.

    சாப்பாடு பிரச்சினை

    சாப்பாடு பிரச்சினை

    பாஷை, பழக்க வழக்கத்தைப் போல ஒவ்வொரு ஊருக்கும் தனி ருசி, சமையலில் தனி பழக்கம் இருக்கும். இதுவும் பெண்களுக்கு கொஞ்சம் கஷ்டமானதுதான். புதிதாக பழகி, புகுந்த வீட்டினரின் சமையல் ருசியை பழகும் வரைக்கும் கொஞ்சம் கஷ்டம்தான் தொண்டைக்குள் கூட இறங்காது. அதை பெண்களும், ஆண்களும் விவரித்த விதம் நகைச்சுவையாக இருந்தது.

    செல்லச் சண்டைகள்

    செல்லச் சண்டைகள்

    எப்பொழுதுமே தன்னுடைய ஊரைப் பற்றி பெருமை பற்றி பேசும் கணவர்கள், மனைவியின் ஊரைப் பற்றி கிண்டல் செய்வார்கள். கன்னியாகுமரியை காய்ஞ்சு போன கருவாட்டு ஊர் என்று கிண்டலடிப்பார் என் கணவர் என்றார் ஒரு பெண். கிராமத்தில் இருந்து நகரத்திற்கு திருமணமாகி வந்த பெண்களுக்கு நேட்டிவிட்டி இல்லையே என்ற வருத்தமும், நகரத்தில் இருந்து கிராமத்திற்குப் போன பெண்களிடம் வரப்பட்டிக்காட்டில் வந்து சிக்கி விட்டோமோ என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது.

    என் ஊர் என் பெருமை

    என் ஊர் என் பெருமை

    இதே சமயம், நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற ஊர் ஆண்கள், தங்கள் ஊரின் பெருமையை தங்களுக்கு வரும் மனைவிகளும் காப்பாற்ற வேண்டும் என்ற வகையில் பேசினார்கள். சமைப்பதில் தொடங்கி விருந்தினர்களை கவனிப்பது வரை எங்கள் ஊர் போல வருமா என்று பேசினார் திருநெல்வேலிக்காரர்.

    எங்க ஊருக்கு தனி மணம்தான்

    எங்க ஊருக்கு தனி மணம்தான்

    ஒவ்வொரு மண்ணுக்கும் தனி மணம் இருக்கும். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு பேருந்திலோ, ரயிலிலோ செல்லும் போது தங்கள் ஊரின் மணம் எப்படி தங்களை சந்தோசப்படும் என்று கூறினார்கள். வயலும், சேற்றின் மணமும், தோப்பும், பூவின் வாசனையும் தங்களை எப்படி மகிழ்ச்சிப்படுத்தும் என்று பகிர்ந்து கொண்டனர் இருவரும்.

    பிறந்ததே விபத்துதான்

    பிறந்ததே விபத்துதான்

    நாம் பிறந்ததே ஒரு விபத்துதான். யாரும் திட்டமிட்டு இந்த ஊரில் பிறக்க வேண்டும் என்று பிறப்பதில்லை. இது எதிர்பாராத நிகழ்வுதான் என்று கூறினார் மனநல நிபுணர் ஷாலினி. ஒருவரின் பூர்வீகம் ஒரு ஊராக இருக்கும், பிறந்தது, வளர்ந்தது பிடித்துப் போய் அதைப் பற்றி பெருமையாய் பேசுகின்றனர். ஆண்களை விட பெண்கள் ஊரைப் பற்றி பேசுவதில் கவனமாக இருக்கின்றனர்.

    இன்றைய வாழ்க்கைக்கு ஏற்றது எதுவோ அதற்குத் தகுந்து நாம் மாறிவிட வேண்டும் என்றார் ஷாலினி. இந்த ஊரில் இருந்து முன்னேறத்தான் வேண்டுமே தவிர பழமையை பேசி முன்னோக்கிப் போகக் கூடாது என்று கூறினார் ஷாலினி.

    வாழ்க்கைக்கு ஏற்றதா?

    வாழ்க்கைக்கு ஏற்றதா?

    வாழும் காலத்திற்கு ஏற்ற விசயங்களை தக்க வைத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. நமக்கு நேரம் நிறைய இருக்கிறது. அதனால் பாதிப்பு எதுவும் இல்லை என்கிற பட்சத்தில் நம்முடைய கலாச்சாரத்தை பாதுகாக்க பாடுபடலாம். ஆனால் இன்றைய காலத்திற்கு எது எளிதோ அதை செய்யவேண்டும். நாடு, மொழி, மக்கள் என உணர்வு பூர்வமாக பார்ப்பதை விட, கணவன், மனைவி இருவரும் சமமாக ஒருவரின் கலாச்சாரத்தை மற்றொருவர் புரிந்து கொண்டால் சந்தோசமாக வாழலாம் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் கூறி நிகழ்ச்சியை இனிமையாக நிறைவு செய்தார் ஷாலினி.

    சென்னையை ஏன் திட்டுறாங்க

    சென்னையை ஏன் திட்டுறாங்க

    தமிழ்நாட்டின் பல ஊர்களைச் சேர்ந்தவர்களும், ஊடகங்களும் சென்னையை தொடர்ந்து திட்டுகின்றனர். அது ஏன் என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத், சென்னைக்கு வந்த பின்னர்தான் பலருக்கும் வாழ்க்கையே கிடைத்திருக்கும். இது மிகவும் நுணுக்கமான சப்ஜெக்ட் என்பதால் இதை விவாதிக்க முடியாது, கணவன் மனைவி இடையேயான கலந்துரையாடல்தான் என்று கூறி நிகழ்ச்சியில் சிறப்பாக பேசியவர்களுக்கு பரிசளித்து நிறைவு செய்தார் கோபிநாத்.

    English summary
    Neeya Naana a talk show which brings two polarized sections of society onto a single platform and encourages them to iron out their differences.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X