Don't Miss!
- News
வட இந்தியா பாணியில் தமிழகத்திலும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சாமியார்கள் மாநாடு-மதுரையில் திரளுகின்றனர்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Sports
ஒரே ஓவரில் மாறிய விதி.. ஹாசல்வுட் செய்த கடைசி நேர மேஜிக்.. ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது எப்படி?
- Finance
கோதுமை ஏற்றுமதிக்கான தடை நீக்கமா? மத்திய அமைச்சர் தகவல்
- Automobiles
ஒரே நாளில் இத்தனை பேருக்கு அபராதமா? தமிழக காவல் துறை அதிரடி... காரணம் தெரிஞ்சா இனி இந்த தப்பை பண்ண மாட்டீங்க!
- Technology
16எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ இ32எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
க்ரீன் டீயை மோர் போல குடித்த இளம்பெண்... காண்டான கோபிநாத்
சென்னை : விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி 15 ஆண்டுகளை கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியை கோபிநாத் சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். வித்தியாசமான தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நாளைய தினத்தின் நீயா நானா நிகழ்ச்சிக்கான புதிய 2 பிரமோக்கள் வெளியாகியுள்ளது.
ஜகா வாங்கிய வலிமை, ஆர்ஆர்ஆர்...கெத்து காட்டி, தில்லாக களமிறங்கும் சிறிய பட்ஜெட் படங்கள்

நீயா நானா நிகழ்ச்சி
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி 15 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கோபிநாத். இந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவிலான புகழ் வெளிச்சத்தை கொடுத்துள்ளது.

ஏராளமான ரசிகர்கள்
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது தெரிந்த விஷயம்தான். வாரம்தோறும் வித்தியாசமான தலைப்புகளில் இரண்டு தரப்பினர் விவாதிப்பது போன்ற இந்த நிகழ்ச்சியில் அனுபவமற்ற நபர்களும் சிறப்பாக பேசுவதை பார்க்க முடியும்.

கோபிநாத்தின் புகழ் வெளிச்சம்
இந்த நிகழ்ச்சியில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரே தொகுப்பாளராக கோபிநாத் செயல்பட்டு வருகிறார். இதையொட்டி விஜய் டிவி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். நிகழ்ச்சி 15 ஆண்டுகள் கடந்ததையொட்டி அவர் சில மாதங்களுக்கு முன்பு நெகிழ்ச்சிப்பதிவையும் வெளியிட்டிருந்தார்.

கோபிநாத் நெகிழ்ச்சி
நமக்கான அங்கீகாரமும் மரியாதையும் நம்முடைய இடத்திலிருந்து கிடைக்கும்போது அது தரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் நுட்பமானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நாளைய தினம் ஒளிப்பரப்பாகவுள்ள நிகழ்ச்சியின் இரண்டு பிரமோக்களை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.

நவீன ஆரோக்கிய உணவுமுறை
இதில் நவீன ஆரோக்கிய உணவுமுறையை பின்பற்றுபவர்கள் மற்றும் விமர்சிப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி கிரீன் டீயை சுவைக்க இளம் பெண் ஒருவருக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அவர் முகச்சுளிப்புடன் அதை செய்ய, அதை கோபிநாத் விமர்சிப்பதாக பிரமோ காணப்படுகிறது.

மருத்துவர் விளக்கம்
மேலும் மற்றொரு பிரமோவில் க்ரீன் டீயை விட அதிகமான ஆன்டி ஆக்சிடண்ட் காணப்படும் நமது பாரம்பரிய உணவுகளான இஞ்சி, புதினா, நெல்லிக்காய் குறித்து மருத்துவரின் விளக்கமும் சிறப்பாக காணப்படுகிறது. மொத்தத்தில் நாளைய நிகழ்ச்சி மிகவும் சிறப்பான தரமான சம்பவங்களை மக்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.