twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு முத்தம் கூட கிடைக்கலை… நீயா நானாவில் ஒரு பெண்ணின் வேதனை!

    By Mayura Akilan
    |

    Neeya Naana
    கசக்கிப் பிழியும் கார்ப்பரேட் நிறுவன பணிச்சுமையால் கணவன் மனைவி இடையே இணக்கமான நிலை மறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இது உண்மைதான் என்று கூறும் வகையில் அமைந்திருந்தது நீயா நானாவில் பேசியவர்களின் கருத்து.

    தமிழ்நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகைக்குப் பின்னர் கை நிறைய சம்பளம்... கார்... சொந்த வீடு என இளம் வயதிலேயே இன்றைக்கு பலரும் செட்டில் ஆகிவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பதனால் சமூகத்தில் என்னுடைய மதிப்பு அதிகரிக்கிறது என்பது ஒரு சிலர் கூற்று. இது வசதியாக இருக்கிறது என்று ஒரு சிலர் கருதினாலும் கார்ப்பரேட் கலாச்சாரம் சிலருக்கு புழுக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த புழுக்கம் ஏற்படுத்திய மன உளைச்சல் தாங்காமல் வேலையை விட்டவர்கள் அதிகம்.

    கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும், வேலை பார்த்து அந்த சிரமம் தாங்காமல் வேலையை விட்டவர்களும் விஜய் டிவியில் இந்த வாரம் ஞாயிறு இரவு ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர்.

    நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதியும், ஐந்து இலக்கச் சம்பவமும் ஆச்சரியமளிக்கக் கூடியதுதான். சில மாதங்களிலேயே தன்னுடைய தேவைகள் எளிதில் நிறைவேறும் என்று கூறினர் ஒரு தரப்பினர்.

    ஆனால் கார்ப்பரேட் நிறுவன வேலை என்பது புழுக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் குடும்பம், குழந்தைகளை கூட கவனிக்க முடியாது. பணத்தின் பின்னர் ஓடவேண்டியிருப்பதால் மனைவி குழந்தைகளைக்கூட மறக்கவேண்டியிருக்கிறது என்றனர் மற்றொரு தரப்பினர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஒருவர், தனக்கு மாதம் இரண்டு லட்சம் ரூபாய் தர தயாராக இருந்த கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயம் பார்ப்பதாக கூறினார்.

    அதேபோல் கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிய ஒரு தம்பதியினர் பேசியது அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், கார்ப்பரேட் நிறுவனப் பணிச்சூழல் ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக கணவரிடம் இருந்து ஒரு முத்தம் கூட பெறமுடியாது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஒரு மனைவி. இதன் காரணமாகவே அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக விவசாயத்தொழில் செய்வதாக கூறினார்.

    வொய்ட் காலர் ஜாப் என்ற கார்ப்பரேட் நிறுவன வேலையை உதறிவிட்டு விவசாயத்தை தொட்டேன். இப்போது என்னுடைய உடைகள்தான் அழுக்காகியிருக்கிறது. ஆனால் என்னுடைய மனம் வெள்ளையாக இருக்கிறது என்றார் அவர்.

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். ஆனால் விவாகரத்துக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் நிச்சயமாகின்றன என்று கார்ப்பரேட் பணியினால் குடும்பங்கள் பிளவுபடுவதைக்கூறினார் ஒருவர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிறப்பு விருந்தினர் திரு சோம. வள்ளியப்பன், கார்ப்பரேட் நிறுவனங்களினால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு என்று தெரிவித்தார். நாம் எந்த அளவிற்கு நேரத்தை பிரித்து பணி புரிகிறோம். விடுமுறையை எவ்வாறு திட்டமிட்டு செலவிடுகிறோம் என்பதைப் பொருத்து கார்ப்பரேட் நிறுவனங்களில் மகிழ்ச்சியாக பணிபுரியும் என்றும் கூறினார் அவர்.

    நிகழ்ச்சியில் பேசிய மற்றொரு சிறப்பு விருந்தினர் திருமுருகன் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஜனநாயகம் என்பது கிடையாது என்று குற்றம் சாட்டினார். அதைவிட முக்கியமான விசயம் கார்ப்பரேட் நிறுவனங்களில் மனிதநேயம் என்பதை பார்க்க முடியாது. பணியாளர்களின் சத்துக்களை உறிஞ்சிவிட்டு கடைசியில் சக்கையாக துப்பிவிடும் என்று கூறினார். அடிப்படை கோட்பாடு என்பதையும் எதிர்பார்க்க முடியாது என்றார் திருமுருகன். நிறுவனம் கார்ப்பரேட். இங்கே மனிதநேயம் கிடையாது என்றார்.

    கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல அமைப்பு இருக்கிறது. ஆனால் அதில் பணிபுரியும் மனிதர்கள்தான் அந்த அமைப்பினை உடைக்கின்றனர். இதுதான் பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது என்று கூறினார் நிகழ்ச்சி நடத்துனர் கோபிநாத்.

    எந்த பணியாக இருந்தாலும் அதில் சாதக பாதகங்கள் இருக்கத்தான் செய்யும். இரண்டையும் சமாளித்து திறம்பட பணிபுரிபவர்கள் ஒருசிலர்தான். கார்ப்பரேட் நிறுவனங்களில் கிடைக்கும் வசதிக்காக சிலர் காலம் முழுவதும் சிலர் அங்கு பணிபுரிகின்றனர். கடைசி வரைக்கும் பணத்தின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை என்று நினைப்பவர்கள் அதிலிருந்து வெளியேறிவிடுகின்றனர்.

    உங்க அனுபவம் எப்படி? நீங்க என்ன நினைக்கிறீங்க?

    English summary
    Neeya Naana a talk show which brings two polarized sections of society to a single platform and encourages them to iron out their difference.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X