twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2 குழந்தை அவசியம்.... நீயா நானாவில் அறிவுறுத்தல்!

    By Mayura Akilan
    |

    பொருளாதார சூழ்நிலை, பணிச் சுமை, தனிக்குடித்தனம், போன்ற காரணங்களினால் இன்றைக்கு குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போடுவது ஒரு புறம் நடந்து வருகிறது.

    சில குடும்பங்களில் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்வார்கள். ஒரு சிலர் மட்டுமே தங்களின் குழந்தைகளுக்கு சகோதர உறவு வேண்டும் என்ற ஆசையில் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வார்கள்.

    இன்றைய சூழ்நிலையில் ஒரு குழந்தை மட்டுமே ஏன்?, ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் என்ன நன்மைகள் என்பதைப் பற்றி இந்த வாரம் நீயா? நானா? நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது.

    நல்லா கவனிக்கலாம்

    நல்லா கவனிக்கலாம்

    ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொண்டால் அந்த குழந்தையை நன்றாக கவனிக்கலாம் என்பது ஒரு குழந்தை மட்டுமே போதும் என்பவர்களின் எண்ணம்.

    பார்க்க ஆளில்லை

    பார்க்க ஆளில்லை

    தனிக்குடித்தம், கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் சூழ்நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை வளர்ப்பது சிரமம் என்கின்றனர். சிலரோ உடல் நிலையைக் காரணமாகக் கூறினர்.

    ஒரே பையன் போதும்

    ஒரே பையன் போதும்

    சிலரோ முதல் குழந்தை ஆணாக பிறந்து விட்டது. எனவே அந்தக் குழந்தையோடு திருப்தி ஏற்பட்டு போதும் என்று விட்டு விட்டேன் என்றார் ஒரு பெண். பெரும்பாலான குடும்பங்களில் முதல் குழந்தை ஆண் என்றால் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டு விடுகிறது.

    சகோதர பாசம் வேணுமே

    சகோதர பாசம் வேணுமே

    அதே சமயம், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அவர்களை சிக்கலின்றி வளர்க்கலாம் என்றனர் இரண்டு குழந்தைகளை பெற்றவர்கள். மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா போன்ற உறவுகளை தெரிந்த குழந்தைகளுக்கு சகோதரப் பாசத்தையும் கொடுக்க முடியும் என்றனர்.

    விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

    விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை

    ஒரு குழந்தை இருந்தால் அதீத செல்லம் கொடுக்க வேண்டியிருக்கும். அடம் பிடிக்கும், அதே சமயம் இரண்டு குழந்தைகள் என்றால் அவர்களுக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வளரும் என்றனர் இரண்டு குழந்தை வேண்டும் என்பவர்கள்.

    மன அழுத்தம் வரும்

    மன அழுத்தம் வரும்

    பெற்றோர்களின் விவாதங்களைக் கேட்ட சிறப்பு விருந்தினர் ரங்கஸ்ரீ சீனிவாஸ், ஒரு குழந்தைக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்பு அதிகம் என்றார். தவிர வன்முறை உணர்வும், எண்ணமும் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகம் என்று எச்சரித்தார்.இரண்டு குழந்தையை வளர்ப்பது எளிதானது என்றும் அவர் கூறினார்.

    நாளையை யோசியுங்கள்

    நாளையை யோசியுங்கள்

    இரண்டு குழந்தை என்றால் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் ஆறுதல் பெற்றுக் கொள்ளலாம். அது சுகம், ஒரு குழந்தை மட்டுமே இருப்பவர்களுக்கு ஏக்கம் இருக்கும் என்றும் பேசியவர்கள் கூறினர்.

    செலவு அதிகம்

    செலவு அதிகம்

    இன்றைக்கு நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஒரு குழந்தையே போதும் என்று நினைக்கின்றனர். முதல்குழந்தை ஆண்குழந்தையாக பிறந்துவிட்டால் அதோடு நிறுத்திக் கொள்கின்றனர். இதனால் பெண்களின் தேவை அதிகரிக்கிறது. பெண் கிடைக்காமல் ஆண்கள் வெறிபிடித்தும் அலைவார்கள் என்றார் சிறப்பு விருந்தினர் பத்ரிநாத்.

    ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை

    ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தை

    குழந்தைகளை பெற்றுக் கொள்வது சாதாரணமான விசயமில்லை. அது மரபு ரீதியானது. விலங்குகள் இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான வகையில் தங்கள் இனத்தை பெருக்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டுமே ஒரு குழந்தையோடு சுருங்கிப் போகின்றனர். இதனால் கன்னி அறுந்துவிடும் வாய்ப்புள்ளது என்று எச்சரித்தார். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள் அவசியம் என்றார் ஆய்வாளர் மோகன்.

    வாழ மனிதர்கள் வேண்டும்

    வாழ மனிதர்கள் வேண்டும்

    பணத்திற்காகவும், பொருளாதார சூழ்நிலைக்காவும் ஒரு குழந்தை போதும் என்று நிறுத்திக் கொண்டால், மனித சமுதாயம் குறுகி நாளடைவில் முற்றிலும் அழிந்து போகும் வாய்ப்புள்ளது என்றார். 200 மாடி கட்டிடங்கள் இருந்தாலும் அதில் வாழ மனிதர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் மோகன் எச்சரித்தார்.

    மரபணுவை மாற்ற முடியும்

    மரபணுவை மாற்ற முடியும்

    அதேசமயம் மரபணு என்பது மாற்றக்கூடியதுதான். இன்றைக்கு ஒரு குழந்தை போதும் என்று நிறுத்திக் கொள்ளும் மனித இனம், தங்களுடைய தேவையை ஒட்டி இனத்தை பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றார் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி.

    2 குழந்தையாவது வேண்டுமே

    2 குழந்தையாவது வேண்டுமே

    இன்றைக்கு 100 ஆண்களுக்கு இணையாக பெண்ணின் எண்ணிக்கை குறைகிறது. நிறைய பேர் கருவிலேயே பெண் குழந்தைகளை கொலை செய்கின்றனர்.

    இந்த ஒற்றைக் குழந்தை சமுதாயத்தில் திருமண வயதில் ஆணுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல்கள் எழும். இரண்டு குழந்தைகள் இருந்தால், ஒன்றிடம் பிரச்சினை என்றால் மற்றொரு குழந்தையை வைத்து ஆறுதல் பெற்றுக் கொள்ளலாம். எனவே மனித சமுதாயத்தின் நன்மைக்காக குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள் வேண்டும் என்று கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் கோபிநாத்.

    English summary
    Vijay tv Neeya Naana discussion about one child or more than one child.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X