twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலில் வன்முறை எதற்கு? நீயா? நானா? எழுப்பிய கேள்வி

    By Mayura Akilan
    |

    காதல் பூக்கும் தருணம் அற்புதமானது... கரு மேகத்தில் பளிச்சென்று மின்னும் மின்னலைப் போல.... வசந்த கால தென்றலைப் போல.... அதிகாலை புல்லின் மீது அமர்ந்திருக்கும் பனித்துளியைப் போல காதலும் அற்புதமானது...

    இதயத்தில் சுமக்கும் காதலை உரியவரிடம் வெளிப்படுத்தும் வரை படும் பாடு பிரசவ வேதனையை விட வலி நிறைந்தது. தூங்காத இரவுகள்... பசிக்காத வயிறு.... காதலிக்கப்படுபவரைத் தவிர வேறு எதையும் சிந்திக்காத தருணங்கள் என அது ஒரு பித்துபிடித்த நிலை.

    காதல் தோன்றும் தருணத்தைப் போல காதலை வெளிப்படுத்தும் தருணம் என்பதும் அதி அற்புதமானது. தேர்வு எழுதிவிட்டு ரிசல்டுக்காக காத்திருக்கும் மாணவனைப் போல காதலி அல்லது காதலனின் பதிலுக்காக காத்திருக்கும் தருணமும் வலி நிறைந்தது. தோற்றுப் போவோம் என்றே சில காதலர்கள் தேர்வுகளை ஒத்திப் போடுவார்கள். வெற்றியோ தோல்வியோ வெளிப்படுத்திவிடுவோம் என்று சில கொட்டி விடுவார்கள்.

    இதுபோன்று காதலை வெளிப்படுத்துவது பற்றியும், எப்படி காதலை சொன்னால் பிடிக்கும் என்றும் இந்த வார ஞாயிறு இரவு நீயா நானா நிகழ்ச்சியில் விவாதம் நிகழ்ந்தது.

    காதலை சொல்ல நடுக்கமா இருக்கே?

    காதலை சொல்ல நடுக்கமா இருக்கே?

    காதலை நேரடியாக சொல்லும் போது என்ன மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் என்று இளைஞர்கள் தரப்பில் இருந்தும் பேசினார்கள். கைகள் நடுங்கும்... வாய் குளறும்... ஒருவித பயம்.... உதறல் எடுக்கும் என்றும் கூறினார்கள். நேரடியாகவோ, கவிதையாகவோ, எஸ்.எம்.எஸ், இ.மெயில் என பல வழிகளிலும் காதலை வெளிப்படுத்துவோம் என்றும் கூறினர் இளைஞர்கள்.

    கடற்கரை.. சாக்லேட்…ரோஜா

    கடற்கரை.. சாக்லேட்…ரோஜா

    அதேசமயம், காதலை எப்படி சொன்னால் பிடிக்கும் என்றும், எங்கு சொன்னால் மனதிற்கு இதமாக இருக்கும் என்று சொன்னார்கள் இளம் பெண்கள்.

    அந்தி சாயும் நேரம்... இதமான காற்று வீசும் கடற்கரை.... ஒற்றை ரோஜா... சாக்லேட்... இவற்றோடு காதலை சொன்னால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள்.

    சிரிச்ச முகத்தோட இருங்க!

    சிரிச்ச முகத்தோட இருங்க!

    காதல் பற்றியும், காதலிக்கப்படுவது பற்றியும் சினிமாவில் சீன்கள் வைக்கப்படுகின்றன. அதை அடிப்படையாக வைத்தே இது போன்று யோசிப்பதாக பெண்கள் கூறினர்.

    சிரித்த முகமா இருக்கணும்... பிரச்சினைகளை தீர்க்கத் தெரியணும், நம்மை அதிகம் கவனிக்கணும்... பாதுகாப்பு உணர்வோடு இருக்கணும்.... கொஞ்சமே கொஞ்சம் பொஸசிவ்னஸ் இருக்கணும்... இப்படி சில விசயங்கள் இருந்தால் அதுபோன்ற ஆண்களை பிடிக்கும் என்று சொன்னார்கள் பெண்கள்.

    தினமும் என்னை கவனி

    தினமும் என்னை கவனி

    என்னை மட்டுமே கவனிக்க வேண்டும் என்று நினைப்பதுதான் காதலில் இன்றைக்கு முக்கிய அம்சமாக இருக்கிறது. காதலை இப்படி சொன்னால்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை நேரடியாக நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறிவிடவேண்டும் என்று கூறினர் சிறப்பு விருந்தினர் ஜெனி.

    தன் காதலன் தன்னை மட்டுமே கவனிக்க வேண்டும்... என்பது பெண்களின் எதிர்பார்ப்பு. இதுவே பொஸசிவ்னெஸ்சாக மாறிவிடும். அது ஆபத்தானது என்றும் கூறினார் ஜெனி.

    உண்மையா இருங்க!

    உண்மையா இருங்க!

    உள்ளதை உள்ளபடி சொன்னால்தான் காதல் ஜெயிக்கும். நான் இப்படித்தான்... கடைசிவரைக்கும் இப்படித்தான் இருப்பேன்... இந்த விசயங்கள் உனக்கு பிடித்திருந்தால் நாம் காதலிக்கலாம்... சேர்ந்து வாழலாம் என்று கூறும் காதல்தான் வெற்றி பெறும் என்று கூறினார் காதலை சொதப்புவது எப்படி இயக்குநர் பாலாஜி.

    சுயநலமா இருக்காதீங்க!

    சுயநலமா இருக்காதீங்க!

    எல்லா காதலும் கல்யாணத்தில் முடிவதில்லை. சில காதல் பெற்றோர் எதிர்ப்பினால் முறிந்துவிடும். ஆனால் சில காதல்கள் தானாகவே உடைந்து போய்விடும். இதற்கு பல காரணங்கள் சொன்னார்கள் பெண்கள். பிளாக் மெயில் செய்வதும், சுயநலமாக இருப்பதும் தங்களுக்கு பிடிக்காது என்று கூறினர் பெண்கள் இதனாலேயே காதலை முறித்துக் கொண்டதாக கூறினர்.

    எனக்கு கிடைக்காத காதலி

    எனக்கு கிடைக்காத காதலி

    உங்கள் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று ஆண்களைப் பார்த்து கேள்வியை முன்வைத்தார் நிகழ்ச்சி நடத்துநனர் கோபிநாத்.

    எனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்றார் ஒருவர். என்னை விட்டு விலகுவதற்கு அவர் கூறும் காரணம் நேர்மையானதாக இருந்தால் நான் ஏற்றுக் கொள்வேன். அதே சமயம் என்னை ஏமாற்றிவிட்டு வேறொருவனை திருமணம் செய்து கொள்ள நினைத்தால் நான் விட மாட்டேன் என்றார் மற்றொருவர்.

    காதலில் வன்முறை வேண்டாமே!

    காதலில் வன்முறை வேண்டாமே!

    இந்த கேள்விக்கு பெரும்பாலோனோரின் பதில் வன்முறைத்யாகத்தான் இருந்தது. இது பார்வையாளர்களை மட்டுமல்ல கோபிநாத்திற்கும் அதிர்ச்சியளித்திருக்க வேண்டும்.

    இன்றைக்கு நாடு முழுவதும் காதலின் பெயரால் பெண்களுக்கு எதிரான வன்முறை.... ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்று வரை நேசித்த பெண்ணை கொல்ல வேண்டும்... அவளின் அழகை பொசுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத்.

    காதலின் அழகு உள்ளுக்குள் நேசிப்பதுதான் அதே காதலுக்காக வன்முறையை கையாளுவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

    English summary
    People talking about express to love feeling in Vijay TV Neeya Naana program.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X