இது மட்டும் தான் பண்ணாம இருந்தீங்க...இப்போ இதுவுமா? ...பாரதி கண்ணம்மாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்

சென்னை : ஒரு காலத்தில் விஜய் டிவி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட சீரியலாக இருந்த பாரதி கண்ணம்மா, தற்போது அதிகம் ட்ரோல் செய்யப்படும் சீரியலாக மாறி உள்ளது.

Recommended Video

Bharathi Kannamma Serial-ஐ தயவு செய்து முடிங்க ... ரசிகர்கள் வேண்டுகோள்

ஹிட்டான படங்களில் இருந்து சீன்கள் காப்பி அடித்து சீரியல்களில் அதை ரீ கிரியேட் செய்து அன்றைய எபிசோடையோ அல்லது அந்த வார எபிசோடையோ ஓட்டுவது தான் லேட்டஸ்ட் டிரெண்டாக சமீப காலங்களில் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் பாரதி கண்ணம்மா சீரியலில் கொஞ்சம் வித்தியாசமாக நாட்டில் லேட்டஸ்ட் பரபரப்பான, அதே சமயம் சென்டிமென்ட்டான விஷயம் என்ன நடக்கிறதோ அந்த விஷயம் அல்லது ஒரு படத்தின் கதையை முழுவதுமாக எடுத்து எபிசோடாக்கி வருகின்றனர்.

 படத்தையே சுட்ருக்காங்க

படத்தையே சுட்ருக்காங்க

சமீபத்தில் கூட சென்னையில் ஒரு நாள் படத்தின் கதையை எடுத்து, சிறுமி ஒருவருக்கு ஹார்ட் ஆப்பரேஷனுக்காக விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் சீன்களை வைத்து ஒரு சில எபிசோட்களை ஓட்டினார்கள். மொத்தத்தில் கதை எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாத வகையில் தான் போய் கொண்டிருக்கிறது.

வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம்

வெண்பாவிற்கு நிச்சயதார்த்தம்

ஏற்கனவே இந்த சீரியலில் டிஎன்ஏ டெஸ்ட் எப்போ தான் எடுப்பீங்க என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த சமயத்தில் லேட்டஸ்டாக வெண்பாவிற்கு ரோஹித்துடன் நிச்சயதார்த்தம் நடப்பதாக ஒரு சீன் வைத்தனர். ஓட்டலில் நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் சென்று விட்டனர். கோபத்தில் இருக்கும் வெண்பா மட்டும் தனியாக ஓட்டலிலேயே தங்குகிறார்.அந்த சமயத்தில் ரோஹித் குடித்து விட்டு அங்கு வருகிறார்.

இந்த சீன் தேவையா

இந்த சீன் தேவையா

ரோஹித்திடம் முதலில் வழக்கம் போல் கோபமாக பேசும் வெண்பா, சிறிது நேரத்திலேயே அவர் கையில் வைத்திருந்த சரக்கு பாட்டிலை வாங்கி குடிக்கிறார். பிறகு யார் அதிக ரவுண்ட் தாங்குறார்கள் என போட்டி வைத்து இருவரும் சேர்ந்து குடிக்கின்றனர். அடுத்த எபிசோடில், தனியாக சட்டை இல்லாமல் சுற்றி உதிர்ந்த பூக்கள் கிடக்க எழுந்து பார்க்கிறார் ரோஹித். இரவு என்ன நடந்து என நினைத்து பார்க்க, அவருக்கும் வெண்பாவிற்கும் ஃபர்ஸ்ட்நைட் முடிந்து விட்டது போல் காட்டுகிறார்கள். இதை சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாடுகிறார் ரோஹித்.

இதையும் காட்டிட்டீங்களா?

இதையும் காட்டிட்டீங்களா?

இந்த வீடியோவை பார்த்து விட்டு நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இது மட்டும் தான் பண்ணாம இருந்தீங்க. இப்போ இந்த சீனையும் காட்டிடீங்களா?. கதையை எப்படி நகர்த்துவது என்று தெரியவில்லை என்றால் பேசாம சீரியலை நிறுத்தி விட்டு போங்க. ஏன் இது போன்ற கண்றாவி சீன்களை வைக்கிறீர்கள். அந்த டெஸ்ட் எடுக்குறத தவிர மற்ற எல்லாத்தையும் பண்ணுறீங்கடா. தயவு செய்து சீரியலை முடிங்க.

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

வெண்பா கதை அவ்வளவு தானா? கடையில் அது வேலைக்காரியாக இருக்க போகுதுப்பா.கண்ணாம்மாவிற்கு ஹேமா பற்றிய உண்மை தெரிய பல எபிசோட்களை ஓட்டுனீர்கள். அடுத்து பாரதிக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள, பிறகு பாரதிக்கு தெரிய வைக்க, தற்போது குழந்தைகளை பிரிக்க பாரதி ஐடியா செய்து கொண்டிருப்பது போல் ஒரு கதையை ஓட்டினீர்கள். அதை கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போ சம்பந்தமே இல்லாம வெண்பா நிச்சயம் என்றீர்கள். இப்போ வேலைக்காரன் சீரியல் ஹீரோவ, ஹீரோவா வைத்து கதையை நகர்த்துறீங்க. ஒன்னு சீரியலை முடிங்க. இல்லைன்னா சீரியல் டைட்டிலை மாத்துங்க என கொந்தளித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X