Bigg Boss: மத்த ஊர் பிக் பாஸ் எல்லாம் 18+ஆ இருக்குது.. தமிழில் ஏன் இப்படினு கேட்கும் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 கடந்த வாரத்தில் இருந்து தொடங்கி வெகு சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு முன்னர் சீசன்களில் களமிறக்கப்படும் போட்டியாளர்கள் பெரும்பாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களாக இருப்பார்கள். ஆனால் இம்முறை சமூக வலைதளங்களில் அதிகம் கவனத்தை ஈர்த்த இன்ஃபுளியன்சர்களுக்கு பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது இந்த சீசனின் தொடக்கத்திலேயே ரசிகர்களுக்கு பெரிய அபிப்ராயம் இல்லாமல் உள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் இந்த சீசனை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் பலர் மற்ற மொழி பிக் பாஸ் சீசன்களுடன் தமிழ் பிக்பாஸை ஒப்பிட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதாவது மற்ற மொழி பிக்பாஸ்களில் சில நேரங்களில் போட்டியாளர்கள் மிகவும் நெருக்கமாக நடந்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, அதிகப்படியான ரொமான்ஸ் கண்டெண்ட்களை கொடுத்து வருகிறார்கள். இரண்டு போட்டியாளர்கள் அதாவது ஆண் போட்டியாளர் ஒருவரும் பெண் போட்டியாளர் ஒருவரும் நேருக்கு நேர் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டது தொடர்பான காட்சிகள் இணையத்தில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது. இது நடந்தது கன்னட பிக் பாஸில்.

Netizens Ask 18 Content In Tamil Bigg Boss 9 Like Other Language Bigg Boss

அதேபோல், இந்தி பிக்பாஸில் ஒரு ஆண் போட்டியாளரும், ஒரு பெண் போட்டியாளரும் லிப் -லாக் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இது மட்டும் இல்லாமல் அவர்கள் இருவரும் லிப்-லாக் முத்தம் கொடுத்துக் கொண்ட போது, சக போட்டியாளர்கள் நின்று கொண்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது. இணையத்தில் வேகமாக பரவியது.

ஓவர் நெருக்கம்: இப்படி இருக்கும்போது தற்போது மீண்டும் ஒரு வீடியோ இணையத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது. அதாவது ஒரு ஆண் போட்டியாளரும் பெண் போட்டியாளாரும் ஒரே பெட்டில் படுத்துக் கொண்டு, போர்வையால் தங்களை போர்த்திக் கொண்டுள்ளார்கள். இது மட்டும் இல்லாமல் இருவரும் நெருக்கமாக இருக்கவும் முயற்சிக்கிறார்கள், மாறி மாறி முத்தங்கள் கொடுத்துக் கொள்கிறார்கள் என்பது வீடியோவப் பார்த்தாலே தெரிகிறது.

இணையவாசி கமெண்ட்: இந்த வீடியோவைப் பகிர்ந்த இணைய வாசி ஒருவர், மத்த ஊர்காரன் பிக்பாஸில் எல்லாம் மஜாவா இருக்கானுங்க நமக்குனு வாச்சதெல்லாம் வாட்டர்மெலன் ஸ்டார், பலூன் அக்கா. கன்டென்ட் மாத்துடா பிக்பாஸ் தமிழ்" என்று கேப்ஷன் இட்டு இரண்டு போட்டியாளர்கள் மிகவும் நெருக்கமாக இருக்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இவரது இந்த பதிவுக்கு மற்ற இணையவாசிகளும் கமெண்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள். ஒரு இணைய வாசி, " அவனுங்க கெட்க்குறானுங்க, நீ இதே மாதிரி தேடி புடிச்சு போடு ப்ரோ" என்று கமெண்ட் போட்டுள்ளார். இந்த பதிவும் வீடியோவும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X