Don't Miss!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாங்க வாங்க.. யார் வந்தாலும் வச்சு செய்ய காத்திருக்கோம்.. பிக்பாஸ் சீசன் 5க்கு தயாராகும் நெட்டிசன்ஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரமோவை பார்த்த நெட்டிசன்கள், வச்சு செய்ய காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
மூன்றாம் உலகத்தில் இருந்தும் வெளியேறிய சிருஷ்டி டாங்கே.. காயத்ரி, இந்திரஜாவுக்கு மறு வாய்ப்பு
வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்க உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இன்னும் 2 வாரங்கள்
இதற்கான புரமோவில் பேசிய கமல் வீட்டிற்கு வருபவர்களை வாங்க வாங்க என வரவேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டு சம்பவங்கள்
அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். இதனை தொடர்ந்து நாள்தோறும் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் ஒளிபரப்படும்.

அகம் டிவி வழியே
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை அகம் டிவி வழியே சந்திப்பார். இதில் வாரம் முழுவதும் அரங்கேறும் சம்பவங்கள் குறித்து போட்டியாளர்களுடன் அலசுவார் கமல்.

பெரிய டைம் பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுத்தால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர். என்னதான் சண்டை சச்சரவு, புறணி பேசுதல், கொளுத்தி போடுதல் என இருந்தாலும் மக்களுக்கு பெரிய டைம் பாஸாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.

பிக்பாஸுக்கு தயாராகும் ரசிகர்கள்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நாள் அறிவிக்கப்பட்டதை பார்த்த நெட்டிசன்கள் புரமோ குறித்தும் நிகழ்ச்சி குறித்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் யார் வந்தாலும் சரி வச்சு செய்ய காத்திருக்கிறோம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

உங்களுக்கு ஸ்பிரே அடிப்போம்
பிக்பாஸ் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆண்டவரே!.. உங்க பில்டப்பை கண்டு, நாங்க ஏமாந்து போனால் உங்களுக்கே ஸ்பிரே அடிப்போம்! என கூறியுள்ளார்.

சீக்கிரம் முடிச்சுருவீங்களா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடடே.. அக்டோபர் 3, 6 மணிக்கா? 9.30 க்கு #SurvivorTamil பார்க்கனும் சீக்கிரம் முடிச்சிருவீங்களா? என கேட்டு கலாய்த்துள்ளார்.

பயங்கரமா இருக்கும் பர்ஃபாமன்ஸ்
மற்றொரு நெட்டிசனான இவர், நல்லவங்களா நடிக்க தான் நிறைய பேர் இருக்காங்களே... போன சீசன விட இந்த சீசன் பயங்கரமா இருக்கும் பர்ஃபாமன்ஸ் சார் என பதிவிட்டுள்ளார்.

உங்க புரமோ செம..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், புரோகிராம் நல்லா இருக்கோ இல்லையோ ஆனா உங்க புரமோ செம என பதிவிட்டுள்ளார்.

வச்சு செய்ய காத்திருக்கிறோம்
கமல் அடடே வாங்க வாங்க என வீட்டுக்குள் வருபவர்களை வரவேற்றதாக இருந்தது. இதனை பார்த்த இந்த நெட்டிசன், வாங்க வாங்க யார் வந்தாலும் வச்சு செய்ய காத்திருக்கோம்.. என கலாய்த்துள்ளார்.

சர்வைவர் கூட க்ளாஷ் ஆகாம
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஹேப்பியாகியுள்ளனர். என்னதான் சண்டை சச்சரவு, புறணி பேசுதல், கொளுத்தி போடுதல் என இருந்தாலும் மக்களுக்கு பெரிய டைம் பாஸாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது.