BB9: EVP பக்கம் போகாதீங்க.. கெட்ட நாத்தம்.. குளிக்காமல், கழிவறையில் ஒரே குவளை.. இதெல்லாம் டாஸ்கா!

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, தொடங்கிய சில நாட்களிலேயே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த சீசனில், 10 ஆண்கள், 9 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை போட்டியாளர் என மொத்தம் 20 பேர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் முதலே சண்டை, துரோகம், சிரிப்பு, நட்பு நிகழ்ச்சி சென்று கொண்டு இருக்கிறது.

Bigg Boss tamil 9 Vijaysethupathi 9
Photo Credit:

இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்குள் தண்ணீர் வீணாகாமல் இருக்க சிறப்பு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டில் பயன்படுத்தும் தண்ணீரை சேமிக்க, வெளியில் தனியாக ஒரு டேங்க் மற்றும் பைப் லைன் ஏற்பாடு செய்யப்பட்டு, தண்ணீர் வரும் நேரத்தில் ஒரு அலாரம் ஒலிக்கிறது. வெளியே இருக்கும் சிவப்பு விளக்கு எப்போது ஆன் ஆகும் என தெரியாது. அது எரிய ஆரம்பித்த பத்து விநாடிக்குள் டிரம்மை கொண்டு போய் வைத்துவிட வேண்டும் அப்படி செய்ய தவறினால், எதற்குமே தண்ணீர் கிடைக்காது. குளிக்க, துவைக்க மட்டும் பிரச்சனை இல்லை, குடிக்கிற நீரிலும் ட்விஸ்ட் வைத்தார் பிக் பாஸ். ஸ்டோர் ரூமில் இருந்து 'டக்.. டக். டக்' என்று சத்தம் வருமாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் கதவைத் திறந்தால் மட்டுமே மூன்று பாட்டில் குடிநீர் கிடைக்கும். இல்லையென்றால் அதுவும் இல்லை. இதனால், அங்கேயும் ஒருவர் குத்த வைத்து காத்திருக்க வேண்டும்.

குளிக்காமல் இருப்பது டாஸ்கா: இதனால் போட்டியாளர்கள் குடிக்க, குளிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அப்டேட்டுகளை கொடுத்து வரும் இமாத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கேலியாக ஒரு பதவினை போட்டு இருக்கிறார். அதாவது, சென்னையில் யாராவது இருக்கீங்களா... EVP பக்கத்துல போகாதீங்க.. குளிக்காமலும், தண்ணீர் இல்லாமலும் மக்கள் சுகாதாரம் இல்லாம இருக்காங்க. துர்நாற்றம் வீச ஆரம்பிச்சுடும்... குளிக்காமல், கழிவறையில் ஒரு குவளை, தண்ணி இல்லாமல் இருப்பது ஒரு டாஸ்க்கா... பிக் பாஸ் நீங்க இதை சரி செய்யணும், சுகாதாரப் பிரச்சினையில் விளையாடக்கூடாது என பதிவிட்டுள்ளார்.

தண்ணீர் தேவை: இவரின் இந்த பதிவினைப்பார்த்த இணையயவாசி ஒருவர், ஒருவருக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்வது போர் யுக்தி. இதே bb மேடையில் பேசியது கமல் தான். உணவுக்காகவும் நீருக்காகவும் bb போட்டியாளர்கள் கஷ்டப்பட கூடாது என bb யிடம் தன் சம்பளத்தை கூட விட்டு தருகிறேன் என்று சண்டை போட்டவர் கமல்ஹாசன் இங்க பலருக்கு தான் அவர் அருமை புரியாமல் போனதே என பதிவிட்டுள்ளார்.

நோய் பரவும்: மற்றொரு இணையவாசி, வீட்டுல இப்போ எவ்வளவு துர்நாற்றம் வீசுதுன்னு என்று என்னால், நினைத்துக்கூடப் பார்க்க முடியல. மக்களுக்கு யூடிஐ, இன்னும் பிற நோய்கள் வர வாய்ப்பு இருக்கு. குறிப்பாக இப்போ இன்ஃப்ளூயன்ஸா சீசன், இது என்ன மாதிரியான டாஸ்க்? பிக் பாஸ் தண்ணீர் என்பது அடிப்படை தேவை என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X