நைட் வெளியில வாராதீங்க.. நாய் போல குரைத்துகாட்டி வம்பில் சிக்கிய நடிகை..வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தெருநாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கைக் கையில் எடுத்தது. தெருக்களில் நாய் கடிக்கு ஆளாகி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உயிரிழப்பது குறித்து நீதிபதிகள் கவலை தெரிவித்தனர். டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து, கருத்தடை செய்து, காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவால் கவலை அடைந்த நடிகை சனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கதறி அழுது இருந்தார். நாய் விவகாரம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில் விஜய் தொலைக்காட்சியில், தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் VS தெரு நாய்களுக்கு நகரத்தில் உரிமை உண்டு என்கிற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பலரும் பலவிதமான கருத்துகளையும் முன் வைத்தனர். இதில் நடிகர் படவா கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பேசினார்.அப்போது, நாய்கள் வழக்கமாக வந்து செல்பவர்களை கடிக்காது, அதற்கு யார் என்ன என்பது தெரியும். ஆனால், இரவு 9 மணிக்கு மேல், புதிதாக தன்னுடைய இடத்திற்கு யாரோ ஒருவர் வருகிறார் என்றார். அவர் நல்லவரா, கெட்டவரா என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக குரைக்கும்.
நீயா நானா: இதனால்,தேவை இல்லாமல் இரவு 11 மணிக்கு இதுபோன்ற இடத்திற்கு செல்லாதீர்கள், அப்படி செல்கிறீர்கள் என்றால், அதற்கான உரிய பாதுகாப்புடன் வாருங்கள் என்று தான் சொல்கிறோம் என படவா கோபி பேசினார். இதை கேட்டு அதிர்ந்து போன கோபி, இது எல்லாம் ஒரு பதிலா, நான் எங்கு செல்ல வேண்டும், எந்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் தான் முடிவு செய்ய முடியுமே தவிர, நாய் முடிவு செய்யக்கூடாது சரியான பதிலடி கொடுத்தார்.

சிக்கிய அம்மு: இதைத்தொடர்ந்து நடுவர் கோபிநாத், நாய் சில நேரங்களில் வித்தியாச வித்தியாசமான முறையில் குரைக்கிறது அப்படி குறைப்பதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். அதற்கு நடிகை அம்மு, விதவிதமாக குறைத்து காட்டி, இதற்கெல்லாம் இப்படி அர்த்தம் இருகிறது என பேசினார். நடிகை அம்முவின் பேச்சு தற்போது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து நடிகை அம்முவை இணையவாசிகள் கண்டபடி ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு இணையவாசி ஒருவர்,ஆனியன் ரோஸ்ட்ல பேசுன இந்த பாயின்ட் இன்னைக்கு #NeeyaNaana ல எக்ஸ்போஸ் ஆகிருச்சு. நாய் மேல பாசம் எல்லாம் இல்ல. தெருநாய் கடிக்கனும்.. அத வெச்சு காசு பாக்கனும். இதுதான் NGO சல்லி நாயிங்க பிளான் எனபதிவிட்டள்ளார்.

சரியான பதில்: அதே போல மற்றொரு இணையவாசி, எல்லோரும் வாங்க அடிக்கிறதுக்கு ஆள் சிக்கி இருக்கான் என நடிகை அம்முவின் போட்டோவை போட்டு ட்ரொல் செய்துள்ளார். அதே போல, நாய்கள் மீதான Dog lovers இருக்கும் கருணை அவர்கள் இருக்கும் privilege-லிருந்து மட்டுமே வருகிறது என்பதை இன்றைய Neeya Naana சிறப்பாக தோலுரித்து விட்டது எனபதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











