பிரைவசி கேட்கக் கூடாது.. பிடிக்கலைன்னா வெளியே போ.. சர்வைவர் போட்டியாளர்களை மிரட்டுகிறாரா அர்ஜுன்?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஆரம்பமாகி அமர்களமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சேனல் தந்த அழுத்தமோ என்னவோ தெரியவில்லை திடீரென அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் அர்ஜுன் ஆக்ரோஷம் ஆகி விட்டார்.

சரண் செல்போன் பயன்படுத்தியது குறித்து கோபப்பட்டு பேசும் அர்ஜுன் அதே தப்பை செய்த விஜயலட்சுமியிடம் ஏன் தனது கோபத்தை காட்டவில்லை என்கிற கேள்வியை சர்வைவர் தமிழ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும், பெண் போட்டியாளரான ஐஸ்வர்யா கிருஷ்ணனிடம் பிரைவசி எல்லாம் கேட்கக் கூடாது பிடிக்கலைன்னா வாக் அவுட் பண்ணிடு என மிரட்டுவதெல்லாம் முறையான ஹோஸ்ட்டிங் அல்ல என்று நடிகர் அர்ஜுனுக்கு எதிரான மீம்களை போட்டு வருகின்றனர்.

முத்துப்பாண்டியான புகழேந்தி

முத்துப்பாண்டியான புகழேந்தி

விஜயலட்சுமியும் போன் யூஸ் பண்ணாங்கன்னு சரண் சொன்னதை கேட்டு "Hey Everybody! Fire Them all!" என முதல்வன் புகழேந்தி மாதிரி அர்ஜுன் சொல்வாருன்னு பார்த்தா? அதுக்கு பதிலாக கில்லி முத்துப்பாண்டி போல, "அதெல்லாம் சொல்லக் கூடாது.. ஏன் சொல்ற நீ.. அதெல்லாம் நீ சொல்லக் கூடாது" என சின்னப் பையன் சரணை அந்த மிரட்டு மிரட்டுறாரு என நெட்டிசன்கள் அர்ஜுனை விளாச ஆரம்பித்துள்ளனர்.

திடீர் நெருக்கடி

திடீர் நெருக்கடி

சர்வைவர் தமிழ் ஷோவில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் பிரபலங்கள் மற்றும் அந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் எல்லாமே டஃப் ஆக இருந்தாலும் நிகழ்ச்சியின் ரியாலிட்டி தன்மை இல்லாத நிலையில், அதற்கான ரீச் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இல்லை. பிக் பாஸ் தமிழ் சீசன் 5 ஆரம்பித்து அதகளமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஏற்பட்ட நெருக்கடி தான் அர்ஜுனின் இந்த ஆக்ரோஷத்திற்கு காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

பிரைவசி கிடையாதா

பிரைவசி கிடையாதா

மேலும், பெண் போட்டியாளரான ஐஸ்வர்யா கிருஷ்ணனிடம் பிரைவசி எல்லாம் நீங்க ஏன் கேட்கிறீங்க? நீங்க பண்ற எல்லாத்தையும் காட்டத் தானே வாங்குறீங்க துட்டு என்கிற ரீதியில் அர்ஜுன் பேசியதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். போட்டியாளர்களை அடிமைகளாக நடத்துகிறார் அர்ஜுன் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

வாக் அவுட் பண்ணுங்க

வாக் அவுட் பண்ணுங்க

மேலும், போட்டியாளர்களிடம் மிகவும் கடுமையாக அர்ஜுன் நடந்து கொள்வதாகவும், ரூல்ஸ் படி நடக்கணும், கான்ட்ராக்ட் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு தான வந்தீங்க.. பிடிக்கலைன்னா வாக் அவுட் பண்ணுங்க.. என ஒவ்வொரு முறையும் போட்டியாளர்களை ஃபோர்ஸ் பண்ணுவதும் அசிங்கப்படுத்துவதுமாக அர்ஜுன் பேசுவது முறையல்ல என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

நினைத்தது பலித்தது

நினைத்தது பலித்தது

இப்படி ஏதாவது சர்ச்சைகள் கிளம்பி சர்வைவர் தமிழ் ஷோ கொஞ்சமாவது சூடு பிடிக்காதா என எதிர்பார்த்து நகர்த்திய காய் நல்லாவே வேலை செய்துள்ளதாக சர்வைவர் தமிழ் குழு இந்நேரம் இந்த டிரெண்டிங்கை பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கும் என்றும் நினைத்தது பலித்தது என அப்படியும் நிகழ்ச்சியின் திட்டம் குறித்தும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸுக்கு வந்துடுங்க

பிக் பாஸுக்கு வந்துடுங்க

மேலும், நடிகர் அர்ஜுனின் ரசிகர்கள் ஹோஸ்ட்னா இப்படித்தான் வெறித்தனமா இருக்கணும்.. போட்டியாளர்கள் மேல் ஈவு இரக்கம் காட்டக் கூடாது. கமல் சார் போல தடவி கொடுக்காமல் கண்டிப்புடன் ஆக்‌ஷன் கிங்காக மிரட்டி விட்டீர்கள். அப்படியே அடுத்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஹோஸ்ட் பண்ண வந்துடுங்க என்ற கமெண்ட்டுகளும் அர்ஜுனுக்கு ஆதரவாக பறந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X