அங்க புடிச்சு தான் தூக்குவியா.. கமலையே ஓவர் டேக் பண்ணிட்டாரே.. கூமாப்பட்டியாரை விளாசும் இளசுகள்!

சென்னை: கூமாப்பட்டி என்ற ஊரை இன்றைக்கு உலகம் முழுவதும் அறியச் செய்துள்ளார் என்றால் அதற்கு கூமாப்பட்டி தங்கபாண்டி மிகவும் முக்கியமானவர். இவரது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ அவரையும் அவரது ஊரையும் உலகறியச் செய்துள்ளது. ஏங்க... என இழுத்தபடி சொல்லும் அவரது பாணி, அவரை பிரபலப்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவர் அண்மையில் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டார். பலரும் அவர் எப்படி உள்ளார் என்று நலம் விசாரித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இணையத்தில் அவருக்கு கொஞ்சம் நெகடிவ் கமெண்ட்களும் வந்து கொண்டுள்ளது.

அதாவது அவர் பிரபலமான பின்னர், பிரபல நகைக்கடை விளம்பரத்தில் நடித்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகை சாந்தினி பிரகாஷ் உடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பலருக்கும் பிடித்த ஜோடியாக இவர்கள் ஜோடி உள்ளது. காரணம் கூமாப்பட்டி தங்கபாண்டியின் நக்கல் நிறைந்த பேச்சும், சாந்தினி பிரகாஷின் வெகுளித்தனமும் தான். இது மட்டும் இல்லாமல் இவர்களின் ரொமான்ஸ்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்படி இருக்கையில் சிலர் கூமாப்பட்டி தங்கபாண்டி குறித்து நெகடிவ் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Netizens Slams Zee Tamil Single Pasanga Koomappatti Thangapandi Romance With Chandhini Prakash
Photo Credit:

விமர்சனம்: அதாவது சாந்தினி பிரகாஷ் உடன் அவர் ரொமான்ஸ் பாடல்களில் ஆடும்போது நெருக்கமாகவே ஆடுகிறார். அது பார்ப்பதற்கு அழகாக உள்ளது, ரசிக்கும்படியாக உள்ளது. ஆனால் சில இணையவாசிகள், கூமாப்பட்டியார் போகிற போக்கைப் பார்த்தால், கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டிகள் பெத்துட்டு தான் ஜீ தமிழ் சேனலை விட்டு வருவார் போல என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். மேலும் சிலர், அண்மையில் கூமாப்பட்டி தங்கபாண்டியும் சாந்தினி பிரகாஷும் தேவர் மகன் படத்தில் இடம்பெற்ற, பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.

ஆதரவு: இதிலும் பாடலை ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கிட, ரொமாண்டிக்காக நடித்திருந்தார்கள். இதைப் பார்த்த சில இணையவாசிகள். நீ சாந்தினி பிரகாஷை அங்க புடிச்சு தான் தூக்குவியா? கமல் ஹாசனையே கூமாப்பட்டியார் ஓரம் கட்டிவிட்டுடுவார் போலயே என்று பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ வாட்டமெலன் ஸ்டார்னு ஒருத்தர் சுத்திட்டு இருக்காரு, அவருக்கு கூமாப்பட்டியார் எவ்வளவோ பரவாயில்லை என்றும் பதிவிட்டு வருகிறார்கள். சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் பெரும்பான்மையான ரசிகர்கள் இவர்களின் ஜோடிக்கு ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் கூமாப்பட்டி தங்கபாண்டி விபத்தை எதிர்கொண்ட போது பலரும் அவர் விரைந்து குணமாகி மீண்டும் நிகழ்ச்சியில் நடிக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X