திவாகருக்கு முத்தம் கொடுத்த அரோரா.. ஆதிரை-எஃப்.ஜெ கசமுசா. முகம்சுளிக்க வைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி!

சென்னை: 20 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், முதல் வாரத்திலேயே, இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது என நந்தினி வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக இயக்குநர் பிரவீன் காந்தி குறைவான வாக்குகள் பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். இப்போது வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் எதற்கு எடுத்தாலும் சண்டை, வாக்குவாதம் செய்து வருகின்றனர்.. சண்டை ஒரு பக்கம் நடந்து கொண்டு இருக்க, வீட்டில் ஆள் ஆளுக்கு ஒருவருடன் பீச், பார்க்கில் காதலர்கள் வலம் வருவது போல வருகின்றனர். இதனால், இந்த நிகழ்ச்சிக்கு கண்டனம் எழுந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வீட்டிற்கு வந்த நாளில் இருந்த பலூன் அக்கா அரோராவுடன் சுற்றிக்கொண்டே இருந்தார். அவர் காமெடிக்காகத்தான் இப்படி செய்கிறார் என்று அனைவரும் நினைத்து இருந்தனர். ஆனால், திவாகர் செய்வதை எல்லாம் பார்த்தால் அவர் உண்மையிலே அரோராவை காதலிக்கிறாரோ என்ற எண்ணம் வருகிறது. சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருந்த அரோரோ வெளியே வராததால், கடுப்பான திவாகர் நான் உனக்காகத்தான் இங்கே வந்தேன் நீ, சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கு போய்ட்டீயே என சொல்லி வருத்தப்பட்டார்.

Bigg Boss tamil Kiss Aadhirai
Photo Credit:

முத்தம் கொடுத்த அரோரா: அப்போது சூப்பர் டீலக்ஸ் வீட்டில் இருந்த அரோரோ, வெளியில் இருந்த அனைவருக்கும் முத்தம் கொடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, திவாகர் எனக்கு முத்தம் இல்லையா என்று கேட்டு, கண்ணடி முன் வந்து நின்றார். உடனே, அவ்வளவு தானே, இந்தங்க என்று திவாகருக்கு அரோரா மிரர் முத்தம் கொடுத்தார். உடனே திவாகரும் வெளிபக்கத்தில் இருந்து முத்தம் கொடுத்தார். தற்போது இந்த முத்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே அரோரா மற்றும் திவாகரை இணையவாசிகள் ட்ரோல் செய்து வரும் நிலையில் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது. ஒருபக்கம் பலூன் அக்கா திவாகருடன் மட்டுமில்லாமல், துஷாராவுடன் மிகவும் நெருங்கி பழகி வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசுவதை பார்க்க முடிகிறது.

Bigg Boss tamil Kiss Aadhirai
Photo Credit:

கடுப்பாக இருக்கு: இப்படி பலூன் அக்கா தன்னுடைய பாணியில் சென்று கொண்டு இருக்க ஆதிரை, எஃப்ஜெயுடன் நெருங்கி பழகி வருகிறார். நேற்று ஆதிரை அமர்ந்து இருக்க அவரின் தோள்மீது கைபோட்டு இருந்த எஃப்.ஜெ திடீரென குனித்து ஆதிரையிடம் பேசினார். இருவரும் மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருந்து பேசியது பார்ப்பதற்கு வெறுவிதமாக இருந்தது. அதே போல விஜே பார்வதி, திவாகருடன் பாசமலர் சாவித்திரி, சிவாஜி கணேஷன் போல சுற்றி வருகின்றனர். இப்படி பிக் பாஸ் வீட்டில் ஆளுக்கு ஒரு ஆளுடன் சுற்றி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் நடப்பதை எல்லாம் பார்த்தால் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது என இணையவாசிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மக்களை திரட்டி பிக் பாஸ் அரங்கத்திற்கு வெளியே போராட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X