Don't Miss!
- News
"ஆபரேஷன் 111".. எடப்பாடி இறக்கிய மெகா டீம்.. நடப்பது நடக்கட்டும்.. பறந்து போன ஆர்டர்.. ஆஹா செம மோதல்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
போதும் நிறுத்துங்க...பாரதி கண்ணம்மா ப்ரோமோவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்
சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றி தங்களின் ஆர்வத்தை கூறி, இதுவரை பாராட்டி வந்த நெட்டிசன்கள், தற்போது கலாய்த்து கழுவி ஊற்ற துவங்கி விட்டனர். போதும், நிறுத்துங்க. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இதை வச்சே இழுப்பீங்க என தாறுமாறாக கேட்க துவங்கி விட்டனர்.
அரை டஜன் படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் பிரபல பாடகர்.. எல்லாம் பிக்பாஸுக்கு பிறகுதான்!
அடுத்தடுத்த எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல், கடந்த இரண்டு வாரங்களாக நம்ப முடியாத அபத்தமான விஷயங்களுடன் ரொம்ப மெதுவாக செல்வதாகவும், சீரியலை பார்க்கவே போர் அடிப்பதாகவும் ரசிகர்கள் சொல்ல துவங்கி விட்டனர். இந்நிலையில் லேட்டஸ்டாக வெளியாகி உள்ள இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ, ரசிகர்களை இன்னும் கடுப்பேற்றி உள்ளது.

சத்தியம் கேட்கும் வேணுகோபால்
நேற்று வெளியான ப்ரோமோவில், கண்ணம்மாவின் மாமனார் வேணுகோபால் நெஞ்சு வலிப்பதாக கூறுகிறார். இதனால் பதறிப் போதும் செளந்தர்யா, அகிலன் ஆகியோர் அவரை அவசரமாக ஹாஸ்பிட்டல் அழைத்துச் செல்கிறார்கள். அங்கு ஓடி வரும் பாரதியிடம் கண்ணம்மாவை தான் பார்க்க விரும்புவதாக கூறுகிறார். இதனால் உடனடியாக கண்ணம்மாவிற்கு போன் செய்து விஷயத்தை சொல்கிறார் செளந்தர்யா. பதறியடித்து ஓடி வரும் கண்ணாம்மா, ஹாஸ்பிடலில் பாரதியை நேருக்கு நேர் பார்க்கிறார். கண்ணம்மா, பாரதி இருவரையும் அழைக்கும் வேணுகோபால், தான் சாக போவதாக உணர்வதாக சொல்லி, இருவரிடமும் சேர்ந்து வாழ வேண்டும் என சத்தியம் கேட்கிறார். இப்படி ப்ரோமோ முடிகிறது.

கடுப்பேற்றிய பாரதி
கடந்த வார ப்ரோமோவில், கண்ணம்மா நல்லவ. அவள் தவறு செய்ததாக நான் தான் தவறாக புரிந்து கொண்டேனோ. மீதமுள்ள வாழ்க்கையை அவளுடன் சேர்ந்து வாழ நினைக்கிறேன் என உருக்கமாக அழுதபடி டயலாக் பேசுகிறார் பாரதி. இதனால் பாரதி - கண்ணம்மா சேர போகிறார்கள் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசியில் சீரியலை பார்த்தால், தான் நடித்ததாக கூறி, அனைவரையும் கடுப்பாக்கினார் பாரதி. இந்த நிலையில் இந்த வார ப்ரோமோவில் வேறுகோபால் நெஞ்சு வலி என சொல்வது பாரதி - கண்ணம்மாவை சேர்த்து வைப்பதற்கான நாடகம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
பாரதி மட்டும் தான் நடிப்பாரா. அவங்க அப்பாவின் நடிப்பு வேற லெவல் என ஒருவர் பாராட்டி உள்ளார். ஆனால் மற்றவர்களோ, இவர்கள் ஹாஸ்பிடல் வைத்திருக்கிறேன் என்பதற்காக அடிக்கடி யாரையாவது ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டுமா. இந்த வாரமாவது பாரதி - கண்ணம்மா சேருவார்களா. எவ்வளவு ட்ரோல் செய்தாலும் டைரக்டர்கள் கண்டு கொள்ளாமல், இவ்வளவு மெதுவாக கதையை கொண்டு செல்கிறாரே. இதை வைத்தே இந்த வாரத்தை ஓட்டி விடுவீர்களா. போதும் நிறுத்துங்க. இல்லைன்னா இந்த சீரியலை தடை செய்யுங்கள் என பல விதமாக கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

போரடிக்க இதுதான் காரணம்
கடந்த இரண்டு வாரங்களாகவே சீரியலில் சுவாரஸ்யம் குறைந்து காணப்படுகிறது. கண்ணம்மா இரட்டை குழந்தை விவகாரத்தை நினைத்து சதா புலம்பிக் கொண்டே இருக்கிறார். செளந்தர்யா, கண்ணம்மா பாவம் என கூறி புலம்பிக் கொண்டிருக்கிறார். அஞ்சலி, அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது. குழந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என புலம்பிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் வெண்பாவை பரம விரோதியாக நினைக்கும் கண்ணம்மா, இரட்டை குழந்தை விவகாரத்தில் வெண்பா கூறும் கதையை நம்பி அழுது, கெஞ்சிக் கொண்டிருக்கிறார். கண்ணம்மாவை மிரட்டி வெண்பாவும் சந்தோஷப்படுகிறாள். இவை மட்டுமே மாறி மாறி காட்டப்பட்டு வந்தது தான் ரசிகர்கள் போரடிப்பதாக கூறியதற்கு காரணம்.
Recommended Video

டிஆர்பி.,யும் போச்சு
இதனால் பல மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்த பாரதி கண்ணம்மா, தற்போது அதை இழந்துள்ளது. நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கைப்பற்றி உள்ளது. இதனால் இந்த வாரமாவது சுவாரஸ்யத்தை கூட்டி, ரேட்டிங்கை ஏற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரத்திற்கான ப்ரோமோவும் ரசிகர்களை டென்ஷனாக தான் வைத்துள்ளது.