For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  3ம் உலகத்திலும் சண்டை.. பிக்பாஸ்க்கு வைல்டு கார்ட் என்ட்ரியா வந்துடுங்க பாருன்னு கெஞ்சும் ஃபேன்ஸ்!

  |

  சென்னை: டிரைபல் பஞ்சாயத்தில் விஜே பார்வதி எதுவுமே பேசாம இருந்திருந்தாலே ரவி வெளியே போயிருப்பார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  நான் ஸ்ட்ராங்கான போட்டியாளர் என தம்பட்டம் அடிக்கும் விஜே பார்வதி போட்டியில் கலந்து கொள்ள மட்டும் பின் வாங்குவது ஏன் என ஏகப்பட்ட சர்வைவர் தமிழ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி விளாசி தள்ளி வருகின்றனர்.

  மனைவிக்கு ஆபாச மெசேஜ்… போலீஸில் புகார் கொடுத்த அஞ்சனாவின் கணவர் !மனைவிக்கு ஆபாச மெசேஜ்… போலீஸில் புகார் கொடுத்த அஞ்சனாவின் கணவர் !

  பிக் பாஸ் ரசிகர்களோ, சீக்கிரம் எலிமினேட் ஆகி சீசன் 5ல் வைல்டு கார்டு என்ட்ரியா வந்துடுங்க பார்வதி போன சீசனில் பாலா சண்டை போட்டே ரன்னர் அப் ஆனது போல நீங்களும் இங்கே வின் பண்ணலாம் என வம்பிழுத்து வருகின்றனர்.

  அந்த சந்தேகம்

  அந்த சந்தேகம்

  தனியார் யூடியூப் சேனலில் பிரபல தொகுப்பாளினியாக கலக்கி வந்த விஜே பார்வதி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகர்கள் நடிகைகளுடன் போட்டியாளராக கலந்து கொண்ட விஜே பார்வதி எங்கே அவர்கள் தங்களை போல தன்னை நினைக்க மாட்டார்களோ என்கிற சந்தேகத்துடனே விளையாடி எலிமினேட் ஆகி முன்றாம் உலகத்துக்கு சென்றுள்ளார்.

  பக்கா பிக் பாஸ் மெட்டீரியல்

  பக்கா பிக் பாஸ் மெட்டீரியல்

  நடிகை சிருஷ்டி டாங்கே சிரித்ததற்கே சண்டையை ஆரம்பித்த விஜே பார்வதியை பார்த்த சர்வைவர் தமிழ் ரசிகர்கள் இவங்க சரியான பிக் பாஸ் மெட்டீரியல் என மீம்களை போட்டு விஜே பார்வதியை பிக் பாஸ் ஜூலியுடன் ஒப்பிட்டு கலாய்த்து வந்தனர்.

  துரத்தியடித்த வேடர்கள்

  துரத்தியடித்த வேடர்கள்

  வேடர்கள் அணியில் இருந்து கொண்டே எந்தவொரு ஒற்றுமையும் இல்லாமல் மற்றவர்களை பற்றி எப்போதும் கேமரா முன்பாக அமர்ந்து கொண்டு புலம்பிக் கொண்டிருந்த விஜே பார்வதி டிரைபல் பஞ்சாயத்தில் பேசிய பேச்சுக்கு அனைவரும் அவருக்கு எதிராக ஓட்டு போட்டு துரத்தியடித்து விட்டனர்.

  தலையில் மண்

  தலையில் மண்

  டிரைபல் பஞ்சாயத்தில் அர்ஜுன் முன்பாக தான் மட்டும் கேப்டனாக இருந்திருந்தால் ஜெயித்து இருப்போம் என அவர் பேசிய அந்த பேச்சு தான் தன் தலையில் தானே மண் வாரிப் போட்ட நிலை என நெட்டிசன்கள் மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர். அவர் அமைதியாக இருந்திருந்தாலே பெசன்ட் ரவி வெளியேறி இருப்பார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

  குரூப்ல டூப்

  குரூப்ல டூப்

  சர்வைவர் தமிழ் நிகழ்ச்சிக்கு கொஞ்சமும் ஃபிட் ஆனவர் கிடையாது விஜே பார்வதி என்றும் க்ரூப்ல டூப் என்றும், நானும் சர்வைவர் தான் என பேச்சை மட்டுமே நம்பி சர்வைவ் செய்து வருகிறார் என்றும் ஏகப்பட்ட மீம்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

  சேம் பிளட்

  சேம் பிளட்

  ஒவ்வொரு முறையும் விஜே பார்வதி பேசும் போதெல்லாம் ஒய் பிளட் சேம் பிளட் மோடு தான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த வாரம் கருப்பு கல் கிடைச்சு தப்பிக்கலாம். ஆனால், அடுத்த வாரம் எலிமினேட் ஆகப் போறது என்னவோ பார்வதி தான் என்றும் சீக்கிரம் அவரை வெளியே அனுப்புங்க என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

  ஒரு வார்த்தைக்கு சம்பளம்

  ஒரு வார்த்தைக்கு சம்பளம்

  "ஒரு வாரத்துக்கு இவ்ளவு சம்பளம்னு சொன்னதை, ஒரு வார்த்தைக்கு இவ்ளவு சம்பளம்னு நெனச்சுருச்சு போல" என இந்த ரசிகரும் விஜே பார்வதியின் ஓவர் பேச்சை தாங்க முடியாமல் கமெண்ட் போட்டு வறுத்தெடுத்துள்ளார்.

  மூன்றாம் உலகத்திலும் சண்டை

  மூன்றாம் உலகத்திலும் சண்டை

  வேடர்கள் தீவில் தான் பார்வதி சிருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா கிருஷ்ணன், அம்ஜான் கான் உடன் சண்டை போட்டார் என்று பார்த்தால், எலிமினேட் ஆகி மூன்றாம் உலகத்திற்கு வந்த இடத்திலும் காயத்ரியின் வாயை பிடுங்கி பிரச்சனையை கிளப்ப பார்க்கிறார். இன்னும் ஒரு வாரத்துக்கு காயத்ரி நிலைமை பாவம் பாஸ் என கண்டபடி திட்டி வருகின்றனர்.

  பிக் பாஸ்க்கு வாங்க பாரு

  பிக் பாஸ்க்கு வாங்க பாரு

  சர்வைவர் தமிழில் உங்களோட அருமை யாருக்கும் தெரியல விஜே பார்வதி அங்கே இருந்து எலிமினேட் ஆகி விஜய் டிவியில் தொடங்க உள்ள பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துடுங்க இங்கே நீங்க டைட்டில் அல்லது ரன்னர் என இரண்டில் ஒன்றை நிச்சயம் வெல்லலாம் என பிக் பாஸ் ரசிகர்கள் வேற லெவலில் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

  English summary
  Netizens trolled Vj Parvathi for her activities in Survivor Tamil, recently she voted out from Suruvivor Tamil show and stayed in Third world of the show.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X