கோபி பேசியே கொல்றார்...பாக்யா பேசாமலே கொல்றார்...சட்டுபுட்டுன்னு ஏதாவது முடிவுக்கு வாங்கப்பா

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக சென்று சொண்டிருப்பது பாக்யலட்சுமி சீரியல் தான். ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த ஒரு விஷயம் நடந்தே விட்டது.

பாக்யாவிற்கு, கோபி - ராதிகா உறவு பற்றிய உண்மை தெரிந்தால் சீரியல் முடிந்து விடும் என்பதால், ட்விஸ்ட் என்ற பெயரில் கதையை ஜவ்வாக இழுக்கிறார்கள் என ரசிகர்கள் சளித்துக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில், ஒரு வழியாக பாக்யாவிக்கு கோபி - ராதிகா காதல் விவகாரம் தெரிந்து விட்டது.

இதனால் அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் சீரியலின் டிஆர்பி.,யும் தாறுமாறாக எகிறியது. கோபி - ராதிகா உறவு பற்றிய உண்மையை தெரிந்து கொண்ட பாக்யா, வீட்டில் உள்ளவர்கள் முன்பு உண்மையை போட்டு உடைக்கிறார்.

அடுத்தடுத்த ட்விஸ்ட்

அடுத்தடுத்த ட்விஸ்ட்

கோபியை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கி விட்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறார். ராதிகாவை சென்று பாக்யா பார்ப்பது,குடும்பத்தில் உள்ளவர்களை சமாளிக்க பாக்யாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல போய் அங்கும் தவறுதலாக ராதிகா பெயரை சொல்லி கோபி மாட்டிக் கொள்வது, பிறகு தானே கோர்ட்டிற்கு சென்று கோபியிடம் இருந்து பாக்யா விவாகரத்து பெறுவது என அடுத்தடுத்த ட்விஸ்ட்களுடன் நகர்ந்தது பாக்யலட்சுமி சீரியல்.

டைவர்ஸ் வாங்கினதும் திருமணமா?

டைவர்ஸ் வாங்கினதும் திருமணமா?

ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் டல் அடிக்க துவங்கி விட்டது. ஒரே அழுகாச்சியாக போய் கொண்டிருக்கிறது. விவாகரத்து வாங்கிய கையோடு கோபி, ராதிகா வீட்டிற்கு சென்று பார்க்கிறார். இதனால் கடுப்பான ரசிகர்கள், டைவர்ஸ் வாங்கிய கையோடு திருமணமா? என்ன அவசரம் அப்படி என ரசிகர்கள் கிண்டல் செய்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

கூலாக பிரியாணி சாப்பிடும் பாக்யா

கூலாக பிரியாணி சாப்பிடும் பாக்யா

அடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்க, கோபியோ வீட்டிற்கு வந்து டைவர்சிற்கு ஒட்டுமொத்த காரணமே பாக்யா தான் என்பது போல் அனைவரிடமும் பேசி, பாக்யாவை வீட்டை விட்டு துறத்த முயற்சி செய்கிறார். வீட்டில் பக்கம் பக்கமாக கோபி டயலாக் பேசிக் கொண்டிருக்க, பாக்யாவோ கூலாக எழிலுடன் ஓட்டலுக்கு சென்று பிரியாணி, சிக்கன் என வகை வகையாக ஆர்டர் செய்து சாப்பிடுகிறார். என்ன நடக்கிறது, அம்மா எதற்காக இப்படி நடக்கிறார் என புரியாமல் எழிலும் குழம்பிப் போய் உள்ளார்.

பாக்யா வெறும் குக் தான்

பாக்யா வெறும் குக் தான்

சாப்பிட்டு முடிந்ததும் வீட்டிற்கு போகும் பாக்யாவிடம் வெளியே போக சொல்லி கத்துகிறார் கோபி. "இதுவரை பாக்யா பார்த்தது குக் வேலை தான். அவளுக்கும் செல்விக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது" என்கிறார் கோபி. அம்மா பாக்யாவிற்காக எழிலும், அப்பா கோபிக்காக செழியனும் பேசுகிறார்கள். ஜெனி, கோபியின் அப்பா, அம்மா, இனியா என வீட்டில் உள்ள அனைவரும் மாறி மாறி பேசுகிறார்கள். ஆனால் பாக்யா எந்த ரியாக்ஷனும் இல்லாமல், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

இன்னும் இதையேவா பேசிட்டு இருக்கீங்க

இன்னும் இதையேவா பேசிட்டு இருக்கீங்க

இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதிலும், மற்றவர்கள் பேச பாக்யா அமைதியாக தான் உள்ளார். பாக்யா வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என கோபி சொல்ல, மற்றவர்கள் அவர் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். இன்றைய எபிசோடிலும் ஏற்னவே பேசியதை தான் மறுபடியும் பேசுகிறார்கள்.

சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க

சட்டுபுட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க

இதனால் கடுப்பான ரசிகர்கள், கோபி விடாமல் பேசியே கொல்கிறார். ஆனால் பாக்யா பேசாமல் அமைதியாக இருந்தே கொல்கிறார். அடுத்து என்ன தான் நடக்கும். பாக்யா வீட்டில் இருப்பாரா? வெளியே போவாரா? பாக்யவின் அடுத்த முடிவு என்ன? கோபி - ராதிகா கல்யாணம் நடக்குமா, இல்லை? சட்டுபுட்டுன்னு பேசி ஒரு முடிவுக்கு வாங்க. இல்லைன்னா சீரியலை முடிங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X