இது என்னடா புது உருட்டா இருக்கு...குக் வித் கோமாளி பார்த்தா குழந்தை பிறக்குமா?
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தால் குழந்தை பிறக்கும் என மகேஷ் பட் பேசிய வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டு சீசன்கள் முடிந்து, தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. விரைவில் இந்நிகழ்ச்சியின் ஃபினாலே நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியிலிருந்து விலகிய தாமு
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து செஃப் தாமு மற்றும் மகேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தாமு அறிவித்தார். இதனால் மகேஷ் பட் மட்டும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார்.

என்ன இது புது தகவலா இருக்கு
இந்த சமயத்தில் சமீபத்திய எபிசோட் ஒன்றில் போட்டியாளர்களிடம் பேசிய மகேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த பெண் ஒருவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறினார். மேலும், குழந்தை பிறப்பதற்காக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம், குழந்தையுடன் வந்திருந்த மற்றொரு பெண், குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார். மனஅழுத்தம் குறைந்து, சந்தோஷமாக இருப்பாய். விரைவில் குழந்தை பிறக்கும் என சொல்லி உள்ளார்.

கலாய்க்கு நெட்டிசன்கள்
அதைக் கேட்டு அந்த பெண்ணும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்க்க துவங்கி உள்ளார். தற்போது அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்றார். இதைக் கேட்டு போட்டியாளர்களும் மெய் சிலிர்ப்பதாகவும், இந்த நிகழ்ச்சி பார்ப்பதால் அந்த அளவிற்கு மன அழுத்தம் குறைவதாகவும் கூறினர்கள். இந்த வீடியோவை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

என்னடா புது உருட்டா இருக்கு
இது என்னடா புது உருட்டா இருக்கு. குக் வித் கோமாளி பார்த்தா குழந்தை பிறக்குமா. லவ் செட் ஆகுமா இந்த ப்ரோக்ராம் பார்த்தா. ஸ்டிரெஸ் குறையுதுன்னு சொல்லி முடிங்களேன். எதுக்கு இந்த பில்ட்அப். என்னடா புதுசு புதுசு கிளப்பி விடுறீங்க. ஒன்னும் விளங்கலியே என கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











