மனசுல பெரிய ரோலக்ஸ் சார்ன்னு நினைப்பு...தமிழும் சரஸ்வதி ப்ரொமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

சென்னை : விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் பாப்புலரான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இன்றைய தேதியில் பலரின் ஃபேவரைட் சீரியல் இடத்தை பிடித்திருப்பது இந்த சீரியல் தான்.

வழக்கமான மாமியார் - மருமகள், குடும்ப பிரச்சனை பற்றிய கதை தான் என்றாலும் ட்விஸ்ட், த்ரில்லிங், தீபக் - நக்ஷத்திராவின் ரொமான்ஸ், நக்ஷத்ராவின் குறும்புத்தனமான செய்கைகள், வில்லி சந்திரகலா கேரக்டர் ஆகியவைகளால் இந்த சீரியலுக்கு ஃபேன்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.

திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், தற்போது மாமியார் கோதை, சரஸ்வதியை ஏற்றுக் கொண்டு விட்டார். அதே சமயம், சந்திரகலாவின் சதி வேலைகளால் மனம் மாறி அண்ணன் தமிழ் மற்றும் சரஸ்வதியை ஏற்ற கார்த்திக், மீண்டும் வெறுப்பை காட்ட துவங்கி விட்டார். இதனால் மீண்டும் கார்த்திக் - சரஸ்வதி துவங்கி உள்ளது.

கார்த்தி - நமச்சி மோதல்

கார்த்தி - நமச்சி மோதல்

இந்நிலையில் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கான லேட்டஸ்ட் ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஆபீசிற்குள் வரும் கார்த்திக்கை பார்த்து அனைவரும் வணக்கம் சொல்ல, நமச்சிவாயம் மட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இதனால் கடுப்பாகும் கார்த்திக், நமச்சியை அழைத்து ஏன் வணக்கம் சொல்லவில்லை என கேட்கிறார்.

கார்த்திக் போடும் புதிய உத்தரவு

கார்த்திக் போடும் புதிய உத்தரவு

நமச்சியும், அடிக்கடி பார்த்துக் கொண்டு தானப்பா இருக்கோம். இதில் எதற்காக தனியாக வணக்கம் என யதார்த்தமாக சொல்கிறார். இதை கேட்டு கோபமடையும் கார்த்திக், இனி தன்னை கார்த்திக் சார் என்று தான் கூப்பிட வேண்டும் என உத்தரவு போடுகிறார்.

சட்டையை பிடிக்கும் நமச்சி

சட்டையை பிடிக்கும் நமச்சி

கார்த்திக் கோபத்தில் கடுமையான வார்த்தைகளை விட, இதனால் நமச்சி அனைவரின் முன்னிலையிலும் கார்த்தியின் சட்டையை பிடித்து சண்டை போடுகிறார். இதனால் நமச்சியை வேலையை விட்டு அனுப்பும் கார்த்தியை தடுத்து நிறுத்தி தட்டி கேட்கிறார் சரஸ்வதி.

அப்படியே சுட்டிருக்கீங்களே

அப்படியே சுட்டிருக்கீங்களே

இந்த ப்ரொமோவை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். கார்த்திக் சார் என கூப்பிட வேண்டும் என்ற டயலாக்கை கேட்டதும், டைரக்டர் இப்போ தான் விக்ரம் படம் பார்த்து விட்டு வந்திருப்பார் போல. ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா பேசும் டயலாக்கை அப்படியே சுட்டு, இங்கு சொருகி உள்ளாரே.

அதுக்குள்ள விக்ரம் ரீமேக் வெர்சனா

அதுக்குள்ள விக்ரம் ரீமேக் வெர்சனா

மனசுல பெரிய ரோலக்ஸ் சார்ன்னு நினைப்பு இவருக்கு. விக்ரம் படம் ரிலீசான 12 நாளில் ரீமேக் வெர்சன் வந்திடுச்சு. கார்த்திக், விக்ரம் படம் படார்த்துட்டு வந்திருப்பார் போல. சீரியலில் கூட கமல், சூர்யா reference தானா என கண்டபடி கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X