தெரு நாய்களை விட ஆபத்தானவர்கள் அதற்கு சப்போர்ட் செய்பவர்கள்.. எல்லை மீறி கலாய்க்கும் நெட்டிசன்கள்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இன்றைய நீயா நானா எபிசோடில் இந்த வாரம் விவாதிக்கப்பட்ட தலைப்பு, தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் மற்றும் தெரு நாய்க்கும் நகரத்தில் உரிமை உள்ளது என்ற இரண்டு தலைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு மத்தியிலான உரையாடலாக இருந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசியவர்களை இணையவாசிகள் பங்கமாக கலாய்த்து வருகிறார்கள்.
அதாவது தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசுபவர்களின் வாதம் முழுக்க முழுக்கவே, " தெரு நாய்கள் பாவம். அவைகளுக்கு ஒன்றும் தெரியாது. அவைகளுக்கு நல்லவர்களையும் கெட்டவர்களையும் நன்றாகத் தெரியும். நீங்கள் அதை தாக்குவதைப் போல சென்றால் அது உங்களை கடிக்கும். எல்லா நாய்களும் கடிப்பதில்லை. நீங்கள் ஏன் இரவு 9 மணிக்கு மேல் உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஏரியாக்களுக்கு செல்கிறீர்கள். உங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஏரியாவில் இரவு 9 மணிக்கு மேல் என்ன வேலை?, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் தத்துவத்தில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம், அவர்களைப் போல மனிதாபிமானம் இல்லமால் இல்லை என்று கேள்வி கேட்டு, தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் என்ற தலைப்பின் கீழ் பேச வந்தவர்களை பதில் கேட்டார்கள்.

பதிலடி: இதற்கு தெரு நாய்கள் இல்லாத நகரம் வேண்டும் என்ற தலைப்பில் பேசிய பலரும், எல்லா நாயும் கடிப்பதில்லை என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். 10 நாய்கள் இருக்கும் இடத்தில் கடிக்கும் நாய் கடிக்காத நாய் என நாங்கள் எப்படி அடையாளம் காண்பது. நாய்களுக்கு நல்லவர்களை தெரியும் என்றால், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை கவ்விக் கொண்டு சென்று கடித்து விட்டது. அந்த குழந்தைக்கு தன்னை தூக்கிச் சென்று கடித்தது நாய் என்று கூட தெரியாது.
கொசு மீது ஏன் கருணை இல்லை: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறும் இவர்கள் கொசு அவர்களைக் கடித்தால் அடித்துக் கொல்கிறார்கள். கரப்பான் பூச்சி வீட்டிற்குள் வந்தால் உயிர் கொல்லிகள் அடித்துக் கொல்கிறார்கள். நாய்கள் மீதே இவ்வளவு இரக்க குணம் கொண்ட இவர்கள் தான் கொசுவைக் கொல்லுகிறார்கள், கரப்பான் பூச்சிக்கு விஷம் வைக்கிறார்கள். அப்போது எங்கே போனது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்? நாயின் மீது இவ்வளவு கருணை கொண்ட இவர்கள் தான், எங்களைக் காட்டிலும் கருணை மனம் கொண்டவர்கள் அவர்கள் தான், நாய் மீது அவ்வளவு கருணை கொள்ளும் அவர்களால் நாயால் கடிவாங்கிய, இறந்து போன குழந்தைகள் மீது கருணை வரவில்லயே? என்று கேட்பட்டதற்கு பதில் இல்லாமல் அமைதியாகி விட்டார்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேச வந்தவர்கள்.
கலாய்: தெரு நாய்களுக்கு இவர்கள் ஆதரவாக பேசியதைப் பார்த்த நெட்டிசன்கள், தெரு நாய்களை விட ஆபத்தானவர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசுபவர்கள் என்று பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். நிகழ்ச்சியில் நாய்கள் தங்களது உணர்வுகளை எப்படி எல்லாம் வெளிப்படுத்தும் என நாய்களைப் போல சத்தம் போட்டுக் காட்டிய வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள். இது தொடர்பான பதிவுகள் இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











