வீட்டுக்கு நடுவுல சுவரா?...அடேய் எந்த காலத்துலடா இருக்கீங்க...ஜீ தமிழ் சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

சென்னை : ஜீ தமிழ் சேனலில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று கன்னத்தில் முத்தமிட்டால். இந்தியில் Tujhse Hai Raabta என்ற பெயரில் ஒளிபரப்பான சீரியலின் தமிழ் ரீமேக் ஆகும்.

Recommended Video

Kannathil Muthamittal Serial-லில் இருந்து விலகிய Manisha Ajith... அதிர்ச்சியில் ரசிகர்கள் *TV

வளர்ப்பு தாய் மற்றும் மகள் இடையேயான பாச போராட்டத்தை மையமாகக் கொண்டது தான் இந்த சீரியல். இந்த சீரியல் சமீபத்தில் தான் 100 எபிசோட்களை கடந்தது. இதனை படக்குழுவினர் பிரம்மாண்டமாக கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் இந்த சீரியலில் லீட் ரோலான ஆதிரா ரோலில் நடித்து வந்த மனிஷா அஜித், சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதோட சீரியல் டீம் பற்றி அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை கிளப்பின. புதிய ஆதிராவாக பாடினி குமார் மாற்றப்பட்டுள்ளார்.

ஆதிராவின் திருமண ஏற்பாடுகள்

ஆதிராவின் திருமண ஏற்பாடுகள்

இந்த சீரியலில் சுபத்திரா தான் தன் அம்மா வெண்ணிலாவை கொன்றவர் என நினைத்து கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவளுக்கு உண்மைகள் அனைத்தும் தெரிய வருகிறது. ராஜப்பாவும் ஆதிராவை பேத்தியாக ஏற்று கொள்கிறார்.கர்ப்பமாக இருக்கும் சாருமதி அகிலனோடு ஓடிப்போக திட்டம் போட அகிலன் ஆதிராவை விரும்புவதாக டிராமா போட இதை நம்பி இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட குடும்பத்தார் முடிவு செய்கின்றனர்.

ஷாக் கொடுக்கும் திருமாறன்

ஷாக் கொடுக்கும் திருமாறன்

திடீர் திருப்பமாக ஆதிராவிற்கு திருமாறனோடு திருமணம் நடக்கிறது. திருமணமாகி வீட்டிற்கு வந்த ஆதிராவிற்கு ஷாக் கொடுப்பதற்காக வீட்டிற்கு நடுவே பெரிய சுவரை இரவோடு இரவாக எழுப்பி விடுகிறார் திருமாறன். இதை பார்த்து குடும்பமே அதிர்ச்சியாக இருப்பதாக லேட்டஸ்ட் ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது.

வீட்டிற்கு நடுவுல சுவரா?

வீட்டிற்கு நடுவுல சுவரா?

இதை பார்த்து நெட்டிசன்கள் செம கடுப்பாகி, கலாய்த்து வருகின்றனர். வீட்டிற்கு நடுவுல சுவரா?...வீட்டிற்கு நடுவே சுவர், வீட்டிற்கு நடுவே கோடு இதெல்லாம் நாங்க பழைய எம்ஜிஆர், விசு கால சினிமாவிலேயே பார்த்துட்டோம். இன்னும் எந்த காலத்துலடா இருக்கீங்க. அதுவும் இரவோடு இரவா கட்டிட்டாராம். அது கூட தெரியாமலா வீட்டில் இருந்தவர்கள் இருந்தார்கள். ஒரு கொத்தனார், சித்தாள் கூட இல்லாமல் எப்படி இவரா கட்டினார்?

இதுக்கு ஒரு அளவில்லையா?

இதுக்கு ஒரு அளவில்லையா?

சென்டிமென்ட், ட்விஸ்ட் என்ற பெயரில் இந்த சீரியல்களில் அடிக்கும் கூத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது.100 எபிசோட் தான் முடிஞ்சிருக்கு. இதுக்கே இப்படினா இன்னும் என்னவெல்லாம் கொடுமைகளை பார்க்க வேண்டி இருக்குமோ என நெட்டிசன்கள் நொந்து கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X