Don't Miss!
- Sports
தோனியிடம் இனி கற்க ஒன்றுமே இல்லை.. ஹோட்டல் விட்டு ஹோட்டல் அலைகிறோம்.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- News
"எப்படி இதை சாப்பிடறாங்க.." சைவம் சாப்பிடறவங்கள பார்த்தாலே எனக்கு பாவமா இருக்கும்.. ரஜினிகாந்த் கலகல
- Lifestyle
Today Rasi Palan 27 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் பணம் திருடு போக வாய்ப்புள்ளதால் உஷார்...
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
என்னது பிக்பாஸ் தாமரைக்கு புது வீடா... இது சூப்பரான விஷயமா இருக்கே!
சென்னை : விஜய் டிவியில் அனைவருக்கும் பிடித்தமான நிகழ்ச்சியான பிக்பாஸ் 5 சீசன்களை கடந்து, பிக்பாஸ் அல்டிமேட்டாகவும் ரசிகர்களை கவர்ந்தது. இதில் சீசன் 5 மற்றும் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட தாமரை செல்வி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார்.
யூடியூப் நடிகையையும் படுக்கைக்கு அழைத்த பிரபல நடிகர்.. கனவுகளை நொறுக்கிட்டாருன்னு வேதனை!

பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் காணப்படுகிறது. கடந்த 2017ல் இதன் முதல் சீசன் துவங்கி வெற்றிகரமாக நடந்ததையடுத்து தற்போது 5 சீசன்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சி
ரசிகர்களின் மிகவும் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சிகள் பட்டியலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சிறப்பான இடம் எப்போதுமே உண்டு. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கியது முக்கியமான காரணமாக அமைந்தது. தொடர்ந்து பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், இடையிலேயே நிகழ்ச்சியிலிருந்து விலகினார்.

பிக்பாஸ் அல்டிமேட்
தொடர்ந்து நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபலமானவர்கள் மட்டுமில்லாமல் சிறப்பான துறைகளில் இருப்பவர்களும் இடம்பெற்று வருகின்றனர். இவர்கள் பிரபலமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளது.

நாடக கலைஞர் தாமரைசெல்வி
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் சீசன் 5ல் கலந்து கொண்டார் மேடை நாடக கலைஞரான தாமரைச்செல்வி. இவர் யார் என புருவங்களை உயர்த்திய ரசிகர்களை தான் யார் என்பதை அடையாளம் காட்டும் வகையில் பிக் பாஸ் வீட்டில் இவரது செயல்பாடுகள் காணப்பட்டன.

பதிலடி கொடுத்த தாமரை
இவரெல்லாம் பிக் பாஸ் வீட்டிலா என்ற கேள்விகளுக்கும் தன்னுடைய சிறப்பான செயல்பாடுகள் மூலம் இவர் பதிலடி கொடுத்தார். உறுதி, வெள்ளந்தியான பேச்சு உள்ளிட்டவை இவரது தனிப்பட்ட திறமைகளாக காணப்பட்டன. தொடர்ந்து 98 நாட்கள் இவர் போட்டியில் தொடர்ந்தார்.

ஏராளமான ரசிகர்கள்
சாதாரண குடும்பத்தில் இருந்து பிக்பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தாமரை, தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2விலும் பங்கேற்றுள்ளார். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர். அவரும் நிகழ்ச்சியை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

குடிசை வீட்டில் தாமரையின் தாய்
சாதாரண குடும்பத்தை சேர்ந்த தாமரை, சொந்த வீட்டில்தான் வசித்து வருகிறார். ஆனால் அவரது சமீபத்திய பேட்டியில், அவரது தாய் மற்றும் சகோதரிகள் குடிசை வீட்டில் வசித்து வருவது தெரியவந்தது. அந்த வீட்டில் அவர்கள் படும் துயரங்களை அவர்கள் வெளிப்படுத்தினர். தாமரைதான் தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

தாமரைக்கு புதிய வீடு
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தாமரை இல்லம் என்ற திட்டத்தின்மூலம் தாமரையின் தாய் மற்றும் சகோதரிகளிடம் பேசியதாகவும் விரைவில் நல்ல உள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் அவர்களுக்கு வீடு கட்டித்தர உள்ளதாகவும் யூடியூப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தாமரை ரசிகர்கள் மகிழ்ச்சி
இதுபோன்ற பல விஷயங்களை பல தொண்டு நிறுவனங்கள் செய்து வந்தாலும் உதவி தேவைப்படும் இத்தகையோருக்கு செய்யப்படும் உதவிகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு தாமரையின் ரசிகர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.