»   »  காதலுக்காக ஆண் வேடம் போடும் நாயகி- இது கொரியன் சீரியல்

காதலுக்காக ஆண் வேடம் போடும் நாயகி- இது கொரியன் சீரியல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தி சீரியல்களை தமிழில் டப்பிங் செய்து பல டிவி சேனல்கள் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, கொரியன் சீரியல்களை, தமிழில் வழங்கி வருகிறது ‘புதுயுகம்' தொலைக்காட்சி.

இளைஞர்களின் விருப்பமான கொரியன் சீரியல்களை இப்போது இல்லத்தரசி தொடங்கி குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனராம்.

‘பாய்ஸ் ஓவர் ஃப்ளவர்ஸ்', ‘ஐரிஸ்', ‘பிளேஃபுல் கிஸ்", ‘பாஸ்தா', ‘காஃபி பிரின்ஸ்' போன்ற பிரபல தொடர்களின் வரிசையில் பார்ப்பவர்களை நடுநடுங்கச்செய்யும் அமானுஷ்ய காதல் தொடரான, ‘தி மாஸ்டர்ஸ் சன்' கடந்த வாரம் வரை ஒளிபரப்பானது.

காதல் கதை

காதல் கதை

கடந்த மே 4 முதல் இளமைத்தும்பும் காதல் தொடரான, ‘டு த பியூட்டிஃபுல் யு' தொடங்கியுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டும் பிரிவில் தங்கம் வாங்கித்தருவான் என்று நாயகன் ஆலன் மீது தேசமே நம்பிக்கை வைத்துள்ளது. நாயகியும் ஓட்டப்பந்தய வீராங்கனையுமான பாபிக்கு, ஆலன் மீது ஆர்வமும் காதலும் வருகிறது.

ஆணாக மாறும் காதலி

ஆணாக மாறும் காதலி

ஆலன் போட்டியில் வெல்வதற்கு ஆதரவாகநிற்க விரும்புகிறாள். அதனால் தன் அடையாளத்தை மறைத்து ஆணாக தன்னை மாற்றிக்கொண்டு, ஆலன் பயிற்சிபெறும் ஆண்கள் கல்லூரியில் சேர்கிறாள். ஆலன் அறையில் தங்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆலன் மனதில் இடம் பிடிப்பாளா பாபி?, ஒலிம்பிக்கில் ஆலன் தங்கம் வெல்ல முடிந்ததா என்பதை நோக்கி கதை விறுவிறுப்பாக நகர்கிறது.

புல்லட் டைம் எபெஃக்ட்

புல்லட் டைம் எபெஃக்ட்

விளையாட்டுத் தொடர்பான கதை என்பதால், முதன்முறையாக இந்த சீரியலுக்காக புல்லட் டைம் எபெஃக்ட் ஒளிப்பதிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஹைஜம்ப் நிகழ்வுகளை 50-க்கும் மேற்பட்ட கேமிராக்களில் ஒளிப்பதிவு செய்து, ஒன்றிணைத்து ஒரே காட்சியாக வழங்கப்படுவதுதான் புல்லட் டைம் எபெஃக்ட்.

மொத்தமா பாருங்க

மொத்தமா பாருங்க

இந்தத் தொடரில் மின் ஹோ, ஷுல்லி, லீ ஹூன்வூ போன்ற பிரபல கொரியன் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த எபிஸோடுகளின் தொகுப்பு சனிக்கிழமை இரவு 12.00 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

English summary
The popular and famous Korean series are available in Tamil language only in the Puthuyugam television channel.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil