Don't Miss!
- Finance
இந்தியா-வின் உண்மையான நிலை என்ன..? எப்போது வல்லரசு ஆகும்..?
- Sports
ஆசிய கோப்பை கிரிக்கெட் - சாம்பியன்கள் பட்டியல் இதோ.. 2வது முறையாக இந்தியாவுக்கு ஹாட்ரிக் வாய்ப்பு
- News
ஆசிரியர் தாக்கி தலித் சிறுவன் பலியான சம்பவம்.. சொந்த கட்சியினரே நெருக்கடி.. தவிக்கும் அசோக் கெலாட்!
- Lifestyle
சாமை கட்லெட்
- Technology
Moto G62 5G ரிவ்யூ- இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை வாங்கலாமா? வேண்டாமா?
- Automobiles
எந்த பிரச்சனையும் இல்லை.. நடுவானிலேயே விமானிகள் அசந்து தூங்குவார்கள்... ஆனால் ஒன்று மட்டும் முக்கியம்...
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ஒரே அலைவரிசையில் அமுதாவும் அன்னலட்சுமியும்.. ஜூலை 4 முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர்!
சென்னை : மற்ற சேனல்களை போலவே ஜீ தமிழ் சேனலும் புத்தம் புதிய தொடர்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது.
இந்தச் சேனலின் தொடர்கள் தொடர்ந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.
இந்நிலையில் வரும் 4ம் தேதி திங்கட்கிழமை முதல் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
'நானும் ரவுடிதான்' ஹீரோ ரோலில் நடிக்க முடிவெடுத்த இசையமைப்பாளர்.. மனதை மாற்றிய ரஜினியின் அட்வைஸ்!!

சன் டிவி -விஜய் டிவிக்கு சவால்
தொலைக்காட்சி தொடர்கள் என்றாலே சன் டிவி, விஜய் டிவி என்ற கணிப்பை உடைத்துள்ளன கலர்ஸ் தமிழ் மற்றும் ஜீ தமிழ் சேனல்கள். இந்த சேனல்களிலும் சன் மற்றும் விஜய் டிவிக்கு சவால் விடும் வகையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த சீரியல்கள் அதிகமான ரசிகர்களை கட்டிப் போட்டும் வருகின்றன.

அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர்
இந்த வகையில் ஜீ தமிழ் சேனலில் புத்தம் புதிய தொடர்கள் பல ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் வரும் 4ம் தேதி முதல் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற புதிய தொடரை ஒளிப்பரப்ப உள்ளது ஜீ தமிழ். இந்த தொடரில் கண்மணி மனோகர் அமுதா என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார்.

கருத்தம்மா ராஜஸ்ரீ
இவருக்கு ஜோடியாக பத்மநாபன் என்பவர் செந்தில் என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவரது அம்மாவாக கருத்தம்மா ராஜஸ்ரீ அன்னலட்சுமி என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் மூவரையும் அவர்களது உணர்வுகளையும் மையமாக கொண்டு இந்தத் தொடர் வரும் திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாக உள்ளது.

அமுதாவின் குறிக்கோள்
இந்த சீரியலில் சிறுவயதிலேயே தன்னுடைய அம்மாவை இழக்கும் அமுதா, தன்னுடைய குடும்பத்தினருக்காக தன்னுடைய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்கிறார். படிக்காத காரணத்தால் பல அவமானங்களை சந்திக்கும் அவர் தான் ஒரு வாத்தியரை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடம் உள்ளார்.

வாத்தியார் என பொய்
இதனிடையே வாத்தியார் குடும்பம் என பெருமையாக வாழ்ந்த அன்னலட்சுமி குடும்பம் எதிர்பாராமல் சரிந்து போகும் நிலையில், தன்னுடைய மகனை வாத்தியாராக்கி குடும்ப பெருமையை காக்க நினைக்கிறார் அன்னலட்சுமி. அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்ய முடியாத செந்தில் பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் தான் வாத்தியாராக வேலை செய்வதாக கூறி பியூனாக வேலை செய்கிறார்.

காதல் கொள்ளும் அமுதா
அவர் வாத்தியார் என நினைத்து அமுதா காதல் கொள்கிறார். இதேபோல தன்னுடைய மகன் வாத்தியார் என அன்னலட்சுமியும் பெருமை கொள்கிறார். இவர்கள் இருவருக்கும் செந்திலின் உண்மை முகம் தெரியவந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் உருவாகியுள்ளது.

சிறப்பான பிரமோஷன்
இந்நிலையில் இந்த சீரியலை பிரமோட் செய்யும் வகையில் நடிகைகள் சினேகா, சரண்யா மற்றும் சங்கீதா உள்ளிட்டவர்கள் இதுகுறித்து பேசிய ப்ரமோவை ஜீ தமிழ் தற்போது வெளியிட்டுள்ளது. கோயிலில் அமுதா, அன்னலட்சுமி மற்றும் செந்தில் பார்த்துக் கொள்வதாகவும் தொடர்ந்து அவர்களைப்பற்றி இவர்கள் மூவரும் பேசுவதாகவும் புதிய ப்ரமோ அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி இந்த சேனலின் புதிய தொடரான மாரி சீரியலையும் இவர்கள் பிரமோட் செய்யும் ப்ரமோவும் ஜீ தமிழ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. முதலில் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் இவர்கள் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்துள்ளதாக நினைத்தனர். பிறகுதான் தெரிந்தது இது ப்ரமோஷன் வீடியோ என்பது.