»   »  ஒரு பக்கம் மிரட்டும் பேய்... மறுபக்கம் பக்திக்கு “மகமாயி”!

ஒரு பக்கம் மிரட்டும் பேய்... மறுபக்கம் பக்திக்கு “மகமாயி”!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் சேனலில் புதியதாக "மகமாயி" என்கின்ற தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது. அம்மனின் சக்தியையும், ஒரு இளம்பெண்ணையும் சுற்றி நிகழும் சம்பவங்கள் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா மற்றும் டிவி சேனல்களில் பேய்களின் ஆதிக்கம், மூட நம்பிக்கை சீரியல்கள் அதிகரித்து வருகிறது. இப்போது பக்தி சீரியல்களும் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

ஜீ தமிழ் சேனலின் "மெல்லத் திறந்தது கதவு" தொடரில் ஒரு பகுதியாக அம்மன் வந்து கொண்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து புதியதாக முழுத்தொடராக "மகமாயி" என்கின்ற ஆன்மீக சீரியல் இந்த மாதம் 29 ஆம் தேதியிலிருந்து ஆரம்பிக்க உள்ளது.

ஜீ தமிழ் சேனலைப் பொறுத்தவரை ஹிந்தி சீரியல்களைத்தான் டப்பிங் செய்வார்கள். இந்த முறை கன்னட சீரியலை தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்புகின்றன.

 தமிழில் டப் ஆகும் மகாதேவி:

தமிழில் டப் ஆகும் மகாதேவி:

ஜீ நெட்வொர்க்கின் கன்னட மொழி சேனலான ஜீ கன்னடா சேனலில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தெய்வீக சீரியலான"மகாதேவி". ஜீ தமிழுக்காக மகமாயி என்று டப்பிங் செய்யப்பட்டு ஒளிப்பரப்பாக உள்ளது.

 சேவை செய்தாலும் பகைதான்

சேவை செய்தாலும் பகைதான்

திரிபுர சுந்தரி என்ற இளம்பெண் அம்மனுக்கு சேவை செய்தாலும் அவள் மேல் தீராத வெறுப்பு கொண்டவள்.எதனால் இந்த வெறுப்பு? அம்மனுக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு, பகை, அவளைச் சுற்றி தொடரும் மூன்று கயவர்கள் ஆகியவற்றை வலைப்பின்னலாக சொல்ல வருகின்றது இந்தத் தொடர்.

 இவர்தான் அம்மன்

இவர்தான் அம்மன்

இந்த தொடரில் கன்னட நடிகை மானசா ஜோஷி அம்மனாகவும், அர்ச்சனா ஜாய்ஸ் அம்மனுக்கு சேவைகள் செய்யும் பெண்ணாகவும் நடித்துள்ளனர்.

 ஸ்ரீசக்ரம்தான் கதைக்களம்

ஸ்ரீசக்ரம்தான் கதைக்களம்

அம்மனின் சக்தியை ஒருங்கிணைக்கும் மகா மேரு ஸ்ரீ சக்கரத்தையும், முற்பிறவியையும் கதைக்களமாக கொண்டு இந்த தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A new serial magamayi will begin in Z tamil channel on 29th onwards.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil