»   »  செல்லப்பிராணிகளை மகிழ்விக்கும் டி.வி. நிகழ்ச்சி

செல்லப்பிராணிகளை மகிழ்விக்கும் டி.வி. நிகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல்: வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்களை மகிழ்விப்பதற்கென்றே தனியாக ஒரு ஆண்டிற்கு முன்பு அமெரிக்காவில் 'டாக் டி.வி.' என்ற தொலைக்காட்சி சேனல் அறிமுகம் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. தற்போது சான்டியாகோ, கலிபோர்னியா பகுதிகளில் இது பிரபலமாகிவிட்டது. இப்போது, செல்லப்பிராணிகளை மகிழ்விக்க ஒரு டி.வி. நிகழ்ச்சியை இஸ்ரேல் நாட்டு கேபிள் டி.வி. நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டாக் டி.வி:

டாக் டி.வி:

காவல் காப்பதோடு, வீட்டின் செல்லப்பிராணியாகவும் நாய்கள் வலம் வருகின்றன. மனிதர்களுக்கு இருப்பதைப் போலவே அவைகளுக்கும் பொழுதுபோக்குகள் வேண்டும் என யோசித்த பிடிவி மீடியா லிமிடெட், பல ஆராய்ச்சிகளை செய்து, வீட்டில் தனியாக இருக்கும் நாய்களுக்கென 'டாக் டி.வி' என்ற பெயரில் சேனல் ஒன்றை ஆரம்பித்தது. இதன் மூலமாக நாய்களின் மனஅழுத்ததை குறைக்கலாம் என கூறியது.

ஆதரவு:

ஆதரவு:

அனைத்து வகையான, வயதான நாய்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால், டாக் டி.விக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த டிவியை பார்க்கச்செய்து விட்டு வெளியே செல்லும் போது, வீட்டில் நாய்கள் பாதுகாப்பாக, அதே சமயம் மகிழ்வாக இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.

டி.வி. நிகழ்ச்சி:

டி.வி. நிகழ்ச்சி:

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேல் நாட்டு கேபிள் டி.வி. நிறுவனமும் செல்லப்பிராணிகளை மகிழ்விக்க ஒரு டி.வி. நிகழ்ச்சி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.சுமார் 6 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை, நாய்கள் ரசித்து கேட்கும் இசை மற்றும் சிறப்பு வர்ணத்துடன் வழங்குகிறார்கள்.

( 'இங்க உங்களுக்கே கரண்ட் இல்ல, இதுல எங்களுக்கு எதுக்கு இதெல்லாம். ம்ம்... கொடுத்து வச்சதுங்க அமெரிக்க, இஸ்ரேல் நாட்டு நாய்க... ' என உங்கள் வீட்டு செல்லப்பிராணிகளின் மைண்ட் வாய்ஸ் உங்களுக்கும் கேட்டிருக்கும்னு நினைக்கிறோம்.)

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The company's site said that dogs that are left alone tend to become anxious so the calming sounds and music in the relaxing segments on DOGTV were created to keep them peaceful. The channel provides TV for dogs with three types of programming offering relaxing and stimulating content as well as positive behavioural reinforcements.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more