»   »  மக்களின் அறிவை பெருக்கும் 'அறிவுக் கொழுந்து' ... நியூஸ் 7 டிவியில்!

மக்களின் அறிவை பெருக்கும் 'அறிவுக் கொழுந்து' ... நியூஸ் 7 டிவியில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகள், பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் மத்தியில் சில பழுது நீக்கும் நிகழ்ச்சிகளும் வரவே செய்கின்றன. 'நியூஸ் 7' தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகள் இந்த வகையிலானவை. அதில் ஒன்றுதான்,'அறிவுக் கொழுந்து' நிகழ்ச்சி. வாரந்தோறும் நியூஸ்7 சேனலில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணிக்கும் மாலை5 .00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது

அறிவுக்கொழுந்து நிகழ்ச்சி பொழுதைப் போக்கும் நிகழ்ச்சிகள் மத்தியில் அறிவைப் பெருக்கும் ஒன்றாக இது விளங்குகிறது என்று நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர். அதற்கான திட்டமிட்ட வடிவமைப்பில் இது உருவாக்கப் படுகிறது. இந்நிகழ்ச்சி மூன்று பிரிவுகளாக வருகிறது. முதலில் 'தங்கிலீஷும், சுத்த தமிழும்' பகுதி இடம் பெறுகிறது.

வியாபாரத்துக்காக நம் நாட்டில் புகுந்த ஆங்கிலம் இன்று நம் அன்றாட வாழ்க்கையில் பேசப்படும் தாய்மொழியில் எப்படியெல்லாம் கலந்திருக்கிறது என்பதைக் காட்டும் நிகழ்ச்சி. 'இன்விடேஷன் கொடுத்துட்டேன். ரிசப்ஷன் வந்திடு' என்கிறோம். ஒருவரியில் எவ்வளவு ஆங்கிலம் பாருங்கள். 'அழைப்பிதழ் கொடுத்து விட்டேன். வரவேற்புக்கு வந்துவிடு' என்று ஏன் சொல்வதில்லை ? இதற்குக் காரணம் என்ன? ஏன் தமிழை மறந்து வருகிறோம்?என்றெல்லாம் அலசுகிறது.

தமிழ் பற்றி விழிப்புணர்வு

தமிழ் பற்றி விழிப்புணர்வு

இந்நிகழ்ச்சியின் மூலம் ஆங்கிலத்தின் தாக்கத்தை அறிய வைப்பதுடன் தமிழில் பேசவேண்டும் என்கிற விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சி பொறுப்போடு உருவாக்கப்படுகிறது. அது மட்டுமல்ல இது வெறும் கருத்து சொல்லும் நிகழ்ச்சியாக இல்லாமல் கலகலப்புக்கும் பஞ்சமின்றி உருவாக்கப் பட்டுள்ளது.

வார்த்தையின் வரலாறு

வார்த்தையின் வரலாறு

'வார்த்தையும் வரலாறும்' 'அறிவுக் கொழுந்து' நிகழ்ச்சியின் இன்னொரு பகுதியாக வருவது 'வார்த்தையும் வரலாறும் . நாம் சாதாரணமாகப் பேசுகிற வார்த்தை எப்படி உருவானது? அதன் வரலாற்றுப் பின்னணி என்ன? என்பதை அறிவு பூர்வமாக ஆராய்ந்து கலகலப்பு சேர்த்து சொல்கிற நிகழ்ச்சி இது. வார்த்தைகள் பற்றிய நமது தவறான புரிதல் பற்றியும் அறியலாம்.

திருக்குறள் பெருமை

திருக்குறள் பெருமை

'குறள் அமுது' அடுத்த பகுதியாக வருவது 'குறள் அமுது' .. நாம் அதன் பெருமையை முழுதும் அறியாத ஓர் இலக்கியம் திருக்குறள். இது பிற இலக்கியங்களைப் போல தமிழருக்காக எழுதப் பட்டதல்ல. மொழிகடந்து, மதம், இனம் கடந்து ,பூகோள எல்லைகள் கடந்து மனிதர் யாவருக்கும் சொல்லப்பட்ட ஒன்றாகும். திருக்குறளின் மொழிநயம் தெரியாதவர்கள் கூடஅதன் கருத்து நயத்தை ரசிக்க முடியும்;ஏற்கமுடியும்.அப்படிப்பட்ட திருக்குறளை அதன் இனிமையை செழுமையை உணரும் படியாக உருவாக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் நிகழ்வு இது.

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

இந்த மூன்று நிகழ்வுக்ளும் சென்னை மாநகரக் கல்லூரி மாணவர், மாணவிகளை பங்கேற்க வைத்து இளமை இனிமை ததும்ப உருவாக்கப் படுகிறது. இதன் படப்பிடிப்பு விரிவடைந்து தமிழ்நாட்டின் பிற கல்லூரிகளிலும் பரவவுள்ளது . இந்நிகழ்ச்சி வாரந்தோறும் 'நியூஸ்7' டிவி சேனலில் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணிக்கும் மாலை 5.00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது .

English summary
News7tamil tv telecast new program Arivu Kozhundhu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil