»   »  360 டிகிரி கோணத்தில் சினிமா செய்திகளை அள்ளித்தரும் சினிமா 18

360 டிகிரி கோணத்தில் சினிமா செய்திகளை அள்ளித்தரும் சினிமா 18

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா செய்திகளை பார்க்கவும், படிக்கவும், கேட்கவும் அனைவருக்குமே பிடிக்கும். சினிமா ரசிகர்களுக்காகவே 360 டிகிரி கோணத்தில் சினிமா செய்திகளை ஒளிபரப்புகிறது நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி.

தமிழ் சினிமா இந்தியா சினிமாவின் தலைமையகமாக இருக்கிறது. தமிழ்த் திரையுலகில் இருந்து உருவாகும் இயக்குநர்களும், இசை அமைப்பாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் இந்திய திரையுலகை ஆட்சி செலுத்துகின்றனர். இந்நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் இந்திய சினிமா உலகின் அன்றாட நடப்புகளை அப்டேட் செய்யும் நிகழ்ச்சிதான் "சினிமா 18"

ஒவ்வொரு நாளும் சினிமாவில் நடந்துவரும் மாற்றங்கள், திரைக் கலைஞர்களின் புதியப் படங்கள், அவர்கள் ஏற்கெனவே நடித்து, பங்கேற்று பணிபுரிந்துவரும் படங்களின் இப்போதைய நிலை, வசூல் நிலவரங்கள் ஆகியவற்றை சினிமா 18 நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

News18 Tamilnadu new program Cinema 18

360 டிகிரி கோணத்தில் செய்தி

புதிதாக உருவாகி வரும் படங்களின் இப்போதைய நிலை என சினிமாவின் அனைத்து செய்திகளையும் 360 டிகிரி கோணத்தில் வழங்குகிறது சினிமா 18. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார் திவ்யா.

News18 Tamilnadu new program Cinema 18

பாலிவுட், ஹாலிவுட்

தமிழ் சினிமா செய்திகள் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஹாலிவுட் என ஒட்டுமொத்தத் திரையுலக செய்திகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும். புத்தம் புதிய ட்ரெய்லர்களின் அணிவகுப்பு, திரை நட்சத்திரங்களின் பேட்டிகள் என இது ஒரு கலர்ஃபுல் காம்போ.

News18 Tamilnadu new program Cinema 18

நியூஸ் 18

சினிமா 18 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதேநாள் இரவு 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பாகிறது.

English summary
News 18 tv channel telecast cinema program Cinema 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil