பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்க போகும் அதிர்ச்சி சம்பவம்...என்ன நடக்க போகுதோ?

சென்னை : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில நாட்களாகவே சண்டை, கண்ணீர், சென்டிமென்ட் என சென்று கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் அடுத்து என்ன நடக்க போகுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் பாப்புலரான, அதிகமானவர்களால் பார்க்கப்படும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. குடும்ப சென்டிமென்ட், கூட்டுக் குடும்ப பாசம், அண்ணன் - தம்பி ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள சீரியல். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார் பிரியா தம்பி.

கிட்டதட்ட 1000 எபிசோட்களை இந்த நெருங்கி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். கடந்த சில நாட்களாக சண்டை, கண்ணீர் என சென்று கொண்டிருந்த இந்த சீரியலில் இந்த வாரம் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடக்க உள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதைபதைப்புடன் ரசிகர்கள் ஆர்வமாக சீரியலை பார்த்து வருகிறார்கள்.

ரணகளமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு

ரணகளமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு

தனத்தின் பிறந்தநாளுக்காக சொந்தக்காரர்களை வீட்டிற்கு அழைக்கிறார்கள். அந்த சமயத்தில் முல்லையின் சிகிச்சைக்காக வாங்கிய கடனை திரும்ப தரும் படி கடன்காரர் வருவதால், வேறு வழியில்லாம் மீனாவிற்காக அவர் அப்பா செலவிற்கு கொடுத்த பணத்தை வாங்கி கடன்காரரிடம் கொடுத்து அனுப்புகிறார் ஜீவா. ஆனால் இதை கவனித்த மீனாவின் அப்பா ஜனார்த்தனன், கதிரை மோசமாக திட்டி, சண்டை போடுகிறார். கதிரை, ஜனார்த்தனம் அவமானப்படுத்திய தகவல் தெரிந்து, முல்லையின் பெற்றோர், ஜனார்த்தனனிடம் சண்டை போடுகிறார்கள்.

வீட்டை விட்டு வெளியேறும் கதிர்

வீட்டை விட்டு வெளியேறும் கதிர்

முல்லையின் பெற்றோர், மீனாவின் பெற்றோர், தனத்தின் பெற்றோர் என அனைவரும் மாறி மாறி பேசுவதால் சண்டை பெரிதாகிறது. இதனால் என்ன செய்வதென தெரியாமல் கோபத்தில் முல்லையை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார் கதிர். இதனால் மனமுடைந்த தவிக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம். வழியில் கதிரை பார்த்து, தனது வீட்டிற்கு அழைத்து செல்கிறார் மாமனார் முருகன். அப்போது அங்கு வந்து கெஞ்சி கதிரை மீண்டும் வீட்டிற்கு கூப்பிடுகிறார் கண்ணன். ஆனால் வீட்டிற்கு திரும்ப வர மறுத்து விடுகிறார் கதிர். இதோடு கடந்த வார எபிசோட் முடிந்தது.

அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி சம்பவம்

அடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி சம்பவம்

இந்நிலையில் இந்த வாரம், வீட்டில் சண்டை போடும் ஜீவா - மீனாவை சமாதானம் செய்யும் தனத்திடம், கதிர் வீட்டிற்கு வர மறுத்த விஷயத்தை சொல்கிறார் கண்ணன். இதனால் கோபத்துடன் கத்தும் சத்யமூர்த்தி, கதிரை மறந்து விட்டு அனைவரும் சாப்பிடும் படி சொல்கிறார். இரவில் படுத்திருக்கும் சத்யமூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதனால் பதறிப் போய் ஜீவா, கண்ணனை கூப்பிடுகிறார் தனம். சத்யமூர்த்தியை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். சத்யமூர்த்திக்கு என்ன ஆகும், சத்யமூர்த்தியை பார்க்க கதிர் வருவாரா, அடுத்து என்ன நடக்கும் என்பது தான் இனி நடக்க போகும் ட்விஸ்ட்.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

ஏற்கனவே கண்ணன் வீட்டை விட்டு வெளியே போன போது அவரது அம்மா லட்சுமி மரணமடைவார். இதை சுட்டிக்காட்டி கண்ணன், கதிரை வீட்டிற்கு கூப்பிடுவார். அப்போது ரசிகர்கள் ஓரளவிற்கு அடுத்து யாருக்கோ என்னவோ நடக்க போகிறது என்பதை ஓரளவிற்கு கணித்து விட்டார்கள். அதே போல சத்யமூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது. இனி அடுத்து என்ன நடக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் ஒன்று சேருமா என்பது தான் ரசிகர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X