»   »  சூர்ய நமஸ்காரம், முத்திரை… ஆன்மீக ஆரோக்கியம் தரும் நித்ய ஸ்தோத்திரம்

சூர்ய நமஸ்காரம், முத்திரை… ஆன்மீக ஆரோக்கியம் தரும் நித்ய ஸ்தோத்திரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலைப்பொழுதை மிகச்சரியாக துவக்க உதவும் அற்புதமான நிகழ்ச்சி நித்ய ஸ்தோத்திரம். உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வழிகாட்டும் ஒரு நிகழ்ச்சி. காலை துவக்கம் நன்றாக இருந்தால் அந்த நாளே மிக இனிமையாக இருக்கும் என்பதால் இந்நிகழ்ச்சி காலையில் ஒளிபரப்பப்படுகிறது.

திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7.00 மணி முதல் 7.45 மணி வரை 45 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனம் இரண்டையும் பெற ஆண்டாண்டுகளாக சூரிய நமஸ்காரம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியைப் பார்த்து நேயர்கள் சூரிய நமஸ்காரம் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம். இதனுடன் சூரிய பகவானின் முக்கியத்துவத்தையும் மக்கள் அறியலாம்.

நவகிரக கோவில்

நவகிரக கோவில்

அனுதினமும் அந்தந்த கிழமைக்கான கிரகத்தின் கோவில் இந்த நவகிரக கோவில் பகுதியில் ஒளிபரப்பாவதை நேயர்கள் தரிசித்து நவகிரகங்களின் அனுகிரகம் பெறலாம்.

நகர நிகழ்வுகள்

நகர நிகழ்வுகள்

நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது அருகாமையிலோ நடக்கும் ஆன்மீக தார்மீக இந்நிகழ்ச்சியைப் பற்றி இப்பகுதி மூலம் தெரிந்து கொண்டு பயனடையலாம்.

ஆசார விசாரம்

ஆசார விசாரம்

நாம் அன்றாடம் பின்பற்றி வரும் சடங்கு சம்பிரதாயங்களின் அடிப்படை காரணத்தை தெளிவாக விளக்கும் பகுதி தான் ஆசார விசாரம்.

மந்திரம்

மந்திரம்

அமைதியான மனதுடன் வளமோடு வாழ்வதற்கான மந்திரங்ளைப்பற்றி இப்பகுதியில் அறியலாம்.

முத்திரை

முத்திரை

பஞ்ச பூதங்களை ஆதாரமாகக் கொண்டுள்ள நமது உடல் இயக்கத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை சரி செய்வதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் முறையை கைவிரல்களில் முத்திரைகள் செய்து பயன்பெறுவது எப்படி என்பதை விளக்கும் பகுதி முத்திரை.

இவையனைத்தும் நித்ய ஸ்தோத்திரம் நிகழ்ச்சியில் காணலாம்.

English summary
A great show to start your morning, it stimulates the body, mind and soul. It is divided into four segments. Nithiya Stothram program telecast on Sri Sankara TV on every morning at 7.00 am to 7.45 am.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil