twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’நீயா நானா’ மூன்று தம்பதிகள்..மூன்று கோணங்கள்..உருகிய தந்தை, ஆதர்ச கணவன், அலைபாயும் மனைவி

    |

    நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் மனைவி குறைவாக சம்பாதிக்கும் கணவன். அதனால் வரும் பிரச்சினை குறித்து நடந்தது.

    இதில் மூன்று விதமான தம்பதிகள் நிகழ்ச்சியை கவர்ந்தனர். சொந்த பந்தங்கள் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்ட கணவன், மனைவியை முன்னேற்றிய ஆதர்ச கணவன், கணவனால் தினமும் அலைபாயும் மனைவி என 3 தம்பதிகள் அனைவரையும் கவர்ந்தனர்.

     குடும்ப உறவுகளின் உளவியலை பேசும் நிகழ்ச்சி

    குடும்ப உறவுகளின் உளவியலை பேசும் நிகழ்ச்சி

    நீயா நானா நிகழ்ச்சி உளவியல் ரீதியாக ஒரு விஷயத்தை அணுகும் நிகழ்ச்சி. வாழ்வியல் சம்பந்தமான நிகழ்ச்சி என்றுகூட சொல்லலாம். இதில் பங்கேற்போர் சமுதாயத்தில் நிலவும் பிரச்சினைகளில் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல் எடுத்துக்கொள்ளலாம். கடந்தவாரம் பணிப்பெண்களும், இல்லத்தரசிகளும் நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்துக்குள்ளானது. இந்த வாரமும் அதேப்போன்று குடும்ப உறவுகளுக்குள் உள்ள பிரச்சினையை அணுகியது.

     மூன்று தம்பதிகள் மூன்று ரகம்

    மூன்று தம்பதிகள் மூன்று ரகம்

    இப்பொழுது நிகழ்ச்சிக்கு செல்வோம் நிகழ்ச்சியில் பேசிய மூன்று தம்பதிகள் மூன்று வெவ்வேறு கோணங்களை பேசினர். ஒருவர் தன்னுடைய வியாபாரம் நன்றாக இருந்த காலத்தில் தன்னை மதித்த தன்னுடைய மனைவியின் வீட்டு உறவினர்கள் தற்போது தன்னுடைய வியாபாரம் நஷ்டம் அடைந்து தான் வீழ்ச்சியடைந்த நிலையில் தன்னிடம் யாரும் பேசுவது கூட இல்லை, கடந்த ஆறு வருடமாக பேசுவதில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார். அவருடைய தோற்றம், அவருடைய உடல் மொழி அனைத்தும் மிகவும் அவமானப்பட்ட மனநிலையில் உள்ள ஒருவர் அல்லது மிகவும் மன உளைச்சலில் உள்ள ஒருவருடைய வெளிகாட்டுதலாக இருந்தது.

     மன உளைச்சலை அடக்கிக்கொண்ட கணவன் அலட்சிய மனைவி

    மன உளைச்சலை அடக்கிக்கொண்ட கணவன் அலட்சிய மனைவி

    பொதுவாக பொதுவெளியில் சாதாரணமாக மன உளைச்சலை யாரும் காட்டிக்கொள்ள மாட்டார்கள். இருப்பதை மறைத்து தெம்பாக இருப்பது போல் தான் யாரும் காட்டிக் கொள்வார்கள். ஆனால் அவருடைய முகபாவனையில் அவர் பேசும்பொழுது தான் அவமானப்பட்டதை மறைக்க முடியாமல் வெளிப்படுத்தினர். இதில் வருத்தத்துக்குரிய விஷயம் என்னவென்றால் தனது கணவருடைய இந்த நிலைமைக்கு காரணம் தன் கணவர் தான் தன் வீட்டார் அல்ல என்று நியாயப்படுத்தி பேசினார் அவர் மனைவி. அவரது ஒவ்வொரு செயலிலும் தன் கணவரை மட்டம் தட்டும் விதமாகவே இருந்தது. அதை அவர் சிரித்துக் கொண்டே கூறும்பொழுது கோபிநாத்திற்கு படு கோபமாக வந்தது.

     6 ஆண்டுகளாக உறவினர்கள் புறக்கணிப்பு..கண்டுக்கொள்ளாத மனைவி

    6 ஆண்டுகளாக உறவினர்கள் புறக்கணிப்பு..கண்டுக்கொள்ளாத மனைவி

    ஆறு ஆண்டுகளாக உங்கள் உறவினர்கள் உங்கள் கணவரை பற்றி சிறிய அளவு கூட விசாரிக்காது உங்களுக்கு ஏன் என்று கேட்க தோன்றவில்லையா? என்று கோபிநாத் கேட்ட பொழுது, "சார் இவர் வியாபாரத்துல நஷ்டம் சார் அதனாலதான் அவர்கள் அப்படி இருக்கிறார்கள், நாளைகே நல்லா வந்துட்டாருன்னா பேசுவாங்களோ என்னமோ சார்" என்று அவர் பேசியது பிரச்சனை மனைவியின் உறவினர்களிடமில்லை, மனைவியிடம் தான் உள்ளது என்பதை தெளிவாக காட்டியது. அதற்கு அடுத்த சம்பவம் தான் மிகுந்த அதிர்ச்சி கொடுத்தது, என்னுடைய மகளின் பிராக்ரஸ் ரிப்போர்ட்டில் கையெழுத்திட கூட என்னை அனுமதிப்பதில்லை என் மனைவியே கையெழுத்து போட்டுக் கொள்கிறார் என்று அவர் சொன்னார். "சார் அவர் ஒரு மணி நேரமாக அதை பார்த்துக் கொண்டிருக்கிறார், ஸ்பெல்லிங் கூட்டிக்கொண்டிருக்கிறார்" என்று சொன்னார்.

     கோபிநாத் கொடுத்த சரியான பதிலடி

    கோபிநாத் கொடுத்த சரியான பதிலடி

    என் மகள் வாங்கிய மார்க்கை பார்த்து நான் படிக்கவில்லை ஆனால் அவர் படிக்கிறார் என்பதை பார்த்து சந்தோசப்பட்டேன் அதற்காக பார்த்துக் கொண்டிருந்தேன் என்று அவர் சொல்ல, "இல்ல சார் இவர் ஒவ்வொரு எழுத்தா கூட்டி படிச்சிட்டு இருக்கார் சார்" என்று பொதுவெளியில் தன் கணவரை மட்டம் தட்டுவது பற்றி கவலைப்படாமல் அந்த பெண் பேசியது கோபிநாத்துக்கு சற்று கோபத்தை வரவழைத்தது. அவர் இன்னும் 90 களில் வாழ்ந்து வருகிறார் என்று வேறு குற்றம் சாட்டினர். இந்த நிலையில் கோபிநாத் சற்றே கோபமாகி அந்த பரிசு பொருளை கொண்டு வாப்பா என்று சொல்லி கடைசியில் தான் எப்பொழுதும் சிறப்பாக பேசியவர்களுக்கு கொடுப்போம் ஆனால் இந்த முறை ஒரு சிறந்த தந்தை என்கிற முறையில் இவருக்கு தருகிறேன் என்று அந்த நபரை அழைத்து அவர் மகளையும் அழைத்து அவர் கையால் கோபிநாத் கொடுக்க வைத்தார்.

     சிறந்த தந்தையாக அங்கரித்த கோபிநாத்

    சிறந்த தந்தையாக அங்கரித்த கோபிநாத்

    இது கோபிநாத் அந்த பெண்ணுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் சொன்ன ஒரு மென்மையான பதில் என்று எடுத்துக் கொள்ளலாம். கோபிநாத் அந்த சிறுமியிடம் உன் தந்தையை பற்றி சொல் என்ற சொன்ன பொழுது அவர் மிகவும் அன்பானவர், அவர் எதையும் சாதிப்பார் என்று அந்த பெண் சிறுமி கூறிய போது தந்தையின் முகத்தில் வந்த முக பாவங்கள் எந்த நடிகர்கள், கலைஞர்கள் முகத்திலும் பார்க்க முடியாத ஒன்று. ஒருபுறம் வேதனை, மறுபுறம் பொது வெளியில் அழக்கூடாது என்கிற எண்ணம், தன் மகள் தன்னைப் பற்றி பெருமையாக சொன்னதால் வந்த ஒரு மகிழ்ச்சி அனைத்தும் கலந்த ஒரு கலவையாக அவருடைய முக பாவங்கள் இருந்தது. கோபிநாத் அவரை அணைத்து நீங்கள் தான் சிறந்த தந்தை இதை நாங்கள் சொல்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தார்.

     ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் பயணம் செய்து பணி செய்யும் மனைவி அலட்சிய கணவன்

    ஒரு நாளைக்கு 200 கிலோமீட்டர் பயணம் செய்து பணி செய்யும் மனைவி அலட்சிய கணவன்

    இரண்டாவது தம்பதி, மனைவி தன் குடும்பம் முன்னேறுவதற்காக அவரே படித்து இன்று நல்ல வேலையில் இருக்கிறார். ஆனால் தான் வேலை செய்யும் இடத்திற்கு செல்ல தினமும் 100 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் மீண்டும் திரும்ப 100 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். ஆனால் அதைப்பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத கணவர், வீட்டில் பாத்திரங்களை அப்படியே போட்டு விட்டு போகிறார் என்று குற்றம் சாட்டினார். போட்டுவிட்டு அல்ல வேலை செய்துவிட்டு அவரால் முடிக்க முடியாமல் செல்கிறார் என்று திருத்தினார் கோபிநாத். எது எப்படியோ சார் அந்த அம்மா வேலையை விட்டு விட்டு வீட்டில் இருக்கட்டும் என்று சாதாரணமாக சொன்னார் கணவர்.

     வேலை போனாலும் பரவாயில்லை என் மனைவி வேலைக்கு போக வேண்டாம்

    வேலை போனாலும் பரவாயில்லை என் மனைவி வேலைக்கு போக வேண்டாம்

    வீட்டு வேலை பாத்துகிட்டு இருக்கட்டும் என்று கணவர் சொன்னார். தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை, குடும்பம் வசதி குறைவாக இருந்தாலும் பரவாயில்லை தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவி வேலையை விட்டு விட வேண்டும் என்று அவர் பேசியதை யாரும் ஏற்கவில்லை. அதே நேரம் குறைவாக சம்பாதிக்கும் நீங்கள் ஏன் அவர் வேலை செய்யும் ஊரில் சென்று அங்கே ஒரு வேலையை தேடிக் கொள்ளக் கூடாது என்று கோபிநாத் கேட்க, "அதுவெல்லாம் சாத்தியம் இல்லை சார் நான் படிச்சுக்க இந்த நிலைமைக்கு வந்தேன் என்று அவர் சொல்ல அதை தானே சார் உங்கள் மனைவிக்கும் அவரும் படித்து இந்த நிலைமைக்கு அந்த கம்பெனியில் வேலை செய்கிறார் சீனியர் மிக விரைவில் பதிவு வேறு கிடைக்கும் நீங்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்களே என்று கோபிநாத் மடக்கி கேள்வி கேட்டார்.

     ஆதர்ச கணவன்..சபாஷ் மனைவி

    ஆதர்ச கணவன்..சபாஷ் மனைவி

    மூன்றாவது தம்பதி ஒரு ஆதர்ச தம்பதி என்று சொல்லலாம் திருமணம் செய்த பொழுது ஒன்றுக்கும் உதவாத பெண்ணை திருமணம் செய்து கொண்டான், அந்தப் பெண் உருப்படாமல் தான் போவாள் என்று சாபம் விட்ட தன்னுடைய உறவினர்களுக்கு வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் கூரை வீட்டில் இருந்தாலும் கஷ்டப்பட்டு மனைவியை படிக்க வைத்து இன்று அவர் நல்ல நிலையில் ஆசிரியராக பணிபுரிவதும், கூடிய விரைவில் மாவட்ட கல்வி அதிகாரியாக ஆக்க வேண்டும் என்பதற்காக படிக்க வைப்பதாக கணவர் சொன்னார். மனைவி பெருமையாக சொல்லி கணவருக்கு நன்றி சொன்னார். இதெல்லாம் ஒரு விஷயமே அல்ல சார் என் சொந்தக்காரர்கள் என் மனைவியை கேவலமாக பேசிய போது இவரை படிக்க வைத்து நல்ல நிலையில் ஆளாக்கி குடும்பம் உயர வேண்டும் என்கிற ஒரே லட்சியம் என் முன் இருந்தது.

     இதுவல்லவோ சவால்..இவரல்லவோ கணவன்

    இதுவல்லவோ சவால்..இவரல்லவோ கணவன்

    அதற்காக கடினமாக உழைத்தேன் இன்று எங்கள் குடும்பத்தில் வசதி கூடி விட்டது. என் உறவினர்கள் என்னை மதிக்கிறார்கள் என்று தெரிவித்தார். இது போன்று குடும்பம் என்றும் வீழ்ச்சி அடையாது, இந்த குடும்பம் அதன் அடுத்த தலைமுறை மிக சிறப்பாக இருக்கும் என்று நீயா நானா கோபி வாழ்த்தினார். இது போன்ற நிகழ்ச்சிகள் இன்றைய சூழ்நிலையில் குடும்பங்கள், கணவன், மனைவி உறவு, குடும்ப உறவுகள் எந்த நிலையில் இருக்கின்றன. பணம், பொருளாதாரம் போன்ற விஷயங்கள் குடும்பங்களை எந்த அளவிற்கு உறவுகளுக்குள் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் காட்டுகிறது.

    English summary
    This week on Neeya Nana, the highest earning wife is the lowest earning husband on the show. So it happened about the problem that comes up. Three types of couples graced the show. 3 couples like the husband suffering from the neglect of his own bonds, the ideal husband who improved his wife, and the wife who is swayed by her husband every day attracted everyone.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X