For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எனக்கு சினிமா ஆசை இல்லை: 'சினிமா செய்திகள்' அர்ச்சனா மோகன்

  By Mayura Akilan
  |

  காலை 10 ஆனாலே போதும் சன் டிவியில் சினிமா செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம் என்பதை தெரிந்து கொள்ளலாம். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து சினிமா செய்திகள் வாசிக்கும் தொகுப்பாளர் அர்ச்சனா மீடியாவிற்கு புதியவரல்ல. அனைவருக்கும் தெரிந்தவர்தான்.

  பொதிகை தொலைக்காட்சியில் தொடங்கி சன் தொலைக்காட்சி வரை சின்னத்திரை உலகில் நீண்ட பயணம் அர்ச்சனா உடையது. சீரியல், சினிமா என தொட்டுவிட்டு வந்திருந்தாலும் தொகுப்பாளராக இருப்பதுதான் தன்னுடைய விருப்பம் என்கிறார்.

  மழை பெய்யும் மாலை நேரத்தில் சூடாக தேனீர் குடித்துக் கொண்டே தன்னுடைய பெர்சனல் பக்கங்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டார் படியுங்களேன்.

  சென்னை பொண்ணுதான்

  சென்னை பொண்ணுதான்

  பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமே சென்னைதான். மேற்கு மாம்பலம் பிறந்த இடமாக இருந்தாலும் இப்போது புகுந்த வீடு கே.கே. நகர். அப்பா சினிமா பிஆர்ஓ, அம்மா ஹவுஸ் ஒய்ப். தங்கை மியூசிக் காலேஜில் படிக்கிறாள் நன்றாக பாடுவாள்.

  மாதவன் பேட்டி

  மாதவன் பேட்டி

  அப்பா ஐங்கரன் பிலிம்ஸ்சில் வேலை செய்தார். நான் ப்ளஸ் டூ படிக்கும் போது அவர் மூலம் பொதிகையில் சினிமா நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய முதல் இன்டர்வியூ மாதவனுடன் என்பதால் அது மறக்கமுடியாது.

  சின்னத்திரை பயணம்

  சின்னத்திரை பயணம்

  நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தாலும் படிப்பை விடவில்லை. பி.சி.எப், பி.ஜி.டி.சி.ஏ படித்துவிட்டு பேங்க்கில் வேலை பார்த்தேன். பிறகு நிகழ்ச்சி தொகுப்புதான் முழுநேர வேலையாகிப் போனது. பொதிகையில் சினி சிற்பிகள், ஜெயா டிவியில் இனிய இல்லம், சன் டிவியில் பிறந்தநாள் வாழ்த்து, கே.டிவியில் சினிமா நட்சத்திரங்கள் பேட்டி என தொடர்ந்தது. இப்போது 2 வருடமாக சினிமா செய்திகள் தொகுத்து வழங்குகிறேன்.

  சீரியல் வாழ்க்கை

  சீரியல் வாழ்க்கை

  ராதிகா மேடத்துடன் அரசி சீரியலில் நடித்திருக்கிறேன். மேகலா, ரேகா ஐ.பி.எஸ், சூர்யவம்சம் என நான்கு சீரியலில் நடித்த அனுபவம் இருக்கிறது. திருமணத்திற்கு சீரியலில் நடிப்பதில்லை.

  புகுந்த வீட்டு சந்தோசம்

  புகுந்த வீட்டு சந்தோசம்

  என்னுடைய கணவர் வீட்டில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. மாமியார் எனக்கு இன்னொரு அம்மா. கணவர் மோகன் சாப்ட்வேர் எஞ்ஜினியர். நான் மீடியாவில் இருப்பது அவருக்கு ரொம்ப சந்தோசம். 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறாள். அவளை பார்ப்பதே பெரியவேலை என்பதால் நிகழ்ச்சித் தொகுப்பு மட்டுமே போதும் என்று நினைக்கிறேன்.

  நல்லா சமைப்பேன்

  நல்லா சமைப்பேன்

  மீடியாவில் இருந்தாலும் நான் நன்றாக சமைப்பேன். கணவருக்கு நான் சமைக்கும் ரவா தோசையும், வேர்கடலை சட்னியும் ரொம்ப பிடிக்கும். பாப்பாவுக்கும் அது பேவரைட் ஆகிப்போச்சு.

  என்னை மாதிரியே பேசுவா

  என்னை மாதிரியே பேசுவா

  என்னோட பொண்ணு டிவி ஸ்கிரீன்ல என்னைப் பார்த்து அதே மாதிரி இமிடேட் பண்றா. இன்னொரு ஆங்கர் இப்போதிருந்தே ரெடி ஆயிட்டு வர்றான்னு நினைக்கிறேன்.

  நடனம் எனக்கு பிடிக்கும்

  நடனம் எனக்கு பிடிக்கும்

  அம்மா டான்ஸ் டீச்சர் என்பதால் நடனம் என்னுடைய ரத்தத்தில் ஊறியிருக்கிறது. நான் முறையாக டான்ஸ் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் சன்டிவியில் மஸ்தானா மஸ்தானா ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடியிருக்கிறேன். நிகழ்ச்சித் தொகுப்பு தவிர டான்ஸ் எனக்கு பிடித்தமான விசயம். தொடர்ந்து 2 வருடங்கள் நிகழ்ச்சித் தொகுப்பு செய்கிறேன். எனக்கு கொஞ்சம் கூட போரடிக்கவில்லை. இன்னும் எப்படி அதை டெவலப் செய்யலாம் என்றுதான் யோசிக்கிறேன்.

  சினிமா ஆசை கிடையாது

  சினிமா ஆசை கிடையாது

  டிவியில் வந்த பின்னர் சினிமாதான் அடுத்த சாய்ஸ்ஆக இருக்கும் என்று நினைப்பார்கள். எனக்கு இப்போதைய கமிட்மெண்ட் நிறைய இருக்கிறது. ஏற்கனவே திருமணத்திற்கு முன்பு மச்சான், தம்பிக்கோட்டை படத்தில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவே நடித்திருக்கிறேன். இப்போதைக்கு சினிமா செய்திகள் தொகுப்பாளராக இருக்கிறேன். எதிர்காலத்தில் சினிமா வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறிவிட்டு சந்தோசமாக சிரித்தார் அர்ச்சனா. நமக்காக அரைமணி நேரம் ஒதுக்கிய அர்ச்சனாவிற்கு நன்றி சொல்லி விடை பெற்றோம்.

  English summary
  Sun TvCompere Archana Mohan says she has no aversion for cinema
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X