இனி ரியாலிட்டி ஷோவே வேண்டாம்...கண்ணீர் விடும் விஜயலட்சுமியின் கணவர்

சென்னை : வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமான சென்னை 28 படத்தில் ஹீரோயின் கேரக்டர் மூலம் நடிக்க வந்தவர் விஜயலட்சுமி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் விஜயலட்சுமி நடித்தார். பிறகு டிவி சீரியலிலும் சில காலம் நடித்த விஜயலட்சுமி, தற்போது சிம்புதேவன் இயக்கிய கசட தபற படத்திலும் நடித்துள்ளார்.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 2 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட விஜயலட்சுமி, தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். செப்டம்பர் 12 ம் தேதி துவங்கிய இந்நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார்.

சாகசங்களை மையமாகக் கொண்ட இந்த போட்டியில் விஜயலட்சுமி, லட்சுமி பிரியா சந்திரமெளலி, விக்ரந்த், நந்தா, காயத்ரி ரெட்டி, ஸ்ருஷ்டி டாங்கே, உமாபதி ராமைய்யா, பெசன்ட் ரவி, பார்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி ஆப்பிரிக்க காடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பாடகர்கள், உடற்பயிற்சியாளர்கள் என பல தரப்பட்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு கோடி பரிசு

ஒரு கோடி பரிசு

கிட்டதட்ட பிக்பாஸ் போட்டியை போல் போட்டியாளர்கள் தங்களின் மொபைல் போன் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களை ஒப்படைத்து விட வேண்டும். இயற்கை சூழ்ந்த தீவில் 90 நாட்கள் தங்க வேண்டும். போட்டியாளர்களின் மன வலிமை மற்றும் உடல் வலிமையை பரிசோதிக்கும் வகையில் நாளுக்கு நாள் கடுமையான டாஸ்க்குகள் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுபவருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும்.

3 மாத போட்டி

3 மாத போட்டி

போட்டியாளர்கள் காடர்கள், வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 3 மாதங்களுக்கு போட்டிகள் மிக கடுமையாக நடத்தப்படுமாம். அவை அனைத்தையும் தாக்குபிடித்து, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுபவர் தான் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில் திருமண நாளில் மனைவி உடன் இல்லாததை நினைத்து விஜயலட்சுமியின் கணவர் மிக உருக்கமாக இன்ஸ்டாகிராமில் கருத்து பதிவிட்டுள்ளார்.

மனைவியை பிரிந்த கணவர்

மனைவியை பிரிந்த கணவர்

விஜயலட்சுமியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோவை பகிர்ந்துள்ள ஃபெரோஸ், Happy Anniversary Baby. ஒவ்வொரு நாளும் உனது சிரித்த முகத்தை பார்த்து தான் நான் எழுவேன். நாள் முழுவதும் உன்னுடன் இருப்பேன். சில நாட்கள் த்ரில்லிங்காக, சில நாட்கள் சாகசமாக அல்லது ஆக்ஷன் கலந்ததாக இருக்கும். ஆனால் எப்போதும் இறுக்கமாக, வேதனையாக இருந்ததில்லை, நீ என்னை சுற்றி இருந்ததால்.

இனி ரியாலிட்டி ஷோ வேண்டாம்

இனி ரியாலிட்டி ஷோ வேண்டாம்

தற்போது உன்னை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். எதாலும் இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியாது. எப்போதும் நான் பார்க்க விரும்புவதெல்லாம் உனது சிரித்த முகம் தான். அதை எப்போது உனக்கு தர என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். லவ் யூ 3000. ப்ளீஸ் இனி எந்த ரியாலிட்டி ஷோவும் வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

சோஷியல் மீடியாவில் பிரபலம்

சோஷியல் மீடியாவில் பிரபலம்

விஜயலட்சுமியின் நீண்ட நாள் நண்பரான ஃபெரோஸ் முகம்மது, விஜயலட்சுமியை 2015 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஒரு மகன் உள்ளான். அடிக்கடி தனது வாழ்க்கை நிகழ்வுகளை ஃபோட்டோ மற்றும் வீடியோவாக சோஷியல் மீடியாவில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் விஜயலட்சுமி. தற்போது அவரின் பிரிவை தான் ஃபெரோஸ் இப்படி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X