ஜீ தமிழ் சீரியல்கள்: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

கெட்டிமேளம்: முருகனின் அம்மா என்ன விட்டு விடு என்று கெஞ்ச மகேஷ் முடியாது என்று மறுக்கிறான். இதையெல்லாம் மறைந்திருந்து அஞ்சலி பார்த்து விடுகிறாள். பிறகு மகேஷ் இங்கிருந்து கிளம்ப அஞ்சலி ஒரு ரவுடியை திசை திருப்பி அந்த அம்மாவின் கட்டுக்களை அவிழ்த்து விடுகிறாள். அங்கிருந்து இருவரும் தப்பிக்கும் நேரத்தில், ரவுடி ஒருவன் அஞ்சலியை பார்த்து விட, அவனை கட்டையால் அடித்து தாக்கி அங்கிருந்து தப்பிக்கின்றனர். இருவரும் வெளியே ஓடி வர ஒரு கட்டத்தில் தனித்தனியாக பிரிந்து விடுகின்றனர். அஞ்சலி முருகனின் அம்மாவை மிஸ் செய்து விட்டு தேட தொடங்குகிறாள்.

மறுபக்கம் ரவுடிகள் முருகனின் அம்மா காணாமல் போன விஷயத்தை தெரியப்படுத்த மகேஷ் டென்ஷன் ஆகிறான். குடோனுக்கு வந்து ரவுடிகளை போட்டு அடிக்கிறான். சிசிடிவி காட்சிகளை வைத்து அவர்கள் சென்ற வழியில் பின் தொடர்ந்து தேட சொல்கிறான். முருகனின் அம்மா தப்பித்து கோவில் வாசலில் பிச்சைக்காரரகளுடன் உட்காருகிறாள். இதைத் தொடர்ந்து ரேவதி மற்றும் முருகன் துணை இருவரும் கோவிலுக்கு வருகின்றனர். இந்தம்மா எந்த ஒரு சலனமும் இல்லாமல் வேதனையுடன் அமர்ந்திருப்பதை பார்க்க ரேவதி, முருகனை சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லி ஏற்றி விடுகிறாள். முருகன் அம்மாவை பார்க்காத நிலையில் அவனுக்கு அவனது அம்மா போட்டோ போனில் கிடைக்கிறது. போனில் அம்மாவின் முகத்தை பார்த்த முருகன் நேரில் அம்மாவின் முகத்தை பார்ப்பானா என்ற பில்டப் காட்சிகள் நகர்கின்றன. அஞ்சலி துளசிக்கு தகவல் கொடுக்க இருவரும் ஒருவரின் அம்மாவை தேட மறுபக்கம் மகேஷும் தேடுகிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: இசக்கியின் குழந்தைக்கு சூடாமணி என பெயர் வைத்து தொட்டிலில் போட்டு எல்லோரும் சந்தோஷப்பட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்றுபார்க்கலாம். அதன் பிறகு அடுத்ததாக தலை தீபாவளி வருவதால் ரத்னா, அறிவழகன் மற்றும் வீரா, சிவபாலன் ஆகியோரின் தல தீபாவளியை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கின்றனர். அடுத்ததாக முத்துப்பாண்டி தல தீபாவளி கொண்டாடுவதற்காக சண்முகத்திடம் பணத்தை கொடுக்க சண்முகம் வேண்டாம் என்று மறுக்கிறான். முத்துப்பாண்டி இந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடு என்று சொல்லிக் கொடுக்க மீண்டும் மறுக்க பரணி அதை வாங்கிக்கொண்டு முத்துப்பாண்டியை அனுப்புகிறாள். அதன் பிறகு சண்முகத்தை வெளியே அழைத்துச் செல்கிறாள். மறுபக்கம் வீரா ஸ்டேஷனில் இருக்க அங்கு வந்த சிவபாலன் டீ குடித்துக் கொண்டிருக்க இதை பார்த்த வீரா அவனிடம் சண்டை இடுகிறாள். அங்கு வந்த சௌந்தரபாண்டி உனக்கு இங்க என்னடா வேலை என்று சிவபாலனை கிட்ட வீரா இவனுக்கு சூடு சொரணை இல்லை என்று கோபப்படுகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: நேற்றைய எபிசோடில், மங்காவும் ருக்குமணியும் இசையின் நிச்சயத்தை நிறுத்த வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம். இசைக்கு காது கேட்காது என்ற உண்மையை ஒரு லெட்டரில் எழுதி அதை உள்ளே கொடுத்து அனுப்ப பானுமதி, சிந்தாமணி என ஒவ்வொருவரின் கைக்கு வந்தும் அதை படிக்காமல் கை மாற்றி, கடைசியாக விஷால் கைக்கு இதே கடிதம் வருகிறது. அவன் படிக்க போகும் சமயத்தில் நண்பர்கள் இங்க என்னடா பண்ணிட்டு இருக்க என்று பிடிங்கி வீசி விடுகின்றனர். அடுத்து ட்ரைவர் கம்ப்யூட்டர் ஜாதகம் கிடைத்து விட்டதாக சொல்ல ராகவ் மற்றும் இசை என இருவரும் கீழே வருகின்றனர். ஆனால், ஜாதகத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்க குழப்பம் அடைகின்றனர். இந்த நேரத்தில் அங்கு வரும் பானுமதி மற்றும் சிந்தாமணி உன்னால் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது என்று சவால் விடுகின்றனர்.

அடுத்து ப்ரியாவின் அப்பா மண்டபத்திற்கு வந்து பானுமதியை சந்தித்து பணம் வேண்டும் என்று கேட்க அவள் வளையலை கழட்டி கொடுத்து அனுப்புகிறார். அவர் ப்ரியாவிடம் வளையலை கொடுக்க அதை பார்த்த அவள் எங்க திருடிட்டு வந்த என்று கேட்க தீப்தி என்ற பெண்ணின் ஜாதகத்தை மாற்றி எழுதி கொடுத்ததாக சொல்ல ப்ரியாவுக்கு சந்தேகம் வருகிறது. உடனே இசையை சந்தித்து விஷயத்தை சொல்ல இசையை அப்பாவை அழைத்து வர சொல்லி மேலே செல்ல பானுமதி ப்ரியாவை கட்டையால் தலையில் தாக்கி மயங்க வைக்கிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X