ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 21ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

சென்னை: கெட்டிமேளம் சீரியலில், பள்ளிகளில் விளையாடிக்கொண்டிருந்த தீயாவை கடத்திக் கொண்டு சென்று விடுகின்றனர். பள்ளிக்கு சென்ற துளசி தியாவை பல இடங்களில் தேடுகிறாள். ஆனால். தியா கிடைக்காததால் மனம் உடைந்து போன துளசி என் குழந்தை தியாவை காணவில்லை என அம்மாவிற்கு ஃபோன் செய்து புலம்புகிறாள். துளசியை சமாதானம் செய்யும் வெற்றி, தியாவை நான் எப்படியாவது கண்டுபிடித்து வருகிறேன் தியா, துளசிக்கு மட்டும் மகள் இல்லை. எனக்கும் மகள் தான். அதனால் நான் நிச்சயமாக கண்டுபிடித்து விடுவேன் என அவளை அமைதியாக இருங்கள் என சொல்கிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: அண்ணா சீரியலில் இதுவரை, அனைவரும் சிறப்பாக தலை தீபாவளியை கொண்டாடிய நிலையில், அவர்களின் கொண்டாட்டத்தை பார்த்து கடுப்பான சௌந்தரபாண்டியன், பாண்டியம்மாளை ஏதோ ஒரு திட்டத்தை சொல்லி அவர்களின் வீட்டுக்குள் அனுப்புகிறான். பாண்டியம்மாள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் வீட்டிற்குள் வருகிறாள் என்பதை தெரிந்து கொண்ட வைகுண்டம், பாண்டியம்மாளை வீட்டுக்குள் விட மாட்டேன் என்று, துரத்தி அடிக்கிறார். ஆனால் பாண்டியம்மாள், சவுந்தரபாண்டியன் உண்மையான முகம் எனக்கு இப்போதுதான் தெரிந்தது. நான் பல தவறுகளை செய்து இருக்கிறேன். என்னை இந்த நேரத்தில் வீட்டை விட்டு விரட்டிவிட்டான். இப்பொழுது நான் எங்கே போவேன் இன்று தெரியவில்லை. இன்னைக்கு இரவு மட்டும் நான் உங்கள் திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் என சொல்கிறாள். பொய்யாக நடித்து அழுததால், அனைவரும் வீட்டுக்குள் சென்றுவிட, சொளந்தரபாண்டியன் போன் செய்து நம்ம திட்டப்படி வீட்டிற்குள் போய்ட்டியா... நான் நாளை காலை வீட்டுக்கு வருகிறேன் என்கிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம் சீரியல்: பாரிஜாதம் சீரியலில், மகளின் திருமணம் நின்றுவிட்ட ஆத்திரத்தில் இருந்நும் வான்மதி, வர்ஷினியை கடத்தி வைத்துக்கொண்டு, இசைக்கு போன் செய்து இந்த திருமணத்தில் வர்ஷிணிக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி நிறுத்த சொல்கிறாள். இதனால் பதறிப்போன இசை, இந்த வர்ஷணியை கடத்தியை விஷயத்தை சுபத்ராவிடம் சொல்ல, அந்த வான்மதிக்கு அவ்வளவு தைரியம் இருக்கா என்று விஷாலை அழைத்து வான்மதியின் அண்ணானை கடத்திவைத்துக்கொண்டு, வான்மதிக்கு போன் செய்து, என் மருமகள் உடனே வீட்டுக்கு வரவேண்டும் இல்லை என்றால் உன் அண்ணன், வீட்டுக்கு வரமாட்டான் என மிரட்டுகிறாள். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X