ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 22ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

கெட்டிமேளம்: துளசி தியாவை நினைத்து வருத்தப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுகிறாள். பிறகு வெற்றிடம் எப்படியாவது தியாவை கண்டுபிடிங்க என்று சொல்ல வெற்றி தனக்கு தெரிந்த போலீஸ் நண்பனின் உதவியுடன் தியா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறான். கார் நம்பரை ட்ரேஸ் செய்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து தியாவை காப்பாற்றுகிறான். பின் துளசிக்கு போன் செய்து நான் தியாவை பார்த்து விட்டேன். தியா நன்றாக இருக்கிறாள் இன்னும் கொஞ்சே நேரத்தில் இரட்டு பேரும் வீட்டிற்கு வருகிறோம் என்று சொல்லிவிட்டு ஃபோனை வைக்கிறான். அந்த நேரம், மறைந்து இருந்த மீனாட்சி வெற்றியை தலையில் கட்டையால் தாக்குகிறாள், இதில் நிலை தடுமாறி வெற்றி மயங்கி விழுகிறான். வீட்டில், துளசி தியாவின் வருகைக்காக காத்திருக்கிறாள். ஆனால், நீண்ட நேரமாகியும் வெற்றி தியாவுடன் வராததால், என்ன ஆனது என்று தெரியாமல் ஏக்கத்துடன் இருக்கிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: வீரா. சொந்தரபாண்டி மாமா வீட்டிற்கு வந்து, அண்ணா, என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு, நி தான் என் மருமகள் என்று வீட்டுக்கு அழைத்து சொல்ல வேண்டும். அப்படி அவர் வராமல் நான் வீட்டிற்கு போக மாட்டேன் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். இன்றைய எபிசோடில், வீரா வாழ வரமாட்டேன் என்று சொன்னதால் சிவபாலன் வெளிநாடு கிளம்ப முடிவு எடுக்கிறான். வீட்டில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்ய சிவபாலன் தனது முடிவில் உறுதியாக இருக்கிறான்.

இதனால் முத்துப்பாண்டி இந்த விஷயத்தை இசக்கிக்கு ஃபோன் செய்து சிவபாலன் மும்பைக்கு போகிறான், எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை என்று சொல்கிறான். வீராவுக்கு இந்த விஷயம் தெரிய வர அவள் ஒரு மணி நேரம் டைம் கேட்கிறாள். சௌந்தரபாண்டியன் சிவபாலனை தடுத்து நிறுத்த மீண்டும் முயற்சி செய்கின்றனர். அடுத்ததாக சௌந்தரபாண்டி வீட்டுக்கு வரும் லேடி போலீஸ் வீரா கொடுத்த கேஸ் இன்னும் வாபஸ் வாங்காமல் இருப்பதால் கைது செய்ய வந்திருப்பதாக ஷாக் கொடுக்கின்றனர். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி வீரா கேசை வாபஸ் வாங்குவது தான் என்று சொல்ல சௌந்தரபாண்டி சமாதானம் பேச கிளம்பி வருகிறார். சண்முகம் தான் லேடி போலீஸ் வைத்து சௌந்தரபாண்டியை பயம் காட்ட வைத்தது என்பது தெரிய வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X