ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 29ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: நேற்றைய எபிசோடில் வெற்றி குடோனில் வைத்து மீனாட்சியின் அண்ணனை பார்த்து விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன பார்க்கலாம். வெற்றி மீனாட்சியின் அண்ணனை துரத்திச் செல்ல மறுபக்கம் மீனாட்சியின் கம்பல் எடுத்துக்கொண்டு தப்பி செல்கிறாள். வழியில் தன்னுடைய அண்ணனை தப்பிக்க வைத்து பிறகு வெற்றிடம் என்ன வெற்றி என்று கேட்க என்னையும் குழந்தையையும் கடத்தியது உங்க அண்ணன் தான் என்று சொல்ல மீனாட்சி அப்படியா என்று எதுவும் தெரியாதது போல நாடகமாடி அங்கிருந்து வெற்றியை அழைத்துச் செல்கிறாள்.
துளசி வெற்றிக்கு போன் போட்டு எங்க போனீங்க என்று கேட்க ஒரு முக்கியமான விஷயமாக வெளியே வந்திருப்பதாக சொல்கிறான். அடுத்ததாக மீனாட்சி வெற்றி உஷாராயிட்டான்.. அவன்கிட்ட இருந்து மாட்டிக்காம இருக்கணும் என்று திட்டமிடுகிறாள். பிறகு ரகுராம் புதிய வீட்டில் பாதி வேலை மட்டுமே முடிந்திருக்கும் நிலையில் வீட்டு கிரகப்பிரவேசம் நடத்தி விடலாம் என்று திட்டமிட வீட்டு வேலைகளையும் முழுசாக முடித்துவிட்டு கிரகப்பிரவேசம் செய்யுங்கள் முதலில் பணத்தை ரெடி பண்ணுங்க என்று புரோக்கர் சொல்லி விடுகிறார். இதனால் என்ன செய்வது என யோசித்து திட்டம் ஒன்றை தீட்டுகிறான்.
அடுத்ததாக பாட்டியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்ல பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். இதனால் பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்க அஞ்சலி மகேஷ் வீட்டில் என்னுடைய நகையெல்லாம் இருக்கு, அத போய் கொண்டு வரேன் என்று சொல்ல லட்சுமி வேண்டாம் அப்பாவோட இன்சூரன்ஸ் பணம் கொஞ்சம் இருக்கு அதை வைத்து பார்த்துக்கலாம் என்று சொல்கிறாள். பிறகு அஞ்சலி துளசிக்கு போன் போட்டு பாட்டிக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்ற விஷயத்தை சொல்கிறாள்.

அண்ணா சீரியலில், சண்முகம் பரணி ஊட்டி கிளம்பி செல்ல கனி ஸ்கூலுக்கு வந்து விடுகிறாள். பாண்டியம்மா எம்.எல்.ஏ-வை சந்தித்து பேச அவன் பணத்தை கொடுத்து கனியை கடத்துற வேலையை பாரு என்று சொல்கிறான். இசக்கி பாண்டியம்மா யாருடனோ பேசி கொண்டிருப்பதை கவனிக்கிறாள். அனால் முத்துப்பாண்டி அவங்க யார்கூடவாவது பேசிட்டு போறாங்க என்று சொல்லி கூட்டி சென்று விடுகிறான். அடுத்து ரவுடி ஒருவன் ஸ்கூலுக்குள் வந்து கனியிடம் உங்க அண்ணன் உன்னை ஊட்டி கூட்டிட்டு வர சொன்னதாக சொல்ல கனி எப்படி வருவது என்று கேட்கிறாள். வெளியே ஆட்டோ இருக்கு அதுல போய் ஏறிக்கொள்ள என்று சொல்கிறான்.
கனி, ரத்னா, அறிவழகனுக்கு தெரியாமல் ஓடி போய் ஆட்டோவில் ஏறி கொண்டு அவர்கள் பார்க்காதவாறு மறைந்து கொள்கிறாள். வீரா, கனி ஆட்டோவில் இருப்பதை பார்க்க மீண்டும் கனி மறைந்து கொள்ள ஆட்டோ அங்கிருந்து கிளம்பி விடுகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











