ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 31ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
சென்னை: கெட்டிமேளம் சீரியலில், நேற்றைய எபிசோடில் சிவராமனின் இன்சூரன்ஸ் பணத்தை ரகுவரன் ஆகிய ஆட்டையை போட்டுவிடுகிறான். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம். இன்றைய எபிசோடில், லட்சுமி வீட்டில் சமைக்க தேவையான பொருட்கள் எதுவும் இல்லாததால் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வருகிறாள். அப்போது ரகுவரன் எல்லாருக்கும் வீட்டு கிரகப்பிரவேச பத்திரிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறான். லட்சுமி ரகுவரனிடம் பணம் கிடைத்து விட்டதா என்று கேட்க ரகுவரன் ஒரு இடத்துல சொல்லி வைத்திருந்தேன் கிடைத்துவிட்டது என்கிறான்
பின், லட்சுமி மளிகை கடைக்கு செல்ல மளிகை கடைக்காரர் கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுத்தால் மளிகை சாமான் தர முடியாது என்று மறுத்து விட லட்சுமி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறாள். இதையடுத்து, கேட்டரிங் வேலை ஒன்று இருப்பதாகவும் அதை செய்தால் நீ கேட்ட பணம் கிடைக்கும் என்று சொல்ல லட்சுமி கண்டிப்பாக செய்கிறேன் என்று சொல்கிறாள். பிறகு லட்சுமி திரும்பி பார்க்க முருகனின் அம்மா அங்கே நிற்க என் புள்ளைங்க 30 வருஷமா நீ வளர்த்து இருக்க உனக்காக நானும் ஏதாவது செய்யணும் நானும் உன்னோட வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறாள்.

அண்ணா: கனி காணாமல் போன விஷயம் அறிந்து குடும்பத்தினர் பதறிய நிலையில் இன்று நடக்கப்போவதை பார்க்கலாம். சண்முகம், பரணி இருவரும் இளநீர் குடிக்க கீழே இறங்குகின்றனர், அப்போது ஒரு பைத்தியக்காரன் இந்த பக்கமா போகாதீங்க, வந்த வழியே திரும்பி போங்க என்று சொல்ல இருவரும் ஏன் இப்டி சொல்றாரு என்று குழப்பம் அடைகின்றனர்.
அடுத்து கனி அவ அண்ணன் கூட போய் இருக்கணும் என்று பாண்டியம்மா கிளப்பி விட, ரத்னா, பரணிக்கு போன் போட்டு விசாரிக்க கனி எங்க கூட வரவில்லை என்கிறாள்
உடனே பாண்டியம்மா சரி விடுங்க எங்க போய் இருக்க போறா? இங்க தான் எங்கயாச்சும் பக்கத்துல போய் இருப்பா என்று சொல்கின்றனர். மேலும் வைஜெயந்தி, கனியை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எல்லாருக்கும் எழுகிறது. வைஜெயந்தியை சந்தித்து விசாரிக்க அவள் எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்கிறாள். இங்கே எம்.எல்.ஏ-வின் மனைவி கனியிடம் அமைதியா இரு.. இல்லனா உன்னை கொல்ல கூட தயங்க மாட்டோம் என்று மிரட்டுகிறாள்.

பாரிஜாதம்: பாரிஜாதம் சீரியலில் நேற்றை எபிசோடில் வர்ஷினியின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என திட்டம் போடும் சிந்தாமணி. அவளது ஹேண்ட் பேகில் பிரக்னசி கிட்டை வைத்து அனைவர் முன்னிலையில் அவளை அவமானப்படுத்தி கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடுகிறாள். அவள் நினைத்தது போல, வர்ஷினியின் காலை தடுத்துவிட, அவள் பேகில் இருக்கும பிரக்னஷி கிட் வெளியே வந்து விழுகிறது. அதைப்பார்த்த சுபத்ரா கோவப்பட்டு திட்டுகிறாள். இதையடுத்து, இசை மற்றும் ராகவ் இருவரும் அந்த பகுதியில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று பிரக்னஷி கிட்டை யார் வாங்கியது என்று பார்க்க அதை சிந்தாமணி வாங்கியது தெரியவருகிறது. அந்த வீடியோவை இசை சுபத்ராவிடம் காட்டி தனது தங்கை எந்த தவறு செய்யவில்லை என்பதை நிரூபிக்கிறாள்.


Click it and Unblock the Notifications











