ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 3ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!
கெட்டிமேளனம்: கண் விழித்த துளசி பாட்டி, எதிரில் மகேஷ் இருப்பதை பார்த்து அதிர்ச்சியும் கோபமும் அடைகிறாள். என் புள்ளைய என்னடா பண்ண என்று சத்தம் போட கத்த எல்லாரும் அங்கு வந்து விடுகின்றனர். பின் பாட்டி மயங்கி விட, டாக்டரை வரவைத்து பரிசோதனை செய்ய அவங்க கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருவதாக சொல்ல மகேஷ் டென்ஷன் ஆகிறான். உடனே, லட்சுமி அப்போ அவங்களை எங்க வீட்டிற்கு கூட்டிட்டிக்கிட்டு போகலாமா என்று கேக்க. இல்ல அவங்க இந்த வீட்டில் இருக்கும் போது நிறைய நினைவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கு. அதனால் இங்கேயே இருந்து ட்ரீட்மெண்ட் எடுக்கட்டும் என்கிறார்.
மகேஷை பார்த்த டாக்டர், அவங்க உங்களை தான் முதலில் பார்த்து இருக்காங்க. உங்கள பார்த்த பயத்தில் தான் மயங்கி இருக்காங்க என்று சொல்ல, மகேஷ் இல்ல அவங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அதனால் என்ன பார்த்ததும் ஏதோ சொல்ல வந்தாக என்று சமாளிக்கிறான். இதனால், பாட்டி உயிரோடு இருந்தால் ஆபத்து என்று நினைக்கும் மகேஷ் பாட்டியை கொல்ல திட்டம் போடுகிறான். பாட்டி ரூமில் இருந்து அனைவரையும் அனுப்பிவிட்டு, மகேஷ் பாட்டிக்கு ஏறும் டிரிப்ஸ்-ல் விஷ மருந்தை கலக்கிறான். கொஞ்ச நேரத்தில் பாட்டிக்கு பிக்ஸ் வர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். டாக்டர் வீட்டுக்கு வந்து பரிசோதனை செய்து விட்டு மருந்தில் விஷம் கலுந்து இருப்பதை சொல்கிறார்.

அண்ணா: அறிவழகன் வழக்கில் இருந்து வெளியே வந்ததால், அனைவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வேனில் வருகின்றனர். அவர்களை தீர்த்துக்கட்ட நினைக்கும் சௌந்தரபாண்டியன், சண்முகம் குடும்பத்தினர் வந்த வேனில் பாம் வைக்கிறான். கோவிலில் இருந்து அனைவரும் வீட்டுக்கு கிளம்ப பாக்கியம், பரணி, முத்துப்பாண்டி ஆகியோரும் இதே வேனில் ஏற சௌந்தரபாண்டி பதறுகிறார். பாண்டியம்மாவையும் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி செல்கின்றனர். சௌந்தரபாண்டி தனது குடும்பத்தாரை காப்பாற்ற பின்னாடியே வேனை பின் தொடர்ந்து செல்கிறார். பாண்டியம்மா பயத்தில் வேனில் பாம் இருப்பதாக சொல்ல சண்முகம் குடும்பத்தினர் அதை நம்ப மறுக்கின்றனர். ஒரு வழியாக வீடு வந்து இறங்க ஆரத்தி எடுத்து அறிவழகன் ரத்னாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர். பாண்டியம்மா பயத்தில் நடுங்கியபடி சௌந்தரபாண்டி அருகே செல்கிறாள்.

பாரிஜாதம்: இசை தனது தங்கையின் கையில் ராகவின் பெயரை பச்சை குத்தி இருப்பதை பார்த்து, கடைசி வரைக்கும் அவன் கூட தான் வாழப் போகிறாய் என நினைத்து, பச்சை குத்தி இருக்க. அவர் இல்லாமல் நீ எப்படி இருப்ப, என இசை கேட்கிறாள். இல்ல அக்கா, விஷால் உனக்கானவர். அவரை பார்த்ததுமே உண்மையை சொல்லி இருக்க வேண்டும். ஆனால், நான் தான் உண்மையை சொல்லாமல் மறைத்துவிட்டேன். அதற்கான தண்டனையாக இதை நினைத்துக்கொள்கிறேன். சுபத்ரா அம்மா தான் உன்னுடைய அத்தை. நீ விஷாலை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழனும் அதை நான் பாக்கணும் அக்கா. இந்த விஷயத்தை நீ யாருகிட்டயும் தயவு செய்து சொல்லாதே, நல்லபடியா திருமணத்தை செய்து இருக்க வேண்டும் வேண்டும். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று எனக்கு சத்யம் செய்து கொடு என கேட்கிறாள். இதனால், இசை என்ன செய்வது என்றே தெரியாமல் அழுதபடி இருக்கிறாள்.


Click it and Unblock the Notifications











