ஜீ தமிழ் சீரியல்கள் அக்டோபர் 10ந் தேதி: கெட்டி மேளம் முதல் அண்ணா வரை.. இன்றைய எபிசோட் விமர்சனம்!

கெட்டிமேளம்: மகேஷ் அஞ்சலிக்கு போன் செய்து நான் ஆபிஸ் போயிட்டு வரேன். யார்கிட்டயும் எதையும் உளறிடாமல் இரு என்று சொல்கிறான்.பிறகு மகேஷ்க்கு ரவுடிகளிடம் இருந்து போன் வர அஞ்சலி பக் மூலமாக அதை ஒட்டு கேட்கிறாள். அந்த அம்மாவுக்கு திடீர்னு உடம்பு முடியாமல் போய்டுச்சு, நைட் உங்களுக்கு போன் பண்ணோம். போன் எடுக்காததால் பக்கத்துக்கு ஹாஸ்பிடலில் இருந்து நர்ஸை அழைத்து வந்து ட்ரீட்மெண்ட் கொடுத்தோம் என்று சொல்கின்றனர். இதை கேட்ட மகேஷ் கோபமாகி ரவுடிகளை திட்டிவிட்டு நேராக அங்கு செல்ல, அஞ்சலி துளசிக்கு தகவல் கொடுத்து விட்டு மகேஷை பின்தொடர்ந்து செல்கிறாள். குடோனை நெருங்கும் வேளையில் மகேஷை மிஸ் செய்து விடுகிறாள் அஞ்சலி.

இங்கே குடோனுக்குள் வந்த மகேஷ் முருகனின் அம்மாவை பார்த்து என்ன பயம் விட்டு போச்சா என்று கோபப்பட அந்த அம்மா எதையோ சொல்ல வருகிறார். உடனே மகேஷ் கட்டை அவிழ்த்து விட சொல்கிறான். அவர் என்னை விட்டுடு என்று கெஞ்சுகிறார்.
மகேஷ் அப்படியெல்லாம் விட முடியாது, நீங்க சாகுற வரைக்கும் என்கூட தான் இருக்கனும் என்று சொல்கிறான். அஞ்சலி குடோனை கண்டுபிடித்து மறைந்திருந்து நடப்பதை பார்க்க ரவுடி ஒருவன் அஞ்சலியை பார்த்து விடுகிறான்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

அண்ணா: இசக்கியின் குழந்தையை கொஞ்சிய சண்முகம், சௌந்தரபாண்டியிடம் இந்தாங்க உங்க பேத்தியை பாருங்க என்று சொல்லி ஆசீர்வாதம் செய்து தரையில் போட சௌந்தரபாண்டி என் பேத்தி எதுக்குடா தரையில போடுற என்று கையில் தூக்கி கொஞ்சம் பாண்டியம்மா இதை பார்த்து கடுப்பாகிறாள். அதைத்தொடர்ந்து இசக்கி வீட்டுக்கு அழைத்து வந்து தொட்டில் கட்டி குழந்தையை தொட்டிலில் போட்டு என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க சண்முகம் சூடாமணி என பெயர் வைக்கலாம் என்று சொல்கிறான். சௌந்தரபாண்டி என் பேத்திக்கு எதுக்கு அந்த பேர் வைக்கணும்? வேற ஏதாச்சும் நல்ல பேர் வைக்கலாம் என்று சொல்ல சண்முகம் இசக்கி எங்க வீட்டு பொண்ணு குழந்தைக்கு நாங்க தான் பேர் வைப்போம் என்று உறுதியாக சொல்ல கடுப்பாகிறார். ரத்னாவும் அறிவழகனும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து சிவபாலன் பீல் செய்ய கூடிய சீக்கிரம் வீரா உன்னை புரிஞ்சிப்பா என்று ஆறுதல் சொல்கின்றனர். அதன் பிறகு பரணி இதை பார்த்து பீல் செய்ய சண்முகம் கூடிய சீக்கிரம் உனக்கு குழந்தை பிறக்கும் என்று சொல்ல பரணியும் சந்தோஷம் அடைகிறாள்.

Zee Tamil TV Serials Getti Melam Anna
Photo Credit:

பாரிஜாதம்: ருக்மணியும் மங்காவும் சேர்ந்து வர்ஷினி மருமகளா போகாத அந்த வீட்டிற்கு இசையும் போக கூடாது என்று முடிவெடுத்து அவளுக்கு காது கேக்காது என்ற உண்மையை உடைக்க ஒரு லெட்டருடன் வருகின்றனர். அடுத்து, இசை கழுத்தில் நகை எதுவும் இல்லை என அவமானப்படுத்தி பேச தொடங்குகின்றனர். இதனால் சுப்ரஜா இசையை ரூமுக்கு அழைத்து சென்று தனது நகைகளை அணிவித்து அழைத்து வந்து அனைவரது வாயையும் அடைக்கிறாள். மறுபக்கம் விஷால் எழுதி வைத்த லெட்டரை படித்துவிட்டும் எப்படி இவள் இங்கே வந்தால் என தெரியாமல் விஷால் கோவத்தோடு இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X