»   »  வானவில் டிவியில் ஓம் நமோ நாராயணா

வானவில் டிவியில் ஓம் நமோ நாராயணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சிகளில் புராண தொடர்களுக்கு தனி வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் 'ஓம் நமோ நாராயணா' என்ற தொடர் வானவில் டிவியில் ஞாயிறு தோறும் காலை 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் தேவபூதிக்கு மகனாக நாராயணனின் அவதாரமாக கபிலன் பிறந்து பெரியவனாகி மக்களுக்கு ஞானத்தை பற்றியும் நாட்டின் நலனை பற்றியும் அனைவருக்கும் எடுத்து சொல்கிறார்.

மக்கள் அனைவரும் அவர் பேச்சை கேட்கின்றனர். கபிலர் முனிவரை பற்றி கேள்விபட்டு பல முனிவர்கள் வந்து அவரை பாராட்டுகின்றனர்.

அனுஷ்யாவின் திருமணம்

அனுஷ்யாவின் திருமணம்

இதில் ஒரு முனிவர் நாராயணரால் அனுப்பியவர் அவர் தான் தேவபூதியின் மகள் அனுஷ்யாவை திருமணம் செய்ய வந்தவருக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இருந்தாலும் ஆண்டவன் கட்டளையை ஏற்றுவந்துள்ளார்.

ஆண்டவன் கட்டளை

ஆண்டவன் கட்டளை

இந்த செய்தியை கேள்விபட்டு அனைவரும் சந்தோஷப்பட்டு மகள் அனுஷ்யாவிடம் சொல்ல அவள் தனக்கு திருமணம் வேண்டாம். எனக்கு தவம் ஒன்றே போதும் என்று பிடிவாதமாக இருக்கிறாள். பிறகு அனைவரும் அவளை சமாதானம் படுத்தி இந்த திருமணத்துக்கு ஒத்துக்கொள்ள வைக்கின்றனர் . திருமணம் நல்லபடியாக முடிகின்றது.

குடும்பத்தை விட்டு போகும் தந்தை

குடும்பத்தை விட்டு போகும் தந்தை

இந்த நிலையில் தேவபூதியின் கணவர் குடும்பத்தை விட்டு தவம் செய்ய போவதாக கூற தேவபூதி சம்மதிக்கவில்லை. கபிலர் தன் தாயிடம் தந்தை போகும் காரணத்தை பற்றி கூறுகிறாள். தந்தை குடும்பத்தை விட்டு போகிறார்.

கடுமையான தவம்

கடுமையான தவம்

இவரை தொடர்ந்து மகன் கபிலரும் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய திரும்பிவிடுகிறார். கடைசியாக தேவபூதியும் அவள் மகள் அனுஷ்யாவும் கடுமையான தவம் இருக்க, நாராயணன் அவர்களை ஆசிர்வாதம் செய்தாரா, போன தந்தையும் மகனும் என்ன ஆனார்கள்? இப்படி விறுவிறுப்பாக செல்கிறது.

English summary
Om Namo Narayanaya telecast on Vaanavil TV every Sunday 9 AM.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil