»   »  லண்டனுக்கு குடிபெயரும் புதிய தலைமுறை டிவி சரண்யா

லண்டனுக்கு குடிபெயரும் புதிய தலைமுறை டிவி சரண்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலின் செய்திவாசிப்பாளர் சரண்யா தனது கணவருடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளார். செய்தி வாசிக்காவிட்டாலும் லண்டனில் இருந்து தனது பணியை தொடர்வேன் என்று அறிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நட்சத்திர செய்திவாசிப்பளரும் நடிகையுமான சரண்யாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் வசிக்கும் அமுதன் என்பருடன் திருமணம் நிகழ்ந்தேறியுள்ளது.

இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிற்கு வந்த போது அமுதனை சந்தித்துள்ளார் சரண்யா. நட்பு காதலாகி இப்போது கல்யாணம் வரை வந்துள்ளது.

கலைஞர் டிவி, ராஜ் டிவி என சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொடங்கிய சரண்யா, ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி படத்தில் நடித்தார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக இணைந்தார்.

லண்டன் சரண்யா

லண்டன் சரண்யா

திருமணத்திற்குப் பின்னர் சரண்யா லண்டனில் செட்டில் ஆகப்போவதாக தகவல்கள் வெளியானது. அப்போ சரண்யாவை இனி புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளராக பார்க்க முடியாதா? என்பவர்களுக்காக ஒரு நல்ல செய்தி.... சரண்யா... லண்டனில் இருந்து தனது பணியை தொடர இருக்கிறாராம்.

பயணங்களில் நகர்கிறது.

பயணங்களில் நகர்கிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாங்கள் அறிமுகமானோம். இந்த ஆண்டு ஆகஸ்டில் எங்கள் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு லண்டன், இலங்கை, இந்தியா என்று பயணங்களிலேயே நாட்கள் நகர்கிறது.

இலங்கைத் தமிழர்

இலங்கைத் தமிழர்

லண்டனில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு மனவளம் குறித்த ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் என் கணவர் இருக்கிறார். அவருடைய சொந்த ஊர் இலங்கை. அவர் ஒரு சிறந்த மிருதங்க இசைக் கலைஞர். யோகா மற்றும் தியானக் கலையிலும் அவர் நிபுணர்.

லண்டனில் சரண்யா

லண்டனில் சரண்யா

2016 ஜனவரியில் கணவரோடு லண்டனில் குடிபெயர திட்டமிட்டுள்ளேன். இசை கச்சேரி, பிசினஸ் என்று அவ்வப்போது சென்னைக்கு வருவோம். செய்தி வாசிப்பாளராக இனி மக்களோடு இணைந்திருக்கும் வாய்ப்பு குறைவுதான். அதுதான் எனக்கு கவலையளிப்பதாக உள்ளது. செய்தி வாசிக்காவிட்டாலும் தொடர்ந்து புதிய தலைமுறை சேனலின் பங்களிப்பாளராகவே இருப்பேன். அங்கே இருந்துகொண்டே சேனலுக்கு என்னால் முடிந்த விஷயங்களைச் செய்ய விரும்புகிறேன்" என்கிறார் சரண்யா.

அதுவரைக்கும் ரசிகர்கள் உங்களை மிஸ் பண்ணுவாங்களே சரண்யா!

English summary
Puthiya Talaimurai TV Saranya is relocating to London. She is settling with her husband.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil