மே தின சிறப்பு திரைப்படங்கள்...எந்த டிவி.,யில் என்ன படம் பார்க்கலாம் ?

சென்னை : மே தினத்தை கொண்டாட கோலிவுட் இப்போதே தயாராகி வருகிறது. பட தயாரிப்பாளர்கள் பலர் முக்கிய அறிவிப்பை மே 1 ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்து, அதற்காக தயாராகி வருகின்றனர்.

டிவி சேனல்களும் வழக்கம் போல் போட்டி போட்டிக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளை அறிவித்து வருகின்றனர். டிஆர்பி.,யை உயர்த்துவதற்காக பல சேனல்கள் பல ஹிட் படங்களை வாங்கி, அதை ஒளிபரப்பு செய்ய உள்ளன. இதனால் தங்களின் ஃபேவரைட் ஹீரோக்களின் படங்கள் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அட செம கொண்டாட்டம் தான்

அட செம கொண்டாட்டம் தான்

உழைப்பாளர் தினமான மே 1 ம் தேதி எந்தெந்த டிவி சேனல்களில் என்ன சிறப்பு திரைப்படம் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது என்ற விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதன்படி அஜித்தின் பிறந்தநாள், உழைப்பாளர் தினம் என டபுள் டமாக்காவாக ரசிகர்களை கொண்டாட வைப்பதற்காக ஜீ 5 சேனல் அஜித் லேட்டஸ்டாக நடித்த வலிமை படத்தை ஒளிபரப்ப உள்ளது.

இந்த படங்களும் வருகிறதா

இந்த படங்களும் வருகிறதா

சன் டிவியில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. விஜய் டிவியில் சிம்பு நடித்த மாநாடு படம் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த மூன்று படங்களும் தியேட்டர், ஓடிடி என அனைத்திலும் மாஸ் ஹிட் அடித்த படங்கள். ரசிகர்களின் மனம் கவர்ந்து, நல்ல வசூலையும் பார்த்த படங்கள். மே தினத்தில் இந்த படங்கள் டிவி.,க்கே வருவது ரசிகர்களை இன்னும் உற்சாகமடைய வைத்துள்ளது.

விளம்பரமே வந்துடுச்சா

விளம்பரமே வந்துடுச்சா

வலிமை படம் ஜீ5 தமிழ் சேனலில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது தொடர்பான விளம்பரம் ஏற்கனவே வெளியிடப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் எதற்கும் துணிந்தவன், மாநாடு படங்களின் விளம்பரங்களும் வெளியிடப்பட உள்ளதாம்.

கோலிவுட் அறிவிப்புக்கள்

கோலிவுட் அறிவிப்புக்கள்

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஆகியவற்றை வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். அதே போல் கமல் நடித்துள்ள விக்ரம் படத்தின் ஃபர்ஸ் சிங்கிளை மே 1 ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தலைவர் 169, தளபதி 66, சூர்யா 41 போன்ற அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் முக்கிய அறிவிப்புக்களும் மே 1 ம் தேதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X