Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஓவியா ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. மீண்டும் சின்னத்திரைக்கு வராங்க.. என்ன நிகழ்ச்சி தெரியுமா?
சென்னை : நடிகை ஓவியாவிற்கு படவாய்ப்புகள் இல்லையென்றாலும் அவருக்கான கிரேஸ் ரசிகர்களிடம் கொஞ்சமும் குறையவில்லை.
பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற அவர், தன்னுடைய ஆட்டத்தின்மூலம் எராளமான ரசிகர்களை பெற்றிருந்தார்.
இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து கோலிவுட்டில் ஒரு வலம்வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
The Warrior Review: சாதுவா இருந்தா டாக்டர்.. டெரரா மாறுனா போலீஸ்.. தி வாரியர் விமர்சனம்!

நடிகை ஓவியா
நடிகை ஓவியா களவாணி படத்தின்மூலம்தான் தமிழில் என்ட்ரி கொடுத்தார். விமலுடன் ஓவியா ஜோடி சேர்ந்து நடித்திருந்த அந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் ஓவியா. முன்னதாக மலையாளத்தில் கங்காரு என்ற படத்தில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடி
இந்தப் படத்தின் மூலமே அவருக்கு களவாணி படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. களவாணி படம் கொடுத்த ஹிட்டை தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்திருந்தார். குறிப்பாக சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த மெரினா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை வசப்படுத்தினார்.

கிளாமருக்கு தாவிய ஓவியா
இந்தப் படங்களை தொடர்ந்து கிளாமர் பக்கம் சென்ற ஓவியா, கமல்ஹாசனின் மன்மதன் அம்பு படத்திலும் கிளாமர் ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில், அந்த இடைப்பட்ட காலத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ்சீசன் ஒன்றில் போட்டியாளராக பங்கேற்றார். இதன்மூலம் ஏராமான ரசிகர்கள் இவருக்கு கிடைத்தனர்.

ஏராளமான ரசிகர்கள்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. சில படங்களில் நடித்த இவரின் நடிப்பில் அடுத்ததாக பூமர் அங்கிள் படம் வெளியாகவுள்ளது. இவர் அதிகமான படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

மீண்டும் சின்னத்திரை
ஓவியாவும் அதற்காகத்தான் காத்திருக்கிறார். இதனிடையே தற்போது மீண்டும சின்னத்திரையில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஓவியா நடுவராக பங்கேற்கவுள்ளார்.

நடுவராக ஓவியா
இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட்டிற்கான சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் ஓவியாவுடன் பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகைகள் சினேகா மற்றும் சங்கீதா ஆகியோரும் நடுவர்களாக இணைந்துள்ளனர். இந்நிலையில் ஓவியாவும் இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் கவனத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.