»   »  'கமல் சார் இஸ் ஆசம்... ஐ லவ் ஹிம்' - ஓவியா நெகிழ்ச்சி!

'கமல் சார் இஸ் ஆசம்... ஐ லவ் ஹிம்' - ஓவியா நெகிழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று ஓவியா உட்பட இதற்குமுன் வெளியேறிய போட்டியாளர்களில் நடிகர் ஶ்ரீ, நமீதா தவிர அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபடி ப்ளாஸ்மா திரையின் மூலம் மேடையில் இருக்கும் கமல்ஹாசனுடன் போட்டியாளர்கள் உரையாடினர். தங்களது பிக்பாஸ் வீட்டு அனுபவங்களையும், வெளியேறிய போட்டியாளர்கள் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.

oviya on stage -biggboss grand finale update

பிறகு, எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் வரிசையாக கமல் இருக்கும் மேடைக்கு வந்து அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். வையாபுரி, காஜல் உள்ளிட்டோர் கமலுடன் கைகுலுக்கிக் கொண்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், மக்களின் விருப்பதோடு இல்லாமல் தானாக வெளியேறிய பரணி மற்றும் ஓவியா ஆகியோரை மேடைக்கு அழைக்க கமல் ரசிகர்களின் விருப்பத்தைக் கேட்டார்.

ரசிகர்களின் கரகோஷத்தோடு ஓவியா மேடைக்கு வந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியினால் பெரிய ரசிகர்கள் பட்டாளமே கிடைத்திருக்கிறது என நடிகர் பரணி கூறினார். 'மலேசிய அரசு தனக்கு மலேசிய மக்கள் நாயகன்' எனும் விருது வழங்கப்பட்டிருப்பதாகவும், அதை வாங்கப் போகாமல் இங்கே வந்திருக்கிறேன்' எனப் பெருமையாகக் கூறினார்.

'நான் உள்ளே இருக்கும்போது என்னை யாருக்கும் பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா எல்லோருக்கும் பிடிச்சிருக்கு. தாங்க்யூ சோ மச். கமல் சார் இஸ் ஆசம். ஐ லவ் ஹிம்' எனப் பேசினார்.

'கொக்கு நெட்டக் கொக்கு...' பாடலை இங்கேயும் பாடி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார் ஓவியா.

English summary
The grand finale show of the biggboss show is currently airing. All of the outgoing contestants, except sri and namitha were present on the final day. Oviya sings 'kokku netta kokku' song in biggboss stage.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil