பாண்டியன் ஸ்டோர்ஸில் திடீர் திருப்பம்... லட்சுமி அம்மாவை சந்தித்த தனம்

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் டாப் ரேட்டிங் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப சென்டிமென்ட்டை மையமாகக் கொண்ட இந்த சீரியல் பெரும்பாலானவர்களின் ஃபேவரட் சீரியலாக இருந்து வருகிறது.

இந்த சீரியலில் நடிப்பவர்கள் கேரக்டரோடு ஒன்றி போய், யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துவதால் அவர்களின் நிஜ பெயர்களை மறந்து, கேரக்டர்களின் பெயர்களை சொல்லியே ரசிகர்கள் கூப்பிடத் துவங்கி விட்டனர். இந்த சீரியலில் அனைத்து கேரக்டர்களும் சம அளவு முக்கியத்துவம் மிகுந்ததாக காட்டப்படுவதும் இந்த சீரியலின் மற்றொரு பிளஸ் ஆகும்.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

கூட்டுக் குடும்ப உறவு, அண்ணன் - தம்பி பாசம் என கலகலப்பாக சென்று கொண்டிருந்த சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு பிறகு கதையே மாறியது. சண்டை, அழுகை என்றே சென்று கொண்டிருந்தது. கண்ணன் மீண்டும் குடும்பத்துடன் இணைவாரா, மூர்த்தியும் குடும்பத்தினர்களும் கண்ணனை ஏற்பார்களா, அடுத்து என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.

உயிரிழந்த லட்சுமி அம்மா

உயிரிழந்த லட்சுமி அம்மா

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென கண்ணணின் அம்மா லட்சுமி அம்மா உயிரிழப்பதாக காட்டப்பட்டது. அதுவும் கண்ணன் வேலை விஷயமாக வெளியூர் சென்ற சமயத்தில், அவரது அம்மா இறந்து விடுகிறார். அம்மாவின் முகத்தை பார்க்க கண்ணன் வருவாரா என்ற கேள்வியோடு செம சஸ்பென்ஸ், சென்டிமென்டாக கொண்டு சென்றார்கள். இதனால் இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் பயங்கரமாக எகிறி, முதலிடத்திற்கு சென்றது.

புதிய வில்லிகளா

புதிய வில்லிகளா

அதற்கு பிறகு கண்ணனை குலதெய்வம் கோயிலுக்கு அழைக்க மூர்த்தி ஓகே சொல்வதை போல் ப்ரோமோ காட்டினார்கள். இதனால் கண்ணன் மீண்டும் குடும்பத்துடன் சேர போகிறார். தனத்திற்கு குழந்தை பிறந்ததும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிய போகிறதா என ரசிகர்கள் கேட்க துவங்கினர். ஆனால் அடுத்த ட்விஸ்டாக கஸ்தூரி மற்றும் மல்லி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பழிவாங்க புதிய வில்லிகளாக மாறுவதை போல் காட்டப்படுகிறது.

கண்ணனை சந்தித்த லட்சுமி அம்மா

கண்ணனை சந்தித்த லட்சுமி அம்மா

இந்த சீரியலில் அம்மா இறக்கும் காட்சிக்காக கண்ணன் ரோலில் நடிக்கும் சரவணன் விக்ரம் நிஜத்திலேயே மொட்டை அடித்துக் கொண்டார். இதனை லட்சுமி அம்மா கேரக்டரில் நடித்த ஷீலா, நேரில் சென்று கண்ணனை பாராட்டினார். இந்த ஃபோட்டோக்கள் வெளியாகி செம வைரலாகின. லட்சுமி அம்மா கேரக்டரை சீரியலில் இருந்து நீக்கியதற்கு ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தனம் – லட்சுமி அம்மா சந்திப்பு

தனம் – லட்சுமி அம்மா சந்திப்பு

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கியமான தனம் கேரக்டரில் நடிக்கும் சுஜிதா தனுஷ், ஷீலாவை அவரது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்துள்ளார். ஷீலாவை கட்டிப்பிடித்து அன்பை பொழிந்தது, அவர் கையால் சமைத்து சாப்பிட்டு, அவருடன் சுஜிதா இருக்கும் ஃபோட்டோக்கள் செம வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X