அச்சு அசலாய்...முழுசாய் நயன்தாராவாக மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் 5 இடம் பிடித்த சீரியல்களில் இதுவும் ஒன்று.

பாசம், குடும்ப உறவுகள், சென்டிமென்ட்டுடன் விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இதில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அந்தந்த கதாபாத்திரங்களாகவே டிவி சீரியல் ரசிகர்கள் மனங்களில் இடம்பிடித்துள்ளனர். சினிமா நடிகர், நடிகைகளுக்கு இருப்பது போலவே தற்போது சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

டிவி பிரபலங்கள் என்ன செய்தாலும், சோஷியல் மீடியாவில் என்ன பதிவிட்டாலும் அதை வைரலாக்கி விடுகின்றனர். அப்படித்தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வரும் காவியாவின் பதிவுகளையும் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

சித்ராவிற்கு பதில் காவியா

சித்ராவிற்கு பதில் காவியா

முல்லை கேரக்டரில் நடித்து தான் பிரபலமானதுடன், இந்த சீரியலையும் டாப் ரேட்டிங்கில் கொண்டு வைத்தவர் நடிகை விஜே சித்ரா. இவர் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட பிறகு, அவரின் கேரக்டரில் காவியா மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் இவரை ஏற்காத ரசிகர்கள், தற்போது முல்லையாகவே பார்க்க துவங்கி விட்டனர்.

பாரதி கண்ணம்மா நடிகையா

பாரதி கண்ணம்மா நடிகையா

காவியா, சீரியலுக்கு ஒன்றும் புதிதல்ல இதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான். அதற்கு பிறகு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க காவியாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.

நயன்தாராவாக மாறிய காவியா

நயன்தாராவாக மாறிய காவியா

சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவான காவியா, அடிக்கடி மாடர்ன் உடையில் அசத்தும் தனது ஃபோட்டோக்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது நயன்தாராவை போல் மாறிய காவியா வெளியிட்டுள்ள வீடியோ வேகமாக பரவி வருகிறது.

நெற்றிக்கண் நயன்தாரா

நெற்றிக்கண் நயன்தாரா

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா சமீபத்தில் நடித்து வெளியான படம் நெற்றிக்கண். இதில் பார்வையில்லாத பெண்ணாக நயன்தாரா நடித்திருப்பார். ஓடிடி.,யில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நயன்தாராவின் நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரீல் வீடியோ

இந்த படத்தில் வில்லனிடம் நயன்தாரா பேசும் காட்சியை தான் தற்போது காவியா நடித்து, வீடியோவாக வெளியிட்டுள்ளார். மேக்அப், டிரெஸ், கண்ணில் லென்ஸ் என அச்சு அசலாக நயன்தாரா போலவே வசனம் பேசி, நடித்து காட்டிய ரீல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்

குவியும் பாராட்டுக்கள்

அத்துடன் தனது ஃபேவரைட் நடிகையான நயன்தாராவை போல் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ நயன்தாரா ரசிகர்களையும், காவியாவின் ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. காவியாவின் நடிப்பு திறமையையும் பலர் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X